நன்றாகப் பழகியவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பழிச் சொல்கள் எப்படி வருகின்றது…?

Polaris soul protection.jpg

நன்றாகப் பழகியவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பழிச் சொல்கள் எப்படி வருகின்றது…?

இரண்டு பேர் நண்பர்களாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஆகிச் சண்டை இட்டுக் கொண்டார்கள் என்றால் என்ன ஆகின்றது..?

ஒருவரின் செயலைப் பார்த்து “நீ இப்படிச் செய்துவிட்டாயே…!” என்று பழிச் சொல்லாக மாறுகிறது. அதைக் கேட்ட பின் பதிலுக்கு அவரும் “நீ மட்டும் ரொம்ப யோக்கியமா…?” என்று சொல்வார்.

இராமன் அம்பை எய்தான்…! என்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். ஆகவே அப்பொழுது அந்த இரண்டு நண்பர்களுக்குள் தவறு செய்தவர் யார் என்ற முடிவு தெரியாது. ஆனால் சந்தர்ப்பம் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகிறது.

இந்த உணர்வுகள் ஊட்டப்படும் போது இருவருக்குள்ளும் பழிச் சொல்லாக மாறுகின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் நம்மை எது இயக்குகின்றது…?

இரண்டு பேரில் யார் தவறு செய்தார்கள் என்று அந்த இருவருக்குமே தெரியாது. கோபப்பட்டுச் சண்டை போட்டார்கள் என்றால்
1.நான் ஒன்றும் செய்யவில்லை.. அவர் தான் செய்தார் என்பார்
2.இரண்டமாவர் நான் ஒன்றும் செய்யவில்லை அவர் தான் அப்படிப் பேசுகிறார் என்பார்
3.ஆக இதிலே அந்த முடிவையே காண முடியாது… காண முடிகின்றதா…?

அதே சமயத்தில் இதைக் கேட்டு நியாயம் பேசுவதற்காக ஒருவர் வருவார். இரண்டு பேருக்கும் சார்பாக வந்து
1.சரி போங்கள்…! என்று உண்மையை எடுத்துச் சொன்னால்
2.உடனே அவர்கள் மேலேயும் பகைமை ஆகும்.
3.எப்படியும் ஒருவரிடம் பகைமை ஆகிவிடும்

இரண்டு பேரும் சமாதானமாகப் போங்கள்… என்று மத்தியஸ்தம் சொனால் “அவருக்கு என்ன…? அவருக்கு வேண்டியர் போல இருக்கிறது. அதற்காக இப்படிப் பேசிவிட்டுப் போகிறார்…!” என்பார்கள்.

ஒர் உணர்வின் தன்மை ஒன்றிலே மாற்றப்படும் போது அந்த மாறுபட்ட உணர்வு நம் நல்ல குணங்களை அது சீராக இயக்க விடாதபடி செயல்படுத்துகின்றது.

எது…?

நீங்கள் காரத்தை எடுத்து அதை எதிலே கொண்டு போய்க் கலந்தாலும் அதனுடைய ருசி கெடத்தான் செய்யும். ஆனால் மற்ற “சப்…” என்று இருக்கும் பொருளிலே அந்தக் காரத்தைச் சேர்த்தால் உணர்ச்சியைத் தூண்டி அந்தச் சுவையின் உணர்வுகளை நமக்குள் உணரச் செய்கின்றது.

இதைப் போல தான் வாழ்க்கையில் அறியாது வரக்கூடிய தீமைகளிலிருந்து நமது சொல்லின் நிலைகளைப் பக்குவப்படுத்தும் அந்த நிலைகளைப் பெறுதல் வேண்டும்.

அந்தப் பக்குவ நிலை பெறச் செய்வதற்காக வேண்டித்தான் பகைமைகளை அகற்றி ஏகாந்தமாக வாழும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களைப் பெறச் செய்கின்றோம்

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் சென்றால்
1.எது நம்மை இயக்கியது…?
2.தவறான சொல்கள் எப்படி வருகிறது…?
3.பகைமை எதனால் வருகிறது…?
4.பகைமைகளை அகற்றி எப்படி ஒன்றி வாழ வேண்டும் என்ற உண்மைகளை உணர்த்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

Leave a Reply