ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை எடுத்து ஜோதி நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

blue flame soul

ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை எடுத்து ஜோதி நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சரீரமற்ற ஆவி ஆத்மாவிற்குச் சுவாச நிலை இல்லாததனால் அதனுடைய உண்மைத் துடிப்பு நிலை காற்றின் அலைத் தொடர்புடன் உயிர் ஆத்மாவானது இருக்கின்றது.

அதாவது நாம் எப்படி நட்சத்திரங்களைக் காணும் பொழுது மின்னும் நிலையைக் காணுகின்றோமோ அதைப் போன்றே
1.ஆத்ம அலையின் துடிப்பு நிலையின் செயல் கொண்ட சுழற்சியில் தான்
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா செயல் கொள்கின்றது.

பூமியின் பிடிப்பலை எண்ண உணர்வுடன்… வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ் நாளில் எண்ணத்தின் சுவாசத்தை எடுத்து… அச்சுவாசம் சமைக்கும் தொடர்பு வாழ்க்கையின் வழி முறைப்படி… ஆத்மாவின் உயர் சக்தியை அறியாமல்… வாழ்க்கைப் பிடிப்பில் சிக்கி வாழ்ந்து மடியும் உயிராத்மா… அதன் உயர்வு நிலை பெறாமல்… வளர்ச்சியற்றுப் போய் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலேயேதான் இருக்க முடியும். உயிராத்மா வளர்ச்சி கொள்ள முடியாது.

ஆகவே…
1.பல கோடி ஆண்டுகளாக வார்ப்புப் படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி கொண்டு வந்த
2.ஆத்ம வளர்ச்சியின் மனிதச் சரீரத்தின் வலுப் பெற்ற வளர்ச்சி நிலையிலிருந்து
3.உயர் நிலை பெற – சுவாசத்தைக் கீழ் நோக்கிய பூமி ஈர்ப்பு எண்ணமுடன் செலுத்தாமல்
4.சூரியனின் சமைப்பின் வழித் தொடர் பல நிலையில் மாறு கொண்டு வளரும் தன்மையில்
5.பூமி சமைத்து வெளிப்படுத்தும் அலையை எடுக்காமல்
6.பூமி சமைப்பினால் சரீரம் பெற்று எண்ணத்தின் உணர்வு நல்ல நினைவு உள்ள காலங்களிலேயே
7.மேல் நோக்கிய சுவாசத்தால் நாம் எடுக்கும் நேரடி காந்த நுண் அலைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அதாவது ஏழு வகை வண்ணத்தில் சமைக்கப்பட்ட ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை… காந்த ஈர்ப்பு நுண் அலையின் தொடர் வளர்ச்சி நிலை எண்ணத்தின் மோதலினால் நேரடியாகப் பெற வேண்டும்.

இப்படிப் பெற்ற வளர்ச்சியைக் கொண்டு பூமியின் பிடிப்பற்ற நிலைக்கு வர முடியும். அதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் வழி முறையிலிருந்து மனிதனுக்கு அடுத்த நிலையான வளர்க்கும் நிலையான “வண்ண ஒளி ஜோதியாகலாம்…!”

மனிதனின் எண்ணத்தால் எடுக்கும் நிலை கொண்ட வார்ப்பு நிலை தான் ஆத்மாவின் வளர்ச்சி நிலை. ஆகவே இவ்வாத்மாவில் சேமிக்கும் வண்ண ஒளியின் வளர்ச்சி நிலையில் தான் மனித நிலையிலிருந்து வளர்ச்சி பெறும் அடுத்த நிலை உருவாகின்றது.

சீப்பை எடுத்து நாம் தலையை வாரும் பொழுது கீழ் நோக்கி வாரும் பொழுது
1.பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியதாக ரோமக்கால்களின் அணு வளர்ச்சியும்
2.கீழ் நோக்கி வளரும் வளர் நிலைக்கொப்ப ஈர்ப்பில் சீவப்படும் நிலையில் எந்நிலையான பாதிப்பும் தெரிவதில்லை.
3.அதே சீப்பைக் கொண்டு மேல் நோக்கி நம் கூந்தலைச் சீவினோம் என்றால்
4.உடல் நிலையே சிலிர்ப்புத் தன்மை இவ்வுணர்வு பெறுகின்றது.

இதை எப்படி அனுபவத்தில் காணுகின்றோமோ அதைப் போன்ற உண்மை நிலையை சுவாச நிலையால் எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தும் பொழுதும்… நேரடி சுவாசத்தை மேல் நோக்கி எடுக்கும் அலையை இந்த உடல் உடனே பெறுகின்றது…!

இத்தொடர் வளர வளர… மனிதச் சக்தியின் வலுச் சக்தியை இந்த ஆத்மா பெற்று… இவ்வாத்மாவின் ஒளி அலைகளைத் தனித்து இயக்கவல்ல வளர்ச்சி வழி கொள்ள முடியும்…!

Leave a Reply