நான் மனமுவந்து கொடுப்பதை நீ பெற்றுக் கொள்…! என்றார் ஈஸ்வரபட்டர்

life motto

நான் மனமுவந்து கொடுப்பதை நீ பெற்றுக் கொள்…! என்றார் ஈஸ்வரபட்டர்

 

“உயிரை மதிக்காது…” நாம் வேதனை உணர்வை எடுத்தால்
1.நீ எதை நினைத்தாயோ நீ அதுவாகு…! என்று உணர்வை வளர்த்து
2.அடுத்து நம்மைப் பாம்பினமாக மாற்றிவிடுகின்றது நம் உயிர்.
3.மறந்து விடாதீர்கள்…! இதை எல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

அவர் காட்டிய வழியில் நாம் செயல்பட வேண்டிய முறைகளை உங்களுக்குள் அந்த அருள் ஞானத்தைப் பதிவு செய்கின்றேன்.

பிறருடைய கஷ்டங்களைக் கேட்டுணர்ந்தால் அது நம் உடலுக்குள் அணுவாக மாறுவதற்கு முன் அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து அந்தத் தீமை புகாது அதை அடக்கிப் பழக வேண்டும்.

“அத்தகைய சக்தி பெறுவதற்கே” உங்களுக்குத் திரும்பத் திரும்ப பல வழிகளிலும் தெளிவாக உணர்த்தி அதை நுகரச் செய்கின்றோம்.

உபதேசிக்கும் போது..
1.ஞானிகளின் உணர்வை நான் (ஞானகுரு) வேகமாகச் சொல்வதும்
2.சில நேரங்களில் எளிதாகச் சொல்வதும்… மெதுவாகச் சொல்வதும்…
3.நீங்கள் கேட்டுணர்ந்து வரப்படும் பொழுது ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் ஈர்ப்புடன் பதிவாக வேண்டும் என்று
4.முதலில் மெல்லச் சொல்லி… அதன் பின் சிறுகச் சிறுகச் சிறுக உயர்த்தி…
5.அந்த உணர்வுகள் உங்கள் ஈர்ப்புக்குள் புகப்பட்டு… அந்த உணர்வின் கருவாக வருவதற்குத்தான் “வேகமாகச் சொல்வேன்…!”

நீங்கள் எம்மை “உற்று நோக்கும் பொழுது” உணர்வின் தன்மை அந்தக் கருவின் தன்மை அடைய வேண்டும்…! என்ற நோக்கத்துடன் தான் அவ்வாறு செய்வது.

அந்த அணுவின் கருவாக… அறிவின் உணர்வின் தன்மை விளைந்து விட்டால் அந்த (உபதேசங்கள்) உணர்ச்சியின் தன்மை உங்களை அந்தச் செயலுக்குக் கொண்டு வந்துவிடும். அதற்கே நான் இதைச் செய்வது.

சாமி வேகமாகச் சொல்கின்றார்… என்னால் அர்த்தம் புரியவில்லை…! என்றால்
1.அதைப் பெற வேண்டும்…
2.அதை அறிய வேண்டும்…
3.அந்த உணர்வை நாம் பெற வேண்டும்… என்ற ஏக்கத்துடன் இருந்தால்
4.அந்த உணர்வுகள் உங்களுக்குள் அது அணுக் கருவாக மாறிவிடுகின்றது.

பின் அணுவாக உங்களுக்குள் மாறிவிட்டால் அது தன் உணவுக்காக ஏங்கும் பொழுது.. “உணர்ச்சிகள்” உங்களுக்குள் அந்த எண்ணங்களைக் கொண்டு செயலாக்கும் வன்மை பெறுகின்றது.

எமது குருநாதர் இப்படித்தான் செய்தார்…! பாஷை புரியாத நிலையில் ஏதோதோ சொல்வார். என்னென்னமோ சொல்வார்…! அது எனக்குத் தெரியாது.

1.தெரியாது…! என்று சொன்னாலும் வம்பு..
2.தெரியும்…! என்று சொன்னாலும் நீ எப்படித் தெரிந்து கொண்டாய்…? என்பார்.

இப்படி வழக்கத்திற்கு மாறாக நிலைகள் செய்து அந்த உணர்வைத் தனக்குள் செய்யச் செய்து
1.“சக்தி வாய்ந்த உணர்வை” அவர் எனக்குள் போதிக்கப்படும் பொழுது
2.அந்த உணர்வுகள் வளர்ந்த பின் “இப்பொழுது எப்படி இருக்கிறது…?” என்று கேட்பார்.

தாங்க முடியாத கஷ்டம் வரும் பொழுது… எனக்குள் “மறைமுகமாக” சொல்வார். அதைச் சொல்லிவிட்டு
அதைப் பார்…
இதைப் பார்…
இப்படிப் பார்…
அப்படிப் பார்…! என்பார்.

என்னமோ சொல்கின்றார் என்ற நிலையில் அதை எண்ணும் பொழுது என்ன சொல்கிறார்…? என்று நான் நினைப்பேன்.

அப்படி நினைத்து விட்டால்… ஏண்டா… திருடா…?! நீ இதைத் திருடாமல் அதைத் திருடுகிறாயேடா…! நான் சொல்வதை விட்டுவிட்டு… “நீ எதை எதையோ (என்னமோ ஆகின்றது என்று) திருடிக் கொண்டிருக்கின்றாய்…!”

1.அதைத் திருடினால் நீ திருடனாகின்றாய்..
2.ஆனால் நான் சொல்லும் உயர்ந்த உணர்வின் தன்மையைப் பெற்றால்
3.நீ திருடனல்ல… என்னிடம் கேட்டு வாங்குகின்றாய்..
4.ஆகவே நான் கொடுக்கும் உணர்வின் தன்மையை நீ ஏங்கிப் பெறு…!

பிறர் சொல்வது போல் குருநாதர் சொல்வது அர்த்தமாகவில்லை…! அது அதாகின்றது… இதாகின்றது…! என்று நீ “திருட்டுத்தனமாக” உனக்குள் குறையின் உணர்வை எடுத்துக் கொள்கின்றாய்… அது உன் திருட்டுத் தனத்தைக் காட்டுகின்றது.

நான் கொடுக்கின்றேன்… நீ எடுத்துக் கொள்…!
1.கொடுப்பதை எடுப்பதை விட்டு விட்டு
2.கிடைக்காததை நீ எங்கேயோ எண்ணி நினைவைச் செலுத்துகின்றாய்

நான் “மனமுவந்து” கொடுக்கும் உணர்வை நீ நுகர்ந்தறிந்தால் அந்த உணர்வின் அறிவாக வரும். இதனின் உணர்வை உனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்…! என்று இப்படித்தான் அவருடைய சொல் செயல் இவை எல்லாம் எனக்குள் தெளிவாக்கிக் கொண்டு வந்தார்.

ஏனென்றால் எனக்குக் கல்வி அறிவு இல்லை. இருந்தாலும் “மூடனாக இருக்கும் நிலையில்… என் மூடத்தனத்தை நீக்கி…” அருள் ஞானத்தை எப்படி வளர்க்க வேண்டும்..? என்று குருநாதர் என்னை வளர்த்தார்.

அதன் வழிப்படித்தான் என் குரு எனக்குள் சொன்ன வழியில் தான் உங்களுக்குள்ளும் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன். அதன் வழியில் கடைப்பிடித்து வருவோருக்கு இந்த உணர்வுகள் சீராக வரும்.

Leave a Reply