அகஸ்தியரையும் அவரைப் போன்ற மற்ற மகரிஷிகளியும் காண வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

image vision

அகஸ்தியரையும் அவரைப் போன்ற மற்ற மகரிஷிகளியும் காண வேண்டும் என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…?

 

குருநாதர் காட்டிய வழியில் நாம் இப்பொழுது தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கி உங்கள் நினைவை வானை நோக்கி ஏங்கித் தியானியுங்கள்.

1.அந்த அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை
2.அதனை நுகரும் தன்மை கொண்டு நினைவாற்றலைச் செலுத்தி
3.உங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் பதிவாக வேண்டுமென்று எண்ணினால்
4.உங்கள் கண் அதன் உணர்வு கொண்டு இரத்த நாளங்களிலே பதிவாக்குகின்றது.

உதாரணமாக நம் நண்பன் வெகு தொலைவில் இருப்பினும் அவனை இங்கிருந்து எண்ணிப் பார்க்கும்போது அவன் உடலில் இருந்து உணர்வின தன்மை நாம் நுகர்ந்து “அந்த உருவத்தை” நாம் பார்க்க முடிகின்றது.

நண்பன் என்று பழகிய பின் வெகு நாள் பார்க்கவில்லை என்றால் அந்த ஏக்கத்தில் நண்பனைப் பார்க்க வேண்டுமென்ற உணர்வினை நமக்குள் பதிவாக்கிய பின்
1.அந்த நண்பனை எண்ணினால்
2.அந்த உணர்வின் அலைகளாக
3.நமக்குள் நிழல் படமாக “உருவம் தெரிகின்றது…!”

இதைப் போன்றுதான் அகஸ்தியமாமகரிஷி வாழ்ந்த அக்காலத்திற்கு எண்ணங்களைச் செலுத்தி அகஸ்தியன் உணர்வைப் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டுமென்று
1.நினைவினை விண்ணை நோக்கி ஏங்கி… அக்காலத்தை எண்ணி…
2.அவனுக்குள் விளைந்த உணர்வின் சத்தை
3.உங்கள் நினைவுக்குள்… உங்கள் உடலுக்குள்… உங்கள் இரத்த நாளங்களில் பதிவாக வேண்டும்…
4.அணுக் கருவாக வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.

கண்ணின் கரு விழியால் நாம் இப்படி எண்ணும்போது அகஸ்தியன் பெற்ற உணர்வு உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

மீண்டும் மீண்டும் அந்த நினைவின் தன்மை கொண்டு வரப்படும்போது கண்ணின் புலனறிவு கொண்டு எதனைப் பதிவு செய்தோமோ… அந்த அலைகளை நாம் உற்று நோக்கி வெகு தூரம் செலுத்தினாலும் அந்த உணர்வலைகள் காற்றில் கலந்திருப்பதைக் கவர்ந்து.. நம்மை நுகரச் செய்கின்றது.

நுகரப்படும்போது நினைவினை நம் உடலுக்குள் இரத்த நாளங்களில் சேமிக்கும் தன்மையாக நாம் எண்ணுதல் வேண்டும். அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற “இது உங்களுக்குப் பயிற்சி…!”

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்ற ஆசையுடன் கண்ணைத் திறந்து ஒரு நிமிடம் ஏங்கி இருங்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் நினைவை செலுத்துங்கள்.
1.விஷத்தை வென்றிடும் மூலிகையை அவர் நுகர்ந்ததனால்
2.அந்த விஷத்தை வென்றிடும் மூலிகையின் மணம் உங்களுக்குள் இப்போது வரும்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டுமென்று ஏங்கி இதைப் பெறுங்கள்.
1..இப்போது அந்த நறுமணங்கள் வரும்.
2.நஞ்சை வென்றிடும் மணங்கள் வரும்.

கண்ணை மூடுங்கள்… கண்ணின் நினைவினை உங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டுமென்ற நினைவினை உள்முகமாகச் செலுத்துங்கள்.

இப்பொழுது…
1.உங்கள் இரத்த நாளங்களில் (அகஸ்தியன் உணர்வுகள்) கலக்கும் உணர்ச்சிகளை நீங்கள் உணரலாம்.
2.இரத்த நாளங்கள் வழி கொண்டு உங்கள் உடல்களில் மெல்ல ஊர்ந்து செல்லும் உணர்ச்சியை நீங்கள் உணரலாம்.
3.ஊர்ந்து செல்லும் போது உங்களுக்குள் தொல்லை கொடுத்து கொண்டிருந்த அணுக்கள் அது நுகரும்போது அவை ஒடுங்கும்.
4.இப்போது உங்கள் உடல்களில் உள்ள வலியோ மற்ற எது இருந்தாலும் குறையத் தொடங்கும்.

தீய அணுக்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது மடிந்துவிடும். ஏனென்றால் நஞ்சினை வென்றிடும் அகஸ்தியனின் உணர்வுகள் இரத்தங்களில் பரவப்படும்போது அந்த அணுக்கள் மயங்கிவிடும்… வலிகள் குறைந்துவிடும்… இப்போது இதை உணரலாம்…!

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணு ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று. புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு வாருங்கள்.

இப்போது அந்தப் புருவ மத்தியில் இருந்து அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவாற்றலை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். அந்தச் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று மீண்டும் உங்கள் நினைவைப் புருவ மத்திக்கு கொண்டு வாருங்கள்.

கண்ணின் நினைவாற்றலை உங்கள் உடலுக்குள் செலுத்தி இதன் சுழற்சியின் நிலைகள் கொண்டு உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் பெற வேண்டும் என்ற ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.

மீண்டும் ஈஸ்வரா…! என்று அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் தொடர்பு கொள்ளுங்கள்.

யாம் சொன்ன முறைப்படி
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரான ஈசனுடன் வேண்டித் தியானிக்கும் பொழுது
2.உயிரின் வழி அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பரவும் உணர்ச்சிகளை உணரலாம்.
3.திரும்பத் திரும்ப இதைப் போல எண்ணுங்கள்… ஏங்கிப் பெறுங்கள்… ஏங்கித் தியானியுங்கள்..!
4.இனிமையான உணர்ச்சிகளை உங்கள் உடல்களில் இப்பொழுது தோற்றுவிக்கும்.

இதுவே தியானம்…!.

அகஸ்தியன் துருவ மகரிஷியான பின் அவர் உடலிலே விளைந்த உணர்வுகள் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் துருவ மகரிஷியாக ஆன பின் ஒளியின் சரீரமாக உருப் பெற்றுத் துருவத்தை எல்லையாக வைத்து துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் படர்ந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று திரும்பத் திரும்ப இந்த உணர்வினை உங்கள் உடலுக்குள் உருவாக்குங்கள்.

1.இளம் நீலமான ஒளிக் கதிர்கள் உங்கள் புருவ மத்தியில் அந்த உணர்ச்சிகளை ஊட்டும்
2.ஒளியின் நிலையாக அருள் ஒளியை நீங்கள் உணரலாம் காணலாம்
3.அறியும் தன்மை வருகின்றது… தெரியும் தன்மை வருகின்றது.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று ஏங்கித் தியானியுங்கள்.

1.இப்பொழுது உங்கள் எடை குறையும் மெதுவாக இருப்பது போன்று
2.பூமியின் ஈர்ப்பின் பிடிப்பை விட்டு மிதப்பதைப் போன்று. உங்கள் உடல் லகுவாக இருக்கும்.

அகஸ்திய மாமமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இதை நுகரும்போது அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் வரும் பொழுது அந்த உணர்புகள் ஒளி அலைகளாக உங்களுக்குள் காட்சியாகத் தெரியும்.

Leave a Reply