உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் மீண்டும் ஜெனனத்திற்கு வந்து குழந்தையாக எப்படிப் பிறக்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

human birth

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் மீண்டும் ஜெனனத்திற்கு வந்து குழந்தையாக எப்படிப் பிறக்கிறது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“ஒலி கொண்டு உராயும்…” அமிலச் சேர்க்கையின் வார்ப்பின் வார்ப்பாகத்தான் பல தொடர்பலையில் வலுக் கொண்ட உயிராத்மாவானது… சுவாச ஈர்ப்பில் நம் உடலுக்குள் எண்ண நிலைக்கொப்ப குண நல ஈர்ப்புப் பிடியில்… சில சில காலங்களில் வந்து சேர்கிறது.

அதாவது மனித எண்ணத்தின் பன்னிரெண்டு வகை குண அமில நிலைக்கொப்ப எந்தக் குண நிலை கொண்டுள்ளோமோ அக்குண ஈர்ப்புத் தொடர் கொண்ட ஆத்ம உயிரானது… நாம் எடுக்கும் சுவாசத்தால் நம் உணர்வின் குண நிலைக்கொப்ப “நம் சுவாசமுடன்” நுரையீரலில் உட்புகுந்து விடுகிறது.

எந்த ஆத்மா நம் குண ஈர்ப்பிற்கு நம் சுவாசமுடன் வந்ததோ அவ்வுயிராத்மாவின் துடிப்பு நிலை நம் சுவாசமுடன் நுரையீரலில் உட்புகுந்து அதன் துடிப்பான அணுக்களை வளர்த்து இரத்த நாளங்களில் உட்புகுந்து விடுகிறது.
1.ஆத்மாக்கள் பெரும்பகுதி குடியிருக்கும் இடம் இரத்தநாளங்கள் தான்.
2.அதிலே சுழன்று கொண்டே இருக்கும்.

அப்படிச் சுழலும் நிலையில் அதற்குகந்த வேட்கை குண அணுக்களை நம் உடலில் வளர்க்கத் தொடங்குகிறது.

நாம் சில சந்தர்ப்ப காலங்களில்
1.தன் நிலை மறந்த உணர்வுடன் கூடிய ஈர்ப்பு எண்ணத்தில் செல்லும் பொழுது
2.நம் உடலுக்குள் குடி வந்த ஆத்மாவானது
3.அது வளர்க்கும் அணுக்களின் அதன் எண்ணச் செயலில் வேகத்தால்
4.அதன் ஈர்ப்புப் பிடிக்கு நம்மை உட்படுத்தி… அதன் வசத்திற்கு நாம் செல்லும் காலங்களும் உண்டு.
5.அவையே நம் வளர்ப்பின் கருவாக உருப்பெற்று குழந்தைகளாக ஜெனனம் பெறுவதும் உண்டு.

நற்குண சுவாச ஈர்ப்பில் முந்தைய காலத் தொடர்பு கொண்ட வலுப் பெற்ற உயிராத்மாக்களும் தொடர்பு கொண்டு ஈர்ப்புப் பிடியில் ஜெனனத்திற்கு வருகின்றன.

இரத்தநாளங்களில் உள்ள இவ்வுயிராத்மாக்கள் தான் ஆண் பெண் உறவு நிலையில்
1.காந்த ஈர்ப்பு நுண் அலையை வளர்க்க வல்ல வண்ணங்களில்
2.வெண்மை அமிலக்கூறின் வார்ப்புச் செயலான ஆணின் அணு வளர்ப்பின் சேர்க்கை வித்துடன்
3.காந்த மின் அலையை ஈர்க்க வல்ல வீரிய உணர்வு கொண்ட உஷ்ண அலையின் சேர்க்கைக் காலங்களில்
4.நம் உடலில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
5.பெண்ணின் வீரிய குண உஷ்ண அணுக்களின் உயிரணு வளர்க்கும் காலங்களில்
6.ஆணின் அமிலச் சேர்க்கையில் கரு ஈர்ப்பிற்கு வந்து கருத்தரிக்கின்றது.

கருத்தரித்த காலத்தில் தாய் எடுக்கும் சுவாசத்தால் இக்கருவானது அதன் உயிர் ஆத்மா திடம் (உடல்) கொள்கிறது, திடம் கொண்ட நிலையில் அவ்வாத்மா வளர்க்கும் அவ்வமிலத்தின் உஷ்ண அலையில் உயிரணுக்கள் வளரத் தொடங்குகிறது.

கருவுற்ற நிலையில் அந்த ஆத்மா உராய்ந்து உராய்ந்து வலுப் பெற்று உருவாகி வளரும் அந்த அணுக்களின் மலம் வெளிப்பட்டு அதுவே மீண்டும் அணுவாகி வளரும் கரு வளர்ப்பு வார்ப்பு சரீர நிலையாக உருவாகின்றது.

தாயின் கர்ப்பத்திலேயே கர்ப்பப் பையில் தான் அவ்வாத்மாவும் வளர்கின்றது. ஆத்மாவின் ஈர்ப்பு உஷ்ண அலையின் வார்ப்பாகத்தான் அக்கரு வளர்ந்து அக்கருவின் எலும்புப் பாகங்கள் உறுதி கொள்கிறது.

எலும்பின் ஈர்ப்பு வளர்ச்சி வளர்ந்த பின்பு தான் அந்த உயிராத்மாவானது ஜெனனப் பிறப்பிற்கு வருகின்றது.

வலுக் கொண்ட காந்த ஈர்ப்பு வார்ப்பு வார்ப்பாக சரீரம் உருவான பிறகு…
1.அச்சரீரத்தை இயக்கி வளர்ந்த ஆத்மா வலுக் கொண்ட பிறகு
2.தாயின் சரீரத்திற்கும் சேயின் சரீரத்திற்கும் தொடர்பு கொண்ட
3.தொப்புள் கொடியின் தொடர் ஓட்ட நிலை சேய் வளர்ச்சி கொண்ட நிலையில்
4.தாயின்றித் தனித்துச் சக்தி பெறும் ஆற்றல் கொண்ட நேரத்திலேயே
5.அதன் துடிப்பு வேகம் அதிகப்பட்டு…
6.தாய்க்கும் சேய்க்கும் தொடர்பான தொப்புள் கொடியைப் பிரித்துக் கொண்டு
7.தன் இச்சைக்கு வளரும் சிசுவாகப் பிறக்கின்றது.

தாயின் கருவில் சிசுவாக வளரும் காலத்தில் துடிப்பு நிலையின் இயக்கம் ஒன்று தான் அச்சிசுவிற்கு உண்டே தவிர… சிறுநீர் கழிப்பதோ.. மலம் கழிப்பதோ… சுவாசம் எடுப்பதோ… உணவு எடுப்பதோ… இச்செயல்கள் எவையும் இல்லை.

ஆனால் தாயெடுக்கும் சுவாசத்தால்… தாய் எடுக்கும் உணர்வுகளின் எண்ணத்தின் அலைத் தொடர்பு யாவையுமே… ஒலி ஈர்ப்பின் தொடர்பை அச்சிசு பெறுகின்றது.

கரு வளர்ப்பில் அக்கருவின் ஆத்மா தாய்க்கும் சேய்க் கருவிற்கும் தொடர்பு கொண்ட “உதிரத் தொடர்பில்”
1.உதிர அணுக்களின் வளர்ப்பணு உராய்வு திட வளர்ப்பினால் தான்
2.அணு முட்டையாகத்தான் கரு உருவகம் பெறுகின்றது
3.உண்டு கழித்து உருவாகுவது இல்லை… “உருவாகும் உயிரணுக் கரு…!”

உஷ்ண அலையின் வார்ப்பாகத்தான் உயிராத்மா தாயின் உதிரத் தொடர்பைக் கொண்டு தன் வளர்ப்பிற்குச் சத்தெடுத்து உருவாகின்றது.. வளர்கின்றது… பிறக்கின்றது.

பிறந்த பிறகுதான் தன் இச்சையில் சுவாசம் எடுத்து உணவெடுத்து செவி ஈர்ப்பும் ஒளிப் பார்வையும் ஒளி வீச்சும் செயல்பட ஆரம்பிக்கின்றன.

மனித உரு கரு உருவாகும் தருணத்தில் உருவங்களும் நிறங்களும் அங்க அவயங்களின் வார்ப்புகளும் தாயின் உதிர உஷ்ண ஓட்டத்தால் இவ்வாத்ம உயிர்…
1.ஏற்கனவே எந்தெந்த முலாமில் எல்லாம் வார்ப்பாகி வார்ப்பாகி வலுக் கொண்டு வழித் தொடர் பெற்று
2.எதை வளர்க்கக்கூடிய வித்தாக அவ்வுயிராத்மாவின் முலாம் இருந்ததோ
3.அதன் தொடர்பு கொண்ட உருவக அங்க இலட்சணங்கள் தான்
4.கருவகக் காலத்தில் பெற்று வந்த வார்ப்பு உருவாகப் பிறப்பெடுத்து வளர முடியும்.

Leave a Reply