ஞானத்தைப் பெறுவதற்கு என்று எந்தச் சட்டமும் இல்லை… எல்லோரும் பெறலாம்…!

ஞானத்தைப் பெறுவதற்கு என்று எந்தச் சட்டமும் இல்லை… எல்லோரும் பெறலாம்…! 

தியானத்தில் உங்களுக்குச் சக்தி கொடுக்கிறோம். எல்லோருக்கும் செய்வதைக் காட்டிலும் உங்களுக்கு அந்த பவரைக் கொடுக்கிறோம்.

ஆனால் பொது வாழ்க்கையின் நிலை கொண்டு உங்களைக் காட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை.
1.யாரையும் நான் (ஞானகுரு) சொல்வதைக் கேட்க வேண்டும்…! என்றோ
2.இப்படித்தான் நடக்க வேண்டும்…! என்ற நிலைக்கோ நான் கட்டாயப்படுத்தவில்லை.

தர்மத்தையும்… நியாயத்தையும்.. ஞானிகளின் உணர்வுகளையும்… அது எப்படி இயக்குகிறது..? என்ற நிலைகளையும் உங்களுக்குள் பதியச் செய்கிறேன். அதை நீங்கள் வளர்த்துக் காட்ட வேண்டும்.

“இங்கே இப்படித்தான் சட்டம்…!”” என்ற நிலைகள் கொண்டு வந்தால் அந்தக் கட்டுப்பாடு தளர்ந்து விடும். சில நாள் கூட நிற்காது.

ஆனால் அந்த ஞானிகள் கண்டுணர்ந்த உண்மையின் நிலையை பதிவு செய்யப்படும்போது இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் அது உங்களை உயர்த்திக் காட்டும்.
1.அதன் வழியில் உங்கள் மனதால் ஏற்றுக் கொண்டால் போதுமே தவிர
2.கட்டுப்பாடு எல்லாம் ஒரு திறை மறைவுதான்.

எந்த நிலைகள் எதன் வழி வந்தாலும் ஒரு சட்டத்தை இயற்றி இப்படித்தான் வர வேண்டும் என்று வந்தால் அவருடைய உணர்வுகள் அந்த கட்டுக்கோப்பு நிலைத்திருக்காது.

அந்த இயற்கையின் உண்மை நிலைகளை எடுத்து விரிவாக்கி அருள் ஞானிகளின் பாதையைப் பதிவாக்கி அதை உங்கள் நினைவுகளில் இருக்கச் செய்து அதன் வழிகளில் நீங்கள் இயங்கத் தொடங்கினால் அது இயங்கும். அப்படி இருந்தால் தான் மாற்ற முடியும்.

1.அதனால்தான் உங்கள் உயிர் எதை இயக்குகின்றது என்றும்
2.அது எப்படி உருவாக்குகிறது என்றும் சொல்கின்றோம்.
3.நாம் எண்ணிய எண்ணங்கள் எப்படி இயங்குகின்றது…?
4.இதிலிருந்து நாம் எப்படி உருவாக்க வேண்டும்…? என்று தெளிவாக்குகிறோம்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். நாம் உருவாக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள். அப்படியானால் நாம் எதை உருவாக்க வேண்டும்..?

தீமையை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலுக்குள் உருவாக்க வேண்டும். நாமும் அந்த மெய் ஞானிகளைப் போன்று வளர வேண்டும். அது தான் கார்த்திகேயா.

குருநாதரை (ஞானகுருவை) நான் ரொம்ப மதிக்கிறேன். அவர் மிகவும் உயர்வாகச் சொல்கிறார்…! என்று போற்றி விட்டுக் கடைசியில் கொண்டு போய்க் குழியில் தள்ளி விடாதீர்கள். அது எனக்குத் தேவையற்றது.
1.நான் யாருடைய போற்றுதலுக்கும் வரவில்லை.
2.உங்களை உயர்ந்த நிலைகளில் எண்ணும் நிலைகளுக்கு குரு கொடுத்த ஆணைகளைச் சிறப்பித்துப் பழகுங்கள்
3.இதை நாம் பழகி அதை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

ஏனென்றால் நாம் பிறருக்குச் சொன்னாலும் நிற்காது. இங்கு நாம் அமைத்துக் கொண்ட நிலைகளில் எப்படி உருவாக்க வேண்டும் என்று அதை நாம் இன்னும் தெளிவான நிலைகளில் மகரிஷிகளின் அருள் வழியில் விரிவாக்கிக் கொண்டு போக வேண்டும்.

Leave a Reply