“மௌன விரதம்” மூலம் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி

God of death - Yama (2).jpg

“மௌன விரதம்” மூலம் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி

“மௌன விரதம் இருக்கிறோம்…” என்று சொன்னால்
1.எப்போதுமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் படர வேண்டும்.
2.அந்த அருள் ஞானம் நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
3.அந்த அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ வேண்டும் என்ற
4.இந்த உணர்வோடு தான் தியானம் இருக்கிறேன் (ஞானகுரு).

ஏனென்றால் என்னை நினைப்பவர்கள் எல்லோரும் “அந்தக் கஷ்டம்… இந்தக் கஷ்டம்…! என்று தான் சொல்கிறார்கள். அந்த மாதிரி இல்லாதபடி நான் எப்படி உங்களுக்குச் சொல்கிறேனோ அதே போல் நீங்களும் செயல்படுத்த வேண்டும்.

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். நாங்கள் பார்த்த குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று இப்படி நீங்களும் எண்ண வேண்டும்.

உடலில் நோய் இருக்கிறது என்று சொன்னால் அதை விடுத்து விட்டு அருள் மகரிஷியின் உணர்வுகள் எங்கள் உடலிலே படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும். நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானம் செய்தாலே போதும்.

நீங்கள் நலம் பெறவேண்டும் என்று யாம் உங்களுக்குக் கொடுக்கும் இந்த வாக்கின் உணர்வுகளை நுகர்ந்தால் தொடர்ந்து உங்கள் சர்க்கரைச் சத்து குறையும். சர்க்கரைச் சத்தை மாற்றும் வலிமையும் உங்களுக்குக் கிடைக்கின்றது.

1.மருந்தால் இல்லை…!
2.ஏனென்றால் நீங்கள் எடுத்துக் கொண்ட எண்ணத்தால் தான் முதலில் அந்த நோய்கள் வந்தது.
3.ஆகவே எண்ணத்தால் தான் இதை மாற்றும் வல்லமையையும் நீங்கள் பெறவேண்டும்
4.விஞ்ஞானத்தில் இனி வரும் விஷமான தன்மைகளிலிருந்து உங்களை மாற்றி கொள்வதற்கும் இது உதவும்.

என்னுடைய தியானமே… என்னுடைய தவமே.. நீங்கள் எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும். நஞ்சான நிலைகளை அடக்கி ஒளியாக மாற்றும் ஆற்றல் பெறவேண்டும். உலகுக்கு நல்ல வழி காட்டிகளாக வர வேண்டும் என்பது தான்.

இவ்வாறு யாம் கொடுக்கும் இந்த வாக்கைப் பதிவு செய்து கொண்டு “விழித்திரு..!” என்ற நிலையில் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின் பால் செலுத்திச் சீராகத் தியானித்து அந்த அருளை வளர்த்துக் கொண்டால்
1.உங்கள் பிணிகளைப் போக்க முடியும்
2.தீமைகள் புகாது தடுத்துக் கொள்ள முடியும்.

Leave a Reply