ஞானிகளைப் பற்றிய உபதேசங்களைக் கேட்பதால் கிடைக்கும் பலன்கள்

Gnanaguru saamigal upadesam .

ஞானிகளைப் பற்றிய உபதேசங்களைக் கேட்பதால் கிடைக்கும் பலன்கள்

 

நமக்குள் எத்தனையோ பகைமை உணர்வுகள் உண்டு. பகைமை கொண்டோரைப் கண்ட பின் அந்த உணர்ச்சிகளின் எழுச்சிகள் தெரிகின்றது.

1.அந்த எழுச்சியின் தன்மை வராது தடுக்க
2.அக்கணமே அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று எண்ணினால் அதைத் தடைப்படுத்தும்.
3.அதை அடக்கிடும் அந்த உணர்வின் தன்மையைப் உங்களிலே பரவச் செய்யுங்கள்.

ஒவ்வொரு நிமிடமும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்கள் உடலில் உள்ள அணுக்களுக்குத் தீமைகள் கிடைக்காதபடி அருள் உணர்வின் தன்மைகளைப் பரப்படும் பொழுது இதைச் சிறுகச் சிறுக நுகர்ந்தால் இதன் வலிமையோ “அருள் ஞான வழியாக” மாறுகின்றது.

நமக்குள் இருக்கும் பகைமையும் நண்பனாக மாற்றும் நிலை வருகின்றது. இதைத்தான் இராமாயணக் காவியத்தில்
1.இராமன் காட்டிற்குள் சென்றாலும் பகைமையற்ற உணர்வு கொண்டு எல்லோரையும் நட்பாக்கினான் என்று காட்டுகின்றார்கள்.
2.அதாவது பன்னிரெண்டு வருடம் என்பது ஒரு மண்டலம் என்ற காவியத் தொகுப்புகளும் உண்டு.

ஆகவே இதை நாம் செயலாக்கும் இந்த நிலை கொண்டு மனிதனின் வாழ்க்கையில் வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

அதே சமயத்தில் இந்த உபதேசத்தைக் கேட்கும் பொழுதும்… நீங்கள் இதைப் படிக்கும் பொழுதும்…
1.உங்களுக்குள் அற்புதமான மணங்கள் வந்து கொண்டே இருக்கும்.
2.உங்கள் உடலில் உள்ள இரத்தநாளங்களில் அந்த அருள் சக்தியான நிலைகள் வரும்.
3.உங்களுக்குள் ஒரு குளிர்ச்சி ஏற்படும் உணர்வின் தன்மையையும் ஊட்டிக் கொண்டே இருக்கும்.
4.உங்கள் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு வீரியமான சக்தியும் கிடைக்கும்.

இந்நேரம் வரை உபதேசித்தது அருள் ஞானத்தின் உணர்வை நீங்கள் பெறவேண்டும் என்பதற்கே….!

1.இதை நீங்கள் நுகர நுகர மகிழ்ச்சியை ஊட்டும்
2.அருள் ஞானத்தின் உணர்வுகளை நினைவுபடுத்தும்
3.அருள் வழியில் உங்களை வாழ வைக்கும்.

இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் ஆழப் பதிந்த பின் நீங்கள் எங்கே சென்றாலும் மேலே சொன்ன அத்தனையும் நுகர முடியும். அருள் ஆற்றலைப் பெற முடியும்.

ஆகவே இந்த உலகைக் காத்திட அந்த அருள் ஞானம் வேண்டும் என்று உணருங்கள். உலக மக்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற உணர்வுடன் தியானியுங்கள்.

அந்த அருள் ஞானம் உங்களுக்குள் விளையும். அரும் பெரும் சக்தியாக உங்கள் உடலைச் சுற்றி நறுமணங்கள் பரவும். இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர நல்ல அணுக்களின் தன்மை விளையும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் மகரிஷிகளின் சக்தியும்… துருவ நட்சத்திரத்தின் சக்தியும் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கி இருங்கள்.

Leave a Reply