வீட்டு வாசல்படிக்குப் போடுவதும் கல் தான்.. தெய்வச் சிலையைச் செய்து வைத்திருப்பதும் கல் தான்…!

paal abishekam murugan

வீட்டு வாசல்படிக்குப் போடுவதும் கல் தான்.. தெய்வச் சிலையைச் செய்து வைத்திருப்பதும் கல் தான்…!

 

ஞானிகள் நமக்குள் நல்ல குணங்கள் எப்படி இருக்கின்றன.. அதை எப்படிக் காக்கப்பட வேண்டும்…? என்பதைக் காட்டுவதற்காகக் கோவிலை வைத்துக் காட்டினார்கள்.

சாதாரணமாக நம் வீட்டு வாசல்படிக்கும் அந்தக் கல்லை வைத்துக் கொள்கிறோம். அதே கல்லைச் சிலையாக உருவாக்கி வைத்து அதற்கு காரணப் பெயர் வைத்து “இந்தத் தெய்வம் நல்லதைக் காக்கும்…” என்று சொல்கிறோம்.

ஆனால் காலில் போட்டு மிதித்துத் தான் அவன் அந்தச் சிலையை உருவாக்குகிறான். அதைக் குளிப்பாட்டி வைத்து அபிஷேகம் செய்தால் அதைத் தெய்வம் என்று நாம் வணங்குகிறோம் நம் கண் முன்னாடி நடக்கின்றது.

அப்பொழுது என்ன செய்கிறார்கள்..? கல் சிலையை வைத்து இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…! என்று பேர் வைத்து அதற்கு அபிஷேகங்களைச் செய்கின்றனர்

ஏன் கல்லுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்…? என்று நாம் புரிந்து கொள்வது இல்லை.
1.நாம் “தெய்வம்…” என்று நினைக்கிறோம்
2.தெய்வம் என்று சொன்னது… தெய்வம் இப்படித் தான் இருந்தது…! என்று நாம் நினைக்கின்றோம்

ஆக நல்ல குணங்களைச் சித்தரிப்பதற்கும் அது இன்னது செய்யும் என்பதைக் காட்டுவதற்காகவும் உருவத்தை அமைத்துக் கொடுக்கிறார்கள். ஆகவே பால் அபிஷேகம் செய்யும் போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

அந்தப் பாலை போல மனது நான் பெற வேண்டும். எங்கள் வீட்டில் எல்லோரும் அந்தப் பாலைப் போன்ற மனம் பெறவேண்டும். இந்தக் கோவிலுக்கு வருகிறவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.

அந்தச் சந்தனத்தைப் போல நறுமணம் பெறவேண்டும். இந்தக் கோவிலுக்கு வருகிறவர்கள் எல்லோரும் அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் பெறவேண்டும். எங்கள் குடும்பத்தில் எல்லோரும் அந்த நறுமணம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.இதுவும் உருவம்தான். இன்ன பொருள் தான்…! என்று தெரிகின்றது
2.கண்ணால்… அந்தச் சந்தனத்தை பார்த்தவுடன் அது நன்றாக மணக்கும் என்று நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகிறது அல்லவா…!
3.பாலை பார்க்கும்போது அதில் சீனியைப் போட்டு காபிதூளைப் போட்டு காபி சாப்பிடுறோம்
4.அதே பாலை வைத்துப் பால்கோவாவும் கிண்டிச் சாப்பிடுகிறோம்
5.நம்முடைய மனம் எதுவோ அந்தப் பாலை வைத்து நல்லதைச் செய்கிறோம் அல்லவா…!

அதனால் தான் அங்கே அந்தச் சிலைக்குப் பால் அபிஷேகம் செய்யச் சொல்லிப் “பாலைப் போன்ற மனம் நாம் பெற வேண்டும்… என்றும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி… அதை எண்ணி அந்த நல்ல உணர்வுகளை எடுக்கும்படிக் காட்டுகின்றார்கள்…!”

ஆனால் பாலில் கொஞ்சம் விஷம் பட்டால் என்ன பண்ணும்…? நாம் சாப்பிடுவோமா…? சாப்பிட்டால் என்ன ஆகும்..? ஆளை மாய்க்கின்றது அல்லவா…!

நம்முடைய நண்பன் இருக்கிறான். அவன் நல்லவனாக இருப்பதால் எல்லோருக்கும் உதவி செய்கிறான் எதிர்பாராமல் ஒருவன் அவனுக்குத் தீங்கிழைக்கின்றான். அதனால் நம் நண்பன் வேதனைப்படுகிறான்.

நண்பனைப் பார்த்தவுடனே அவனுடைய வேதனையான உணர்வை அந்த விஷத்தை (வேதனை என்றாலே விஷம்) நுகர்ந்தபின் என்ன நடக்கிறது..?
1.நம் உயிரில் தான் அபிஷேகம் நடக்குது
2.எதன் வழி அபிஷேகம் நடக்கின்றது…?
3.நாம் சுவாசித்தது உயிர் வழி தான் அபிஷேகம் நடக்கின்றது மூக்கு வழியாக…!
4.உயிரிலே பட்டு அபிஷேகம் நடக்கும்போது அவன் பட்ட வேதனை எல்லாம் நம் உடல் முழுவதும் பரவுகிறது.

அந்த நண்பன் வேதனைப்படும் உணர்ச்சிகள் நமக்குள் வந்தவுடன் என்ன செய்கிறது..? ரொம்பப் பழகி இருந்தோம் என்றால் தலையைச் சுற்றி மயக்கமே வந்துவிடுகின்றது. அடுத்தபடியாக யாராவது ஏதாவது சொன்னால் தெரியுமா…? தெரியாது…!

வைத்த இடத்திலிருக்கும் ஒரு நல்ல சாமானை இங்கே வைத்தேனா..! அங்கே வைத்தேனா…? என்று தேடுவோம். அல்லது கையில் இருக்கும் பொருளை எங்கேயாவது வைத்துவிடுவோம். பிறகு காணோம்..! என்று சொல்வோம்.

அந்த நேரத்தில் யாராவது சிரித்தால் கோபம் வரும். குழந்தைகள் ஏதாவது செய்தால் அவர்களை அடிக்கச் சொல்லும். இப்படிச் சிந்தனையற்ற செயல் எல்லாம் வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் யார் தவறு செய்தது…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மை தப்புப் பண்ண வைக்கிறது அல்லது நம்மை மயங்கச் செய்கிறது.

அதை மாற்றி நல்ல உணர்வுகளை நாம் நுகரவேண்டும் என்பதற்காகத்தான் அங்கே தெய்வச் சிலைக்குப் பால் அபிஷேகம் செய்து அந்த நல்ல மனதைக் கொண்டு வர வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

1.அந்தப் பாலைப் போல மனம் நாங்கள் பெறவேண்டும்…
2.எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்..
3.என் நண்பன் பாலைப் போன்ற மனம் பெறவேண்டும்…
4.அவன் தெளிந்த நிலை பெறவேண்டும் என்று அந்த நேரத்தில் எண்ணினால்
5.நம் உயிரிலே அது படுகிறது… அப்பொழுது அந்த நல்ல உணர்ச்சிகள் நம்மை இயக்கத் தொடங்குகிறது.
6.நாம் நுகர்ந்தது உயிரிலே அபிஷேகமாக இப்படி நடக்கிறது…! என்பதை
7.இவ்வளவு அழகாக நம் ஞானிகள் கொடுத்திருக்கின்றார்கள்.

Leave a Reply