முன்னோர்களின் ஆன்மாக்களுக்குச் சாப்பாடு செய்து வைத்துக் கூப்பிடுவதால் வரும் விளைவுகள்

auspicious day

முன்னோர்களின் ஆன்மாக்களுக்குச் சாப்பாடு செய்து வைத்துக் கூப்பிடுவதால் வரும் விளைவுகள்

 

சாதாரணமாக நாம் எல்லோருமே மந்திரங்களைச் சொல்லி பழக்கப்பட்டவர்கள் தான். இறந்த பிற்பாடு என்ன செய்கிறோம்…? சுட்ட சாம்பலை எடுத்துப் பாவத்தைப் போக்குவதற்காகக் வேண்டிக் கொண்டு போகிறோம்.

எங்கே…?

கங்கையில் கொண்டு பாவத்தைக் கரைத்து விட்டால் போய்விடும் என்று கரைப்போம். அடுத்து அந்த மந்திரத்தைச் சொல்லி மோட்சத்துக்கு அனுப்பிவிட்டதாக அங்கே சொல்வார்கள்.

வீட்டுக்கு வந்தவுடனே நாம் என்ன செய்கிறோம்…? எல்லோரும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகி அப்புறம் புத்தாடைகளை உடுத்தி விநாயகர் கோவிலில் கொண்டு போய் மாவிளக்கு வைத்து நெய் தீபம் இட்டு தீபாரதனை காட்டுவோம். அப்படிக் காட்டினால் மோட்ச தீபம்.

அங்கே அப்படிச் செய்த பின் அமாவாசை அன்றைக்கு என்ன செய்கிறோம்…? அம்மா அப்பா உணர்வுகள் எல்லாம் நம் உடலில் இருக்கும். அவர்களை நாம் எண்ணுவோம். எப்படி…?

அவர்கள் பிரியமாகச் சாப்பிட்ட உணவுகளை எல்லாம் வைத்து நாம் கூப்பிடுவோம். எங்களுடன் இருந்தீர்கள். இதை எல்லாம் சாப்பிடுவீர்கள். உங்களுக்குப் பிடித்த துணிமணிகளை எலலம் வைத்திருக்கின்றோம் என்று சொல்லுவோம்.

இந்தச் சாப்பாடு வைத்த உடனே அவர்கள் உணர்வு நம்மிடம் இருப்பதால் இந்த உணர்வு ஆன்மா (மணம்) ஆனபின்.. அது இங்கே வரும். நாம் இங்கே இதைச் செய்வோம். ஆனால் குடுகுடுப்புக்காரன் என்ன செய்வான்…?

நம் வீட்டு வாசல் படியில் இருந்து மண் எடுத்துக் கொண்டு போவான். தலை முடியையும் எடுத்துக் கொள்வான்.

நமக்கு ஆகியவர்கள் ஆகாதவர்கள் என்று எந்தத் தெய்வத்தை எண்ணி மந்திரங்கள எல்லாம் சொன்னோமோ அதை எடுத்துக் கொள்வான்.

இது எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வார்கள். எந்த இடத்தில் அவர்களைப் (நம் முன்னோர்களை) புதைத்தார்களோ அல்லது எரித்தார்களோ அந்த இடத்திற்குக் கொண்டு போவார்கள்.

நம் பாதம் பட்ட மண்… தலை முடி… துணி… (இதில் எல்லாம் நம் உணர்வின் எண்ணங்கள் உண்டு) இந்த மூன்றையும் வைத்து அந்த இடத்தில் சில மந்திரத்தைச் சொல்வார்கள்.

மந்திரங்களை ஜெபித்த பின் அந்த மண்னை எடுத்துக் கெடுதலான நிலைகளுக்கு அதை தூவி விடுவார்கள். ஆனால் நமக்குத் தெரியாது. மண்ணிலே பாதம் பட்ட பின் இந்த உணர்வின் தன்மை எந்த ஆவியோ அது இங்கே வந்து குவியும்.

அடுத்தாற்போல் என்ன செய்வான்…? நல்ல காலம் வருகிறது என்று குடுகுடுப்புகாரன் சொல்லுவான்.
1.இந்த உணர்வின் ஒலி/ஒளி கொண்டு நம் உணர்வின் அறிவை எடுத்து
2.நம் குடும்பத்திலே உள்ள நிலைகள் எல்லாம் எப்படி எப்படி இருக்கிறது…? என்று கட கட என்று சொல்லிக் கொண்டே வருவான்.
3.இது ஒரு வகை.

இது எல்லாம் அன்றைய அரசர்களுக்குத் தூது சென்ற நிலைகள். ஒரு குடும்பத்திலே இன்னென்ன நடக்கிறது என்ற உணர்வின் செயலாக்கங்களை இருந்த இடத்தில் இருந்து அரசனுக்குத் தூது செல்லும் முறை. அரசனால் உருவாக்கபட்ட “ஐந்தாம்படை” என்று அக்காலங்களில் வந்த நிலை.

நாடி சாஸ்திரமும் இதே நிலை தான். ஒரு அரசன் ஆன பின் மந்திரங்களை உருவாக்கித் தன் குடிமக்களுக்குத் தெய்வ பக்தி என்ற நிலையில் பதிவாக்கி விடுவார்கள்.

அத்தகைய மந்திரங்களை மக்கள் தங்களுக்குள் கவர நேர்கின்றது. இப்படிப் பல மந்திரங்களைத் தனக்குள் சேர்த்த பின் அந்தக் குடிமகன் அரச பக்தி என்ற நிலையில் இருப்பான்.

அரசன் சாகாக்கலையாக நாடி சாஸ்திரம் என்ற பெயரில் செயல்பட்டு மந்திரத்தைச் சொன்னான் என்றால் இந்த ஆன்மா அவனுக்குள் போகும். குடிமகனுக்குச் சொன்ன நிலையெல்லாம் சொல்லும். உருவாக்கும் சக்தியை எல்லாம் சொல்லும்.

அந்த நாடி சாஸ்திரத்தை வாசித்த பின் இவன் இன்னொரு கூட்டுக்குள் போவான். ஆசைப் பட்டு விடுவான் என்று அந்த நாடியில் எழுதி இருக்கும்.

இந்த உணர்வின் தொடர்பு கொண்டவன் இதை எத்தனை காலம் வைத்திருக்கலாம் என்ற இந்த நிலை எல்லாம் அதிலே வரும். அடுத்து இன்னாரிடம் கொடுத்து விடு…! என்று போட்டிருக்கும். ஆனால் அந்த மாதிரிக் கொடுக்க இன்று யாரும் இல்லை.

எனக்கு… அது தெரியும் இது தெரியும்..! என்று குடும்பச் சொத்தாக வைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட இவனுடைய ஆசை நிலை கலக்கப்படும் பொழுது அந்த அரசனும் வீழ்ச்சி அடைகின்றான்.

கூடு விட்டுக் கூடு பாயும் தன்மை இவனுக்குள் எடுத்துக் கடும் பேயாக மாறுகின்றான். ஆக மொத்தம் இந்த நாடி நாஸ்திரம் பார்த்த குடும்பம் எல்லாம் பாருங்கள். தொலைந்து போய்விடும். சொல்வது அர்த்தம் ஆகிறதா…?

1.அந்த அரசனுடைய நிலையில் அவன் சொன்ன மாதிரி மந்திர ஒலிகளைச் செலுத்தப்படும் போது
2.அரசனுக்கு வந்த ஆசைகள் எல்லாம் நம் உடலுக்குள்ளும் வரும்.. தப்ப முடியாது…!

ஆகவே இது சாகாக்கலை.

ஆனால் அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டால் அது வேகா நிலை. இந்த அண்டத்தில் உள்ள எதுவுமே நம்மை வேக வைக்க முடியாது.

அந்த நிலையைப் பெறச் செய்வதற்கு தான் துருவ நட்சத்திரத்தைப் பற்றியும் சப்தரிஷி மண்டலங்களைப் பற்றியும் அந்த மாமகரிஷிகளைப் பற்றியும் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றோம்.

எந்தக் காரணம் கொண்டு நாம் சாங்கிய சாஸ்திரங்களுக்குப் போக வேண்டியதே இல்லை. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!

Leave a Reply