பிறவியில்லா நிலை அடையச் செய்யும் சக்தி

GURU'S Route to sapdharihi mandalam

பிறவியில்லா நிலை அடையச் செய்யும் சக்தி 

 

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்றால் நம் உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டேயுள்ளது. நாம் நுகரும் அனைத்தையும் ஓ… என்று ஜீவ அணுவாக இயக்கி ம்… என்று தன் உடலாக இணைத்து விடுகின்றது.

நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும் உணர்வின் அணுக்களுக்கும் நம் உயிரே குருவாக இயக்குகின்றது.

அதே சமயம் நம் குரு… “ஈஸ்வரபட்டர்…”
1.வானுலக ஆற்றலையும்
2.நம் பூமியின் ஆற்றலையும்
3.மனித உடலில் உயிரியல் ஆற்றலையும்
4.மனிதனாக உருப்பெற்ற பின் மனிதன் செய்ய வேண்டிய கடமைகளையும்
5.மனிதனான பின் இனி பிறப்பே இல்லாது “இந்த உடலே ஒளியாகும் முறையை..” அவர் கண்டுணர்ந்தார்.

அந்த உணர்வின் வழிப்படி அவர் கூறும் உணர்வினை நாம் நுகர்ந்தறிந்தோம் என்றால் அதன் வழிக் கொண்டு நாமும் அருள் வழி கொண்ட பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

அதை அடையச் செய்யும் அந்த ஆற்றல் வழிக்கு நமது உயிர் குருவாக இருப்பினும் நம் குருநாதர் ஈஸ்வரா (ஈஸ்வரபட்டர்) என்று அவர் இத்தகைய சக்தியை உருவாக்கினார்.

அவர் உருவாக்கிய அந்த அருள் ஞான வித்தை நமக்குள் அதைப் பதித்து அதன் உணர்வை நாம் நுகர்ந்து செயல்படுவோம் என்றால் அதன் வழி
1.அதுவே நமக்குள் குருவாக இருந்து
2.இந்த மனித வாழ்க்கையில் இருளை அகற்றி
3.மெய்ப்பொருளைக் கண்டுணரும் உணர்வுகள் நமக்குள் குரு வழியாக இந்த வாழ்க்கையில் நமக்குள் உருவாக்கி
4.அடுத்து பிறவியில்லா நிலைகள் அடையச் செய்யும் அதன் குருவே நமது குரு..!

நம் உயிர் குருவானாலும் இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றி அருள் ஒளி பெறச் செய்யும் அவர் (ஈஸ்வரபட்டர்) அருள் வழியில் நாம் எண்ணத்தைச் செலுத்தினோம் என்றால் அதுவே நமக்குள் குருவாக இருந்து பிறவியில்லா நிலைகள் அடையச் செய்கிறது.

மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

Leave a Reply