வாழ்க்கை என்ற ஓட்டத்தில் செல்வதா…? அல்லது ஞான வழியில் நாம் செல்ல வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

light meditators

வாழ்க்கை என்ற ஓட்டத்தில் செல்வதா…? அல்லது ஞான வழியில் நாம் செல்ல வேண்டுமா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மணம்… ஒலி… இவற்றுடன் கூடிய அமிலச் சேர்க்கையின் உருவக உணர்வு… வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு மோதலின் உணர்வு நிலைக்கொப்ப எல்லாம்.. நாம் எடுக்கும் சுவாசத்தின் மூலம் உடலில் அணுக்கள் வளர்கிறது.

இத்தொடரின் வாழ்க்கை நிலையில் எவை எவை நம்மிடம் (எண்ணங்கள் உணர்வுகள்) மோதுகின்றனவோ… அவற்றின் உணர்வை அதிகமாக ஈர்க்கவல்ல தன்மையில்…
1.நாம் நுகரும் ஈர்ப்பு நிலைக்கொப்ப அணு வளர்ப்பு கூடுவதினால்
2.அதை அப்படியே விட்டுவிடலாமா…?

அதாவது… சுழற்சி ஓட்ட வாழ்க்கையில் சுழன்று ஓடும் நாம்… ஓடும் நிலைக்கொப்ப எல்லாம் நம் வாழ்க்கை ஓட்டத்தை ஓட விடாமல்… இவ்வெண்ணத்தின் உணர்வை அந்தந்தக் கால நிலைக்கொப்ப ஏற்படும் மோதலை எல்லாம் தன் ஈர்ப்புப் பிடியில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

சூடான பொருளை நாம் உண்ணும் பொழுது நம் உடலில் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு அதனை ஆறவைத்துத் தான் உட்கொள்கின்றோம். அதைப் போன்று…
1.எண்ணத்தில் மோதும் செயல் எதனையும்
2.மிகத் துரித வேகத்தில் பிறரிடம் இருந்து எதிர்ப்படும் சொல் அலையானாலும்
3.குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் இன்னலின் துன்பச் சம்பவமானாலும்
4.மகிழ்ச்சியின் ஆராவாரச் செயலானாலும்
5.உட்கொள்ளும் உணவை எப்படி உடல் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் மட்டும் நாம் உண்ணுவது போல்
6.இவ்வெண்ணத்தின் செயலைக் கொண்டு அந்தந்தக் காலங்களில் ஏற்படும் மாற்றத்தை
7.ஞானம் கொண்ட சிந்தனை வழியிலும் அமைதி கொண்டு ஏற்படும் தொடருக்கு உட்பட்ட உணர்வை எடுத்துப் பழகுங்கள்.

மனித உணர்விற்கு… உடலின் மேல் காரத்தையோ.. புளிப்பையோ… பிய்ப்பெடுக்கும் சில காய்கறிகளின் சாறுகளையோ… வைத்தவுடன் உடலின் உணர்வு அதைத் தெரிந்து கொள்கின்றது.

அதைப் போன்ற தொடர் அலை அமிலத்தின் சேர்க்கை குணம் யாவையும் இக்காற்றலையில் கலந்துள்ள நிலையில்… இவ்வெண்ணத்தில் எடுக்கும் சலிப்பு சாந்தம் கோபம் எதுவாகிலும்… அத்தொடர்பு கொண்ட அணு வளர்ப்பின் வார்ப்பால் உடல் வளர… உடலில் வலுவான ஆத்மாவிற்கு அம்முலாமின் வலுக் கூட… இப்பிடிப்பிலிருந்து மீள முடியா நிலைக்கு நம் ஆத்மாவைச் செயல்படுத்தி விடுகின்றோம்.

இச்சரீர வாழ்க்கையின் எண்ணத்தில் சம நிலை உணர்வினால்… ஞானத்தின் ஒளி அலையை நாம் எடுக்கும் சுவாச வலுக் கொண்டு… நம் ஆத்மா வலுக் கொள்ளும் வளர்ச்சி அலையை… சமமான குணத்தினால் எடுக்கும் முறையில் இவ்வாத்மா வலுப் பெற்று விட்டால்… இவ்வாத்மாவைக் கொண்டு உருவாக்கும் சக்தி அலை தான் சகல அலைகளுமே…!

தெய்வீக சக்தி… பிறவா வரம்… முக்தி நிலை… மோனப் பெரு நிலை.. நிர்வாண நிலை.. இதைப் போன்ற
1.தான் தான் உணர்ந்த நிலைகளில்…
2.ஒவ்வொருவரும் உணர்த்திய தொடர் நிலையின் செயல் நிலை என்பது
3.ஞானத்தால் பெறும் சமமான நிலை கொண்ட சாந்த குண உயர் ஞானச் சித்தை அறியும் நிலை தான்.

Leave a Reply