நம பார்வதி பஜே… நமச்சிவாயா…! அரோகரா…! இப்படிப் பாடுவதன் உட்பொருள் என்ன…?
மரம் செடி கொடிகள் இருக்கின்றது. அதிலே பல தாவர இனங்களைச் சேர்த்துப் புது புதுச் செடிகளை உருவாக்குகின்றனர்.
பூமியின் துணை கொண்டு அந்த வித்து இழுக்கப்படும் பொழுது
1.அதனின் பங்கின் விகிதாச்சாரம் கொண்டு
2.இந்தக் காற்றில் இருக்கும் தன் உணர்வை எடுத்து மரம் அதன் வழியே அது வளர்கின்றது.
3.செடியும் கனியும் ரூபங்கள் மாறுகின்றது,
4.அதற்கு யார் அறிவைக் கொடுத்தது…?
5.அதற்கு அறிவில்லை என்று யார் சொல்ல முடியும்…!
எதன் உணர்வோ அதன் அறிவாக அது இயக்கும்…! என்ற நிலை அங்கே தெளிவாகிறது.
1.அதன் உணர்வை உயிரினங்கள் (புழுவிலிருந்து மனிதன் வரை) நுகர்ந்தால்
2.ஜீவ அணு என்ற நிலையாக அதன் அறிவாக அந்த உணர்வின் தன்மை இயக்கி
3.அது நகர்ந்து செல்கிறது… நகர்ந்து செல்லச் செய்கிறது.
ஆனால் செடி கொடிகளோ தான் இருந்த இடத்திலிருந்து தன் உணர்வைக் கவர்ந்து அது வளர்கிறது. இது எல்லாமே நம் சாஸ்திரங்களில் உண்டு.
“சைவ சித்தாந்தம்…!” என்று சொல்வார்கள். இதை எல்லாம் வேதங்களாக மாற்றிக் கொண்டார்கள்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி… என்று “அவன்” கண்டுணர்ந்த உண்மையை எந்நாட்டவரும் அதைப் பெறலாம்.
1.ஏனென்றால் இருளை நீக்கி ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ நட்சத்திரம் அந்த அகஸ்தியன் தான்.
2.ஆனால் இந்தத் தென்னாட்டில் தோன்றியவன் தான் அத்தகைய ஒளியின் சரீரம் பெற்றான்.
இந்தப் பூமியில் உள்ள எந்நாட்டவரும் அவன் பெற்ற அருளைப் பெற்று அவர்களுக்குள் அறியாத இருளை நீக்க முடியும் என்ற நிலையைத் தெளிவாக உணர்த்தும் விதமாகத் தான் “தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..” என்று அகஸ்தியனுக்குப் பின் வந்தவர்கள் உணர்த்தினார்கள்.
நம் தென்னாட்டிலே தான் இத்தகைய சாஸ்திரங்கள் எல்லாம் இருக்கும். வட நாட்டிலே பார்த்தால் இது இருக்காது.
இங்கிருந்து புறப்பட்டது தான் மற்ற உலக நிலைகளுக்கு. ஆனால் மற்ற நாடுகளில் இது இல்லை. எதை எதையோ ஒரு தெய்வத்தை வைத்திருப்பார்கள். மற்றதைச் சொல்வார்கள்.
சூரியனைச் சொல்லப் போகும் பொழுது நாராயணன் என்று சொல்வார்கள். ஆனால் அந்த நாராயணன் யார்…? என்று தெரியாது.
1.அரோகரா… அரோகரா…! என்று சொல்வார்கள்..
2.நம பார்வதி பஜே… நமச்சிவாயா…! என்று பாடல்கள் எல்லாம் பாடுவார்கள்.
3.நம பார்வதி பஜே நமச்சிவாயா…! என்று சொன்னால்… கேட்டு அதையே நாமும் திருப்பிச் சொல்வோம்.
இதனுடைய உட்பொருளை நாம் அறிந்து சொல்கின்றோமா…? அதாவது
1.அரோகரா… சுழலும் உணர்வின் தன்மை நுகர்ந்ததை
2.நம் பார்வையில் படுவதை நாம் நுகரப்படும் பொழுது
3.அந்த உணர்வின் இயக்கமாக இயக்குகிறது
4.அப்பொழுது நமக்குள் நமச்சிவாய… நம் உடலாக மாற்றுகின்றது.
எதை நுகர்கின்றோமோ ஒரு இயக்கச் சக்தியாக மாறி நம் உடலாக மாற்றுகின்றது என்பதை ஒரு பாடல் வழியாகக் கூட ஞானிகள் நமக்கு இப்படிக் கூறியுள்ளனர்.
ஆனால் எல்லாம் பாடலைப் பாடிய பின் அரோகரா… பார்வதி பஜே நமச்சிவாயா…! என்று சொல்வோம் ஏன் சொல்கிறோம்…? எதற்காகச் சொல்கிறோம்…? என்று தெரியாமலே அல்லவா பாடுகின்றோம்.
ஆயிரத்தெட்டுக் குணங்களைப் பிரிக்கப்பட்டு மனிதன் உடலான நிலைகளில் இருந்து நாம் எப்படி மீள வேண்டும்…? அழியாத நிலைகள் எப்படிப் பெறவேண்டும் என்ற இயக்கத்தைத் தெளிவாக ஊட்டிய தென்னாடு தான் இது.
அதனால் தான் அந்தத் தென்னாட்டுடைய சிவனே போற்றி…! என்று அவன் (அகஸ்தியன்) கண்டுணர்ந்த உணர்வை நாமும் பெற்று அதே போல் எந்நாட்டவரும் பெற்றால்
1.தெளிந்து வாழ்ந்திட முடியும்
2.மனிதன் இனி பிறவியில்லா நிலை அடைய முடியும்.
ஆக… பிறவியில்லா நிலை அடைந்த அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் இதே உணர்வு நமக்குள்ளும் இயக்கும்… மற்றவர்களையும் அது போல் இயக்கும்..!