சிரமமான நேரங்களில் நல்ல உணர்வுகளை எப்படிக் கொண்டு வருவது…?

Bhakti and Meditation

சிரமமான நேரங்களில் நல்ல உணர்வுகளை எப்படிக் கொண்டு வருவது…?

 

சாமி சிலைக்குப் பாலாபிஷேகம் செய்யும் போது சில பேரைப் பாருங்கள். வீட்டில் இருக்கின்ற கஷ்டத்தை எல்லாம் சொல்வார்கள்.
1.நான் இப்படி இருக்கின்றேனே…!
2.உனக்கு எத்தனை தடவை பாலாபிஷேகம் செய்திருக்கின்றேன்…?
3.குடும்பத்தில் எத்தனை தொல்லைகள் வந்து கொண்டே இருக்கிறது…?
4.பக்கத்து வீட்டுக்காரனைப் பார்… என்னை எப்படி எல்லாம் பேசுகிறான்..
5.கேட்கும் நேரம் எல்லாம் அவனுக்குக் காசு கொடுத்தேன்… அதைக் கேட்கப் போனால் என்னை எத்தனை திட்டு திட்டுகிறான்..? என்று
6.இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போவார்கள்.

ஆனால் கடனை வாங்கியவருக்கு எல்லாம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற பிரியம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வரவேண்டிய காசு வரவில்லை.

நாம் இரண்டு தடவை நடந்திருப்போம். மூன்றாவது தரம் போகப்போகும் போது என்ன செய்கிறோம்…?

இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்காது.. பணம் கொடுக்க மாட்டார்கள்…! என்று “பணம் கொடுக்கவில்லையே” என்று கோபமாகப் பேசி அந்த வெறுப்பாகின்றோம்.

இப்படி ஒரு தரம் வெறுப்பாகப் பேசிக் கொண்டு வந்தால் போதும். நமக்குப் பணம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள் பாருங்கள்.
1.அதற்குக் கூட அவர்களுக்கு வருமானம் வராதபடி
2.இந்த வெறுப்பாகப் பேசிய உணர்வுகள் அங்கே அவர்களுக்குத் தொல்லை செய்யும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் அங்கே வேதனைப்படும் செயலாக அவர்களை இயக்கத்தான் செய்யும். அதனால் அவர்களுக்கு வியாபாரம் இல்லாமல் போகும்.

நாம் பணம் கேட்கப் போகும் போதெல்லாம் இன்னும் கொஞ்சம் கோபித்துக் கொண்டே வருவோம். இங்கே இவர்களிடம் கோபித்துக் கொண்டு வந்த பின் அதே உணர்வுடன் அடுத்த இடத்தில் பணம் கேட்டால் அங்கேயும் வராது.

பணம் வரவில்லை என்கிற பொழுது நம் குழந்தைகள் கிட்டேயும் சீறிப் பாய்வோம். அந்த மாதிரி நேரத்தில் சொந்தபந்தம் யாராவது வந்தாலும் அவர்கள் அன்பை இழந்து விடுவோம்.

முதலில் எங்கள் வீட்டிற்குச் சாப்பாட்டுக்கு வாருங்கள்…! என்று அவர்களிடம் சொல்லியிருப்போம். ஆனால் அந்தச் சிரமான நேரத்தில் அந்தச் சொந்தக்காரர்கள் வீட்டிற்குள் வந்தால் போதும்.

இந்த நேரத்திற்கு வந்திருக்கின்றார்கள் பார்… சாப்பாட்டுக்கு…! என்று தன்னை அறியாமலேயே அவர்களைப் பகைமையாக மாற்றுகிறது. அதை யார் செய்தது….?

நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள் நம்மை அப்படிச் செயல்படுத்துகிறது.

இதை எல்லாம் நாம் தெளிவாக அறிந்து கொள்வதற்குத் தான் சிலையை வைத்து “இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…!” என்று ஆலயங்களில் காட்டினார்கள் ஞானிகள்.

அங்கே சாமிக்கு அபிஷேகம் செய்யும் பொழுது
1.பாலைப் போல் மனம் நாங்கள் பெற வேண்டும்.
2.சந்தனத்தை போல் நறுமணம் நாங்கள் பெற வேண்டும்
3.பன்னீரைப் போல் ஒரு தெளிந்த மணம் நாங்கள் பெற வேண்டும்
4.இந்த ஆலயம் வருவோர் அனைவருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
5.இந்த உணர்வை எல்லாம் நுகர்ந்தால் நமக்குள் இங்கே அபிஷேகம் நடக்கின்றது
6.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றது. (எப்படி…?)

பாலைப் போன்ற மனத்தையும் சந்தனத்தின் நறுமணத்தையும் பன்னீரின் மணத்தையும் எண்ணி ஏங்கும் பொழுது – சுவாசிக்கும் உணர்வுகள்
1.நம் உயிரிலே படும் போது “சங்கு”
2.அந்த உணர்ச்சிகள் “சக்கரம்” இயக்கம்
3.அந்த நல்ல உணர்வுகளாக நாம் இயக்க முடியும்…! என்பதனை ஆலயங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஆக நம்முடைய வாழ்க்கையின் சிரமமான நேரங்களில் நல்ல உணர்ச்சிகளை எப்படிக் கொண்டு வர வேண்டும்..? நல்ல இயக்கமாக எப்படி மாற்ற வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

Leave a Reply