மகரிஷிகள் சென்ற பாதையில் நாம் செல்ல வேண்டும்

Spiritual path

மகரிஷிகள் சென்ற பாதையில் நாம் செல்ல வேண்டும்

 

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எந்த நிமிடமும் எடுக்கக்கூடிய சக்தியை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். அதைப் பற்றுடன் பற்ற வேண்டும்.
1.எந்த நிமிடம் ஆனாலும் எந்தக் குறையப் பார்த்தாலும் “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்ட வேண்டும்
2.ஈஸ்வரா…! என்ற சொல்லை எப்பொழுதும் மறக்கக் கூடாது.
3.ஈஸ்வரா என்பது நம்மை உருவாக்கிய உயிர்.

ஆகையினால் எத்தகைய நிலை வந்தாலும் அவர்களின் குறையை நீக்கிவிட்டு “ஈஸ்வரா…!” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கொண்டுவர வேண்டும்.

உயிருடன் ஒன்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வைப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இது வளர்ந்தவுடன் நம் குறைகளை நீக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மலரைப் போன்ற மணமும் அனைவரும் பெற வேண்டும். அவர்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும். எங்கள் பார்வை அனைவரையும் நல்லவராக்க வேண்டும் என்று இதை வளர்த்துப் பழக வேண்டும்.

1.நாம் நியாயத்தை நினைப்போம்.
2.ஒருவர் குறை சொன்னால் அந்தக் குறையை வளர்த்துவிடுவோம்.
3.இரண்டு முறை சொல்லி விட்டால் அந்த வித்து வளர்ந்துவிடும். அந்தக் குறைதான் வளரும்.
4.அப்பொழுது நமக்குள் மனப் போராட்டமே அதிகம் இருக்கும்.
5.பின் நாம் போகும் பாதைக்கே இது இருள் சூழும்.
6.அதனால் நமது எல்லை எது…? அந்த மகரிஷிகளின் அருள் வட்டம்தான்…! அந்த எல்லையை அடைய வேண்டும்.

அந்த எல்லையை அடைய வேண்டுமென்றால் அவர்கள் உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும். அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இது நமது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். பொருள் கண்டு\ணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று இதைச் சிறிது நாள்களுக்குச் சொல்லிப் பாருங்கள்.

1.நம் பார்வை மற்றவர்களைத் தவறிலிருந்து மாற்றும்.
2.அப்படியும் அவன் தப்பு செய்கிறான் என்றால் அவனிடம் இருள் இருக்கும்.
3.அதனை விலக்கித் தள்ளிவிட வேண்டும்.
4.அவன் நம்முடன் அணுகி அருகில் இருந்தாலும் அவன் இருள் நம்மைச் சாராது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தைப் பாய்ச்சி அவன் இருள் நீங்க வேண்டுமென்று தாக்கப்படும் பொழுது இருள் விலகுகின்றது.
1.இந்தக் கட்டாயத்திற்கு நாம் வந்துவிட்டால்
2.அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் நாம் நிச்சயம் போக முடியும்.

Leave a Reply