தனுர் வேதம்

Mantra

தனுர் வேதம் 

 

வேதியர்களுக்குத் தான் இந்த சக்தி உண்டு அவர்களுக்குத் தான் இது தெரியும் என்பார்கள். காரணம் அவர்கள் எல்லாம் பிரம்மாவின் வம்சத்தில் வந்தவர்களாம்…! அவர்கள் பிரம்மத்தை உருவாக்கக் கூடியவர்கள் என்பார்கள்.

தனுர் வேதம் என்றால் எதையுமே அடக்கி ஆட்சிபுரியக் கூடிய நிலைகள். மனித உடலில் பல உணர்வுகளைப் பாய்ச்சி இயக்குவது. நல்லது கெட்டது எல்லாம் இருக்கின்றது என்று உடலுக்குள் பாய்ச்சுவார்கள்.

ரிக்கியர்கள் என்றால் அந்த உடலின் அமைப்பைத் தெரிந்து கொண்டவர்கள். அந்தக் காலத்தில் எல்லாம் மந்திரங்ளைச் சொல்லி இசைகளை வாசிப்பார்கள். காது கொடுத்துக் கேட்பார்கள்…!

1.இந்த உடலின் தன்மை கொண்டு எது எது வேண்டும்..? என்கின்ற வகையில்
2.அசுர குணங்கள் கொண்ட மிருகங்களைச் சமைத்து இந்த உணவை இங்கு கொடுப்பார்கள்
3.சோமபானம் என்ற நிலைகளில் மதுவைக் கொடுத்து மயக்கச் செய்வார்கள்.
4.மந்திரத்தைச் சொல்வார்கள்… இந்த மந்திரத்தை சொன்னவுடனே இசை வாத்தியங்களை இசைப்பார்கள்
5.ஒவ்வொரு நிலைகளுக்கும் அதைச் சொல்லி புஷ்பங்களையும் மற்றதையும் போடுவார்கள்.
6.அப்பொழுதெல்லாம் இந்த இசையை வாசித்து இந்த உணர்வின் தன்மை தனக்குள் அதைப் பதியச் செய்வார்கள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்ட பிறகு மதுவை நிறையக் கொடுப்பார்கள். நீங்கள் யாரும் இந்தத் தப்பைச் செய்து விடாதீர்கள். சில இதுகளை தெரிந்து கொள்வதற்காகச் சொல்ல வேண்டியிருக்கின்றது,
1.மந்திரத்தைக் கற்றுக் கொள்கின்றேன் என்று
2.தப்பான வழிக்கு நீங்கள் சென்று விடாதீர்கள்…!

அந்த மாதிரி இசைகளை வாசித்துத் தர்ப்பைப் புல்லை வைத்து இதை உள்ளே வைத்து எல்லாம் முடிந்து கடைசியில் நினைவு இல்லாமல் போனவுடனே அவனைக் கட்டிச் சில மந்திரங்களைச் சொல்லித் தீயில் போட்டு எரிக்கின்றார்கள்.

முதலிலே அந்த மந்திரத்தைச் சொன்னார்கள் அல்லவா…! அதைத் திருப்பி சொன்னவுடனே இறந்த உடலிலிருந்து ஆவியாகப் போகும்போது அந்த உணர்வை எடுத்து கொள்வார்கள்.

அதற்கென்ற பக்குவ நிலை பெற்று “ஏவல்” என்ற நிலைக்குக் கொண்டு வருவார்கள். இப்படிச் செய்வதுதான் தனுர் வேதம் என்பது.

ஒரு மனிதனை வீழ்த்த வேண்டும் என்றால் இந்த உணர்வின் சொல்லாகச் சொன்னவுடனே உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து அவன் நல்ல குணங்களை வீழ்த்தி விடும்.

1.இது எல்லாம் இந்த தனுர் வேதத்தைச் சேர்ந்தது
2.தனுர் வேதம் என்றால் என்னவென்றே தெரியாமல் சில பேர் இருக்கின்றார்கள்
3.அது ஏதோ பெரிய வேதம் போல்…! என்று எண்ணுகின்றார்கள்.

ஆக அதர்வண வேதத்தின்படி ஒரு மனிதனை அடக்கி அவனை வீழ்த்தும் நிலைகள் இது. ஏனென்றால் வேதம் கற்றுக் கொண்டவனுக்கு இது தெரியாது.

இதுவெல்லாம் அதர்வண வேதத்தில் வரும். இப்பொழுது கோவிலில் நடக்கின்றது எல்லாம் அதர்வண வேதம் தான்.

நாம் நினைக்கின்றோம் கோவிலில் யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடுவோம் என்று…! யாகம் செய்பவருக்கு மாலை துண்டு எல்லாம் போட்டு தேங்காய் பழம் எல்லாம் வைத்து புதுத் துணி எல்லாம் கொடுத்து விடுவார்கள்.

மந்திரங்களைச் சொல்வார்… அதைச் சொல்லும் பொழுது உற்றுக் கேட்டுக் கொண்டே இருப்போம். யாகத்தில் வாசனைப் பொருள் எல்லாம் போடுவார்கள். மந்திரத்தைக் காதில் கேட்டுகொண்டே இருப்போம். இதற்குப் பெயர் “வசியம்” என்று பொருள்.

1.சாமிக்குச் சக்தி ஏற்றுகின்றார்கள்… என்று நாம் நினைப்போம்.
2.ஆனால் நம்மை வசியப்படுத்துகின்றார்கள்…! என்று நமக்குத் தெரிவதில்லை.

நேற்றுவரை கல்லாக இருந்தது. இந்த உணர்வின் தன்மை பெற்றபிறகு சட்டங்களை வகுத்த பிறகு இந்தத் தெய்வத்திற்கு நீ இந்த மாதிரிச் செய்தாய் என்றால்
1.உனக்கு இன்னென்ன சக்திகள் கிடைக்கும்
2.உன் கஷ்டமெல்லாம் போய்விடும்..
3.உன் பாவம் எல்லாம் போய்விடும்…
4,அபிஷேகங்களைச் செய்… ஆராதனையைச் செய்…! என்பார்கள்.

இப்பொழுது தீயை உண்டாக்கி மனிதனை அதற்குள் போட்டால் அரஸ்ட் செய்துவிடுவார்கள். ஆனால் அன்று அரச காலங்களில் இதையெல்லாம் செய்வார்கள். நீங்கள் பார்க்கலாம்…. மகாலிங்கத்தில் கூட 12 வருடத்திற்கு ஒரு தடவை சிலதுகளைச் செய்கின்றார்கள்.

குழந்தைகளை ஊர்வலமாகத் தூக்கி வந்து அதைப் பலியிட்டு இதைப் போல் சக்தி ஏற்றுவார்கள்… மாடசாமி முனிசாமி என்ற காவல் தெய்வங்களுக்கெல்லாம். இதையெல்லாம் எடுத்துக் கொண்டோம் என்றால் பெயரை மாற்றிக் கொண்டு கண்டுபிடிக்க முடியாத நிலைகளில் இருக்கின்றார்கள்.

கோயில்களில் எந்த வாத்தியங்களை வாசிக்கின்றார்களோ அந்தந்த நேரத்தில் எதைச் செய்தார்களோ… எதை வாசித்தானோ… அந்த நிலைகளை இழுத்து
1.அந்த உணர்ச்சிகள் நம்மைத் தூண்டினால்
2.நாம் அருளாட ஆரம்பித்துவிடுவோம்.

காளி… மாரி… மாடசாமி… முனிசாமி.. என்று கொடூர தெய்வங்களுக்கு டும்…டும்ம்ம்…ம்ம்ம்…! என்று இசைகளை உண்டாக்கி மாமிசத்தை கொடுத்துப் படைப்பார்கள்.

ஆடை வெட்டும்போது டும்…டும்… என்றால் நம்மை அறியாமல் அருளாட ஆரம்பித்துவிடுவோம்.
1.அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்களுக்கு ஒன்றுமே தெரியாது.
2.டும்…டும்ம்…டும்ம்ம்..! என்றவுடன் கிடுகிடுவென்று ஆட ஆரம்பித்து விடுவார்கள்
3.ஏனென்றால் இந்த இசை மனித உடலுக்குள் போனபின் அதே உணர்ச்சிகள் ஆனபின்
4.எதனால் உருவாக்கினானோ இதே உணர்வுகள் இங்கு ஆட்டிப் படைக்கின்றது.

ஏனென்றால் குருநாதர் இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்கச் செய்தார். நாம் இதிலே எல்லாம் சிக்கியிருக்கின்றோம்… நம் நிலையை மறந்து இருக்கின்றோம்…!

கோவிலில் அடுத்ததாக என்ன செய்வார்கள்…?

மேலே கலசத்தை வைக்கும் பொழுது பார்க்க வேண்டும். பறந்து போய் அந்தச் சக்தியைப் பெறப் போகின்றோம் என்று தன்னை அறியாமல் ஆணா பெண்ணா…! என்று கூடப் பார்க்காமல் மோதிக் கொண்டு தான் ஆசிர்வாதம் வாங்கச் செல்வோம்.

1.அதே மாதிரி கலசத்தை எடுத்துக் கொண்டு போகும்போது பார்க்க வேண்டுமே…!
2.அந்த ஆவேசத்தை வசியம் செய்து விடுவார்கள்
3.இதைத்தான் நாம் பெறுவதற்கு போகின்றோம்.

யாகத் தீயைத் தூக்கிக் கொண்டு போகின்றோம் என்று தலையில் இரண்டு பூவைப் போடுவார்கள். நிற்க வைத்துப் பூக்களை யாகத் தீயில் போடுவார்கள். இன்று சாங்கியமாக இப்படிச் செய்கின்றார்கள். இது சாங்கிய சாஸ்திரம்.

அப்புறம் என்ன செய்வார்கள்…?

முன்னால் அந்த பலி பீடம் இருக்கின்றது. வந்து நின்று நூலைக் கட்டிச் சாமிக்குச் சக்தி ஏற்றுகின்றார்கள். இதை கற்றுக் கொள்வதற்காக மடாதிபதிகள் இருக்கின்றார்கள் நிறையப் பேர்.

வேதங்களைக் கற்றுக் கொண்டு யாகம் எப்படி வளர்க்கின்றது… பாவங்கள் எப்படிச் செய்வது…? என்று இப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

அரச காலங்களில் இப்படி எல்லாம் தவறுகள் செய்து யாரோ செய்வார்… எவரோ செய்வார்..! என்று நம்மைச் சூனியமாக்கி வைத்திருக்கின்றார்கள்.

நீ வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை…
1.யாகத்தைச் செய்தால் பாவங்கள் போய்விடும்
2.அர்ச்சனை செய்தால் பாவம் போய்விடும்
3.இதையெல்லாம் நீ செய் என்ற நிலையில்
4.உண்மையின் இயக்கத்தின் நிலையை நாம் எடுக்க முடியாமல் தடைப்படுத்திவிட்டார்கள்.
5..உண்மைகள் மறந்தே போய்விட்டது… மறந்துவிட்டோம் பொய்யைத் தெய்வம் என்று எண்ணிவிட்டோம்.

ஆனால் யாகங்கள் வேள்விகள் எல்லாம் செய்த பிற்பாடு பார்த்தால் கோவிலில் கூட்டம் நிறையப் போகும். அந்தப் பக்தியில் நாம் போவோம்.

தான் எண்ணியது நடக்கவில்லை என்றால் “என்னை இப்படிச் சோதிக்கின்றாயே…! என்று வேதனைப்பட்டுச் சொல்வார்கள். கஷ்டத்தைத் தாங்க முடியவில்லை… என்னை நீ உன்னிடம் கூட்டிக் கொண்டு போ…! என்றெல்லாம் சிலர் சொல்லுவார்கள்.

துன்பம் தாங்கமுடியாமல் இவ்வாறு சொல்வார்கள்.

செத்த பிற்பாடு என்ன இதே பக்தியில் போவார்கள். அந்த உணர்வின் வேகத்தில் இந்த ஆன்மா அங்கே போய்ச் சேர்ந்து பின் ஆட ஆரம்பித்துவிடும். ஆவியின் தன்மை தான் நமக்குள் வரும்.

1.இதைத்தான் நாம் இயக்கிக் கொண்டு இருக்கின்றோமே தவிர
2.மனிதனைத் தெய்வமாக்கும் ஆலயங்களை நாம் மதித்து நடக்க தெரியாத நிலையில் வைத்து விட்டார்கள்…!

Leave a Reply