செய்வினை… தோஷம்… என்பதெல்லாம் உண்மை தான்…!

spiritual lemon

செய்வினை… தோஷம்… என்பதெல்லாம் உண்மை தான்…!

 

பிரதோஷம் என்பது
1.பிறருடைய உணர்வுகள் வராதபடி
2.பிறருடைய சங்கடங்கள் வராதபடி
3.பிறருடைய ஆவிகள் வராதபடி
4.பிறருடைய பற்று வராதபடி இருப்பது தான் பிரதோஷம்.

ஆனால் இன்றைய மனித வாழ்க்கையில் ஏதாவது சாங்கியங்களைச் செய்தால் பிரதோஷம் நீங்கிவிடும் என்று செய்வார்கள். இதனால் பலன் ஏதும் இல்லை.

1.பிறருடைய உணர்வுகள் நமக்குச் சாராதபடி இருக்க வேண்டும் என்று சொன்னால்
2.அவர்களுடைய உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பிரதோஷம் ஆக்குகின்றோம்.

பிரதோஷம் அன்றைக்குப் பழங்கள் எல்லாம் வைத்துச் சாமி கும்பிட்டு அர்ச்சனை செய்து அபிஷேகம் செய்து தோஷம் வராமல் தடுக்க வேண்டும் என்றால் இது முடியாது.

ஆக மொத்தம் பிறருடைய உணர்வுகளை நமக்குள் இயக்கவிடாது “பிறருடைய அந்தத் தோஷத்தைத் தடுக்க வேண்டும்…!” என்ற எண்ணமே வருவதில்லை. பிரதோஷம் என்றால் அன்றைக்கு மந்திரங்களைச் சொல்லி இன்னொரு தோஷத்தைத்தான் சேர்த்துக் கொள்கிறோம்.

ஏனென்றால்
1.எந்த மந்திரத்தைச் சொல்லிப் பதிவு செய்து உள்ளீர்களோ
2.பிரதோஷம் அன்றைக்கு எவ்வளவு மந்திரத்தைக் காதில் கேட்டீர்களோ
3.இந்த உணர்வின் தன்மை இங்கே வந்தபின் கடைசியில் இறந்தபின்
4.அதே மந்திரத்தைச் சொன்னால் நம் ஆன்மாவை இன்னொருவர் கைவல்யம் செய்து கொள்வதற்குப் பயன்படும்.

உதாரணமாக ஒரு நோயைப் போக்குவதற்காக என்று சொல்லி அந்த மந்திரத்தைப் பதிவு செய்து கொண்டு போனால் அதே உணர்வை எடுக்கும் போது
1.இறந்த பின் இந்த ஆன்மாவைக் கைவல்யம் செய்து கொண்டு
2.இன்னொரு உடலுக்குள் நோய் தீருவதற்காக
3.இந்த ஆவியை ஏவல் செய்வார்கள்… அதற்குத் தான் பயன்படும்.

மனிதன் உடலுக்குள் விளைவைதை இத்தனை மந்திர ஜாலம் செய்து பல வேலைகளைச் செய்யப் பயன்படுத்திக் கொள்வார்கள். இப்படி ஒரு மனிதனுக்குள் விளைந்தது தான் எத்தனையோ உணர்வுகள். அதைத்தான் கரையான் மந்திரம் என்பது.

கரையான் என்ன செய்கிறது…? கட்டைக்குள் கரையான் சென்ற பின் அதிலே அதன் மலம் பட்டபின் கட்டையே மண்ணாகப் போய்விடும். அந்த மாதிரி கட்டையைச் சீக்கிரம் நம்மால் கரைக்க முடியுமா..! என்றால் முடியாது.

இதைப் போன்ற உணர்வின் தன்மை வரும் போது வேதங்களில் (அதர்வண) மூலத்தின் மூல நிலைகள் உண்டு.
1.இந்த உணர்வின் தன்மை இரண்டும் உராயப்படும் போது
2.இறந்தபின் அதைப் பிரித்து இன்னொரு மனிதனுக்குள் பாய்ச்சிச் செலுத்தியபின்
3.அந்த உடலுக்குள் இருக்க வேண்டும் என்றால் இந்த உணர்வைக் கரைத்துவிடும்.
4.பின் ஆவியுடன் (காற்றுடன்) கலக்கும்.

மீண்டும் அதற்குண்டான எதிர்மறையான நிலை ஆனபின் பொருளாக வந்துவிடும். ஒரு டப்பாவுக்குள் சிறு துவாரம் (ஊசி அளவு) வைத்தால் அதன் வழியாக அதற்குள் வந்துவிடும். மீண்டும் மாற்றினால் அது ஆவியின் நிலையாக மாறும்.

இது எல்லாம் மனிதனுக்குள் உருவான நிலைகள்…!

இதே போல பல உயிரினங்களும் உண்டு. மந்திரங்களை எடுத்து அந்த உயிரினங்களைக் கேட்க வைத்துப் பின் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்தபின் அதை வைத்துப பல தீமைகளை செய்பவரும் உண்டு.

“ஒடியர்கள்…!” என்று இருக்கின்றார்கள். இந்த அசுர உணர்வு கொண்டு பறந்து போகும் காக்காயை அவர்களின் ஒடிய மொழியில் சொன்னால் அதனின் இறக்கை பிய்ந்து துண்டாக விழும்.
1.அந்த ஒலி அதிர்வுகள் (ஒடியன் மந்திரம் என்பது) அங்கே அவ்வாறு மாற்றும்
2.எப்படி ஒரு மின்னல் தாக்குகின்றதோ அதைப் போல உணர்வின் இயக்கங்கள் கொண்டு செய்வார்கள்… இது எல்லாம் உண்டு…!
3.செய்வினை தோஷம் என்பதெல்லாம் உண்மை தான்..!
4.ஒருவருக்கொருவர் குடும்பத்தைக் கெடுக்க வேண்டும் என்ற நிலையில் செய்வினை தோஷங்கள் செய்திருப்பார்கள்.

அதிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தியானத்தின் மூலமாக “எடுத்து…எடுத்து….எடுத்து….” இந்தத் தோஷங்கள் உங்களுக்கு வராதபடி காக்க முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் வலுவை உங்கள் ஆன்மாவில் பெருக்கி விட்டால்
2.எந்தத் தோஷங்களும் உங்களைத் தாக்காது
3,நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் தீமையை நீக்கும் சக்தியை நீங்களே பெறுகின்றீர்கள். நீங்கள் தீமையை நீக்கிப் பழகி விட்டால் அடுத்து என்ன செய்யலாம்…?

யாராவது சங்கடத்தில் வருகின்றார்கள் என்றால்…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால் நல்லதாகிப் போகும்.
2.“உங்கள் குடும்பம் நல்லாகும்…!” என்று நீங்கள் இதைச் சொன்னால்
3.உங்கள் சொல் அவர்களையும் நல்லதாக்கும்.

Leave a Reply