நல்லது செய்தாலும் அதிலே குறை காணும் நிலைளை எப்படி நீக்குவது…?

Spiritual Treasure - hunt

நல்லது செய்தாலும் அதிலே குறை காணும் நிலைளை எப்படி நீக்குவது…?

 

அருள் ஞானத்தை எப்படிப் பெருக்குவது…? வாழ்க்கையில் வந்த தீமைகளை எப்படி அடக்குவது…? என்ற நிலைக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம்.

எனக்காக அல்ல… எனக்கென்று நிலைகள் வரும்பொழுது என் நிலைகளே தனியாகப் போய்விடும். ஈஸ்வரபட்டர் கொடுத்த கட்டளைப்படி அவரது ஆணைப்படி தான் இதைச் செய்கின்றோம்.

எல்லோரது நிலைகளும் இருள் சூழ்ந்து உள்ளது. அந்த மெய் ஞானிகளின் உணர்வின் ஒலிகளை நீ எழுப்பு. அதன் வழியிலே அந்த ஒளியின் நிலை நீ பெறு…! எல்லோருக்குள்ளும் அந்த மெய் உணர்வுகளைப் பெருக்கு. அனைவரும் அந்த நிலையைப் பெறச் செய்…! என்று குருநாதர் சொன்னார்.

நெல் விளைய வேண்டும் என்றால் உமியையா போடுவார்கள்…?
1.வரக்கூடிய நிலைகள்… ஒருவன் தவறு செய்கிறான் என்றால்
2.அந்தத் தவறுக்குள் நாம் நன்மை எடுக்கும் நிலைகளையே கொண்டு வர வேண்டும்.
3.அவன் தவறு செய்கிறான் என்று தெரிந்தால்
4.அந்தத் தவறுகளை நாம் செய்யக் கூடாது…! என்ற எண்ணங்களே நமக்குள் வர வேண்டும். (இது முக்கியம்)

அவன் குறை செய்கிறான் என்றால் அந்தக் குறைகள் நமக்குள் வந்தே தீரும். அதை நாம் நீக்குதல் வேண்டும். எப்படி…?
1.உமி இல்லை என்றால் அரிசி இல்லை.
2.ஏனென்றால் எதிலும் எதனின் இயக்கத்திலும் அந்த விஷம் இல்லை என்றால் நல்ல உணர்வின் இயக்கம் இல்லை.
3.இதைப் போன்றுதான் வாழ்க்கையில் வரும் உணர்வின் இயக்கங்கள் எல்லாவற்றிலும் இந்த விஷம் கலந்துதான் வருகின்றது.

சூரியன் அல்ட்ரா வயலெட் என்ற நிலைகளில் விஷத்தை எப்படிப் பிரிக்கின்றதோ இதைப்போல் நாம் நுகர்ந்து அறியப்படும்போது அந்த ஞானியின் உணர்வை இதனுடன் சேர்த்து இந்த விஷத்தின் தன்மையை அடக்குதல் வேண்டும்.

அதுதான் அங்குசபாசவா…!

நாம் நஞ்சை அடக்கும் வல்லமை பெற்றவர்கள் என்று விநாயகத் தத்துவத்தில் தெளிவாக்கப் பட்டுள்ளது. அதை நாம் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

1.எப்படி எல்லாம் குறைகள் நம்மை அறியாமல் வருகிறது…?
2.அதனால் நம் உணர்வுகள் எப்படி மாறுகிறது.
3.அதை நாம் எப்படி அருள் வழியில் நல்லதாக மாற்ற வேண்டும் என்ற நிலையில்
4.ஒவ்வொரு நொடியிலும் நாம் தெளிவாக்கிக் கொண்டுவர வேண்டும்.

எப்படி உலகிற்குச் சூரியன் குருவாக இருந்து உலகத்தையும் மற்ற பிரபஞ்சத்தையும் இயக்குகின்றதோ இதைப் போலவே நம் குரு காட்டிய நிலைகள் கொண்டு நமக்குக்ள் பகைமையற்ற உணர்வுகளையும் ஒழுக்கம் என்ற நிலைகளையும் நாம் வளர்க்க வேண்டும்.

Leave a Reply