சிறு வயதிலிருந்தே பின் தொடர்ந்து என்னைக் காத்துக் கொண்டே வந்தார் “ஈஸ்வரபட்டர்”

spiritual guru intelligence

சிறு வயதிலிருந்தே பின் தொடர்ந்து என்னைக் காத்துக் கொண்டே வந்தார் “ஈஸ்வரபட்டர்”

 

என்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு சமயம் நான் (ஞானகுரு) குளத்தில் நீச்சலடிக்கும் பொழுது திடீரென்று புரையோடி விட்டது.

புரையோடிய பின் தண்ணீர் உள்ளுக்குள் போனவுடனே என்னால் சுவாசிக்க முடியாத நிலை ஆனது. எனக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும் தண்ணீரைக் குடித்த பின் நீரிலே மூழ்கும் தன்மையே அப்பொழுது வருகின்றது.

என்னுடைய கை கால்களை அசைக்க முடியவில்லை. புரையேறிய பின் அந்த உணர்வே இயக்குகிறது… கை கால்களை இயக்க முடியவில்லை.

இந்தச் சம்பவத்தைக் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) பின்னாடி நான் அவருடன் பழகும் பொழுது எனக்கு உணர்த்துகின்றார்.
1.உன்னை இளமையிலிருந்தே நான் பின் தொடர்ந்து வந்தேன்.
2.உனக்குப் புரையோடும் பொழுது உன்னைக் காத்தேன்…! என்று சொல்கிறார்.

என்னுடைய இளமைப் பருவத்தில் குரு என்னைக் காத்தார் என்று சொல்கிறார். ஆனால் ஈஸ்வரபட்டர் யார்..? என்றே எனக்கு அப்பொழுது தெரியாது. எப்பொழுது… எப்படிக் காத்தார்…? என்று எனக்குத் தெரியாது.

ஆனால் உன்னை நான் தான் காத்தேன்…! என்று அவர் சொல்கிறார். ஏனென்றால் எப்பொழுதோ நடந்த அந்த நிகழ்ச்சியைச் சொல்கிறார் குரு.

சிறு வயதில் குளத்திற்குச் சென்றால் கொஞ்ச தூரம் நீச்சலடித்துப் போவது தான் எனக்கு வழக்கம். ஆனால் உள்ளே சென்ற பின் திடீரென்று புரை ஆகி ஹ்ஹா…! என்று சுவாசிக்கப்படும் பொழுது கை கால்களை அசைக்க முடியவில்லை.

எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் புரையோடி விட்டால் தண்ணீருக்குள் மூழ்க நேரும். இதைக் குருநாதர் உணர்த்துகின்றார்.

உனக்குப் புரையோடும் பொழுது உன்னுடைய நினைவுகள் எங்கெங்கெல்லாம் சென்றது…?
1.உன் தாயை எண்ணினாய்.. மூழ்கப் போகின்றேன்… என்று உணர்ந்தாய்..
2.ஆனால் உன் தாய் உன்னைக் காக்கப்பட வேண்டும் என்று உன்னிடம் பதிவு செய்த உணர்வுகள்…
3.“அம்ம்மா…!” என்று உன்னால் கத்த முடியவில்லை. வாயைத் திறந்தால் நீர் உள்ளே சென்றுவிடும்.
4.ஆனால் நீ எண்ணிய அம்மா…! என்ற நினைவலைகள் அங்கே செல்லப்படும் பொழுது
5.தாயின் உணர்வுகள் அந்தச் சந்தர்ப்பத்தில் உன்னைத் தொடர்ந்து வந்த உணர்வுகள்
6.நான் உன்னை எப்படியும் கைவல்யப்படுத்திவிட வேண்டும் என்று தொடர்ந்த நிலைகள் கொண்டு உன்னை இது வரையிலும் காத்தேன்…!
7.சரியான பருவம் வரும் பொழுது உன்னைக் கைவல்யபடுத்தினேன்.
8.உன்னை என் வசம் இழுத்துக் கொண்டேன்
9.அதன் உணர்வே உனக்குள் ஞானத்தின் சக்திகளாக விளைகின்றது…! என்று பின்னாடி என்னிடம் குருநாதர் கூறுகின்றார்.

இப்படி என் (ஞானகுரு) வாழ்க்கையில் ஈஸ்வரபட்டர் பின் தொடர்ந்தே வந்தார் என்ற நிலையைத் தெளிவாகச் சொல்கின்றார். இது என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி.

Leave a Reply