கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ நோய் இருந்தால் அதை நீக்க “விடாப்பிடியாகத் தியானிக்க வேண்டிய முறை”

Husband and wife divine powers

கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ நோய் இருந்தால் அதை நீக்க “விடாப்பிடியாகத் தியானிக்க வேண்டிய முறை”

 

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஒவ்வொரு நிமிடத்திலேயும் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

கணவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்… அவர் உடல் முழுவதும் படர வேண்டும்… அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்… என்று ஏங்கி விட்டு அவர் உடலில் எந்த நோய் இருக்கின்றதோ அது நீங்கிட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் உடலில படர்ந்து…
1.”சர்வ நோய்களையும் நீக்கிடும் அருள் சக்தி பெறவேண்டும்” என்று
2.மனைவி கணவனுக்கு எண்ணுவதும் கணவன் மனைவிக்கு இந்த மாதிரி எண்ணி
3.அந்த அருள் சக்திகளை ஒருவருக்கொருவர் கூட்டிப் பழக வேண்டும்.

“எத்தகைய நோய்” இருந்தாலும் உங்களால் போக்க முடியும்.

கணவனைப் பார்த்து ஒரு பத்து நிமிடம் தியானித்துவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் கணவர் பெற வேண்டும்… அவர் உடலில் சர்க்கரைச் சத்தை நீக்க்கக்கூடிய அருள் சக்தி கிடைக்க வேண்டும்… அந்தச் சர்க்கரைச் சத்து நீங்கி அவர் உடல் நலம் பெறவேண்டும்…! என்று எண்ணுதல் வேண்டும்.

இதைப் போல் எத்தகைய நோய் இருந்தாலும்…
1.அது நீங்க வேண்டும் என்ற ஒரே….. நினைவுடன்…
2.கணவர் புருவ மத்தியைக் கண்களால் பார்த்து அந்த அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

அதே போல் மனைவிக்கு நோய் இருந்தால்
1.கணவன் ஒரே….. நினைவுடன்… மனைவி புருவ மத்தியைக் கண்களால் பார்த்து
2.அந்த அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.

இந்த உணர்வுகளை அவர்கள் நுகர நுகர இந்தத் தீமைகளை நிச்சயம் வெல்லலாம். இதற்கு முன் நமக்குள் அறியாது சேர்ந்த நோய்களை மாற்ற இப்படித் தினமும் செய்தல் வேண்டும்.

காலையில் இதைப் போல் துருவ தியானம் இருந்த பின் மனைவி கணவருக்கு நல்ல நிலைகள் கிடைக்க வேண்டும் என்றும் அவர் உடலில் அறியாது வந்த நோய் நீங்க வேண்டும் என்றும் அதே போல் மனைவிக்கு அதே மாதிரி அந்த நோய் நீங்க வேண்டும் என்றும் உடல் நலம் பெறவேண்டும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாங்கள் வாழ வேண்டும் என்று “வலிமையாக” எண்ணுதல் வேண்டும்.

நோய் என்று யார் சொன்னாலும் கேட்ட அடுத்த கணமே “ஈஸ்வரா…” என்றுப் புருவ மத்தியில் உயிரிடம் நினைவைச் செலுத்துங்கள்.

நோய் என்று வரப்படும் பொழுது அவர் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்வதனால் அதற்கு “வாலி” என்று காரணப் பெயர் வைக்கின்றனர். வாலி என்றால் வலிமை மிக்க சக்தி.

1.வாலி எவரைப் பார்த்தாலும்…
2.அவர் வலுவைச் சரி பகுதி பெற்றுக் கொள்வான்…! என்று
3.”எண்ணங்களைப் பற்றித்” தெளிவாக இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

வாலி என்ற நிலை வரும் பொழுது அவனை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். சுக்ரீவனின் துணை கொண்டு அவனை வென்றான். சுக்ரீவன் என்றால் துருவ நட்சத்திரம்.

மகிழ்ச்சி என்ற உணர்வை உருவாக்கி மகிழச் செய்யும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்திலிருந்து வருகின்றது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.எங்கள் இரத்தநாளங்களில் அந்தச் சக்தி படர வேண்டும் என்று அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் வரும் சர்வ தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபடுங்கள்.

Leave a Reply