துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… ஓ..ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்

Om Eswara - OM ESWARA

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… ஓ..ம் நமச்சிவாய…! என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்

 

இன்று எடுத்துக் கொண்டால் விஷத் தன்மையால் பெரும் சூறாவளிகள் கிளறப்பட்டுக் கட்டிடங்கள் எல்லாம் தூசிகளைப் போலப் பறக்கும் நிலையும் அதே சூறாவளி கடலில் தாக்கப்படும் பொழுது அது நீர் நிலைகள் அனைத்தும் ஊருக்குள் கொண்டு வருவதும் இப்படிப் பேரழிவுகள் வந்து கொண்டிருக்கின்றது.

எந்த விஞ்ஞானத்தைச் செயல்படுத்தினார்களோ அந்த விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட விஷத்தின் தன்மைகள் அடர்த்தி அடைந்து அது வலுவாகிய நிலையில் அதை எல்லாம் சூரியன் கவர்வதனால்
1.ஒன்றுக்கொன்று எதிர்நிலை கொண்டு மோதி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையும்
2.நாம் தேடிய செல்வங்களும் இந்த உடல்களும் எப்பொழுது எந்த நிமிடத்தில் அழியும் என்ற நிலைகளை
3.நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலைகள் கொண்டு உலகையே அழிக்கும் நிலைக்கு வந்து விட்டது.

இதற்குள் நம் உணர்வின் தன்மை எதிலும் அழியாத உணர்வு கொண்ட ஒளியின் உணர்வாக ஒளியாக மாற்றச் செய்வதே இந்தத் துருவ தியானத்தின் நோக்கம்.

இந்த உலகில் வரும் விஷத் தன்மைகள் நம்மைப் பாதிக்காது… “விஷத்தின் தன்மை தாக்குதலால் ஏற்பட்ட உயிர் ஒளியாக மாறுவது போல்…” எத்தகைய விஷத் தன்மை தாக்கினாலும் அந்த உணர்வுகள் ஒளியாக மாறி நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த விஷத்தை அடக்கி ஆட்சி புரியும் தன்மைக்கு வர வேண்டும்.

நமது உடலில் நஞ்சு கலந்த உணர்வுகள் இருப்பினும் உடல் அதை மலமாக மாற்றுகின்றது. ஆனால் அதிகமான நஞ்சுகள் உடலில் கலந்தால் அது மனிதனையே வீழ்த்துகின்றது.

சூரியனோ இத்தகைய விஷத் தன்மை கொண்ட எல்லாவற்றையும் மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குகின்றது. அதைப் போல நஞ்சான உணர்வு வருவதைப் பிரித்திடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் இதைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.

இல்லை என்றால் நம் வாழ் நாளில் மீண்டும் கீழான உடலுக்குள் தான் போக வேண்டியதிருக்கும.
1.இந்தப் பூமி இருக்கத்தான் செய்யும்… ஆனால் மாற்றங்கள் இருக்கும்…!
2.இந்த மனித உடலில் உணர்வுகள் மாறும் பொழுது மனித உடல்கள் மாறும்.
3.இன்று மனித உடலாக இருந்தாலும் அடுத்து மனித உடல் அல்லாத நிலைகள் தான் உருவாக்க முடியும்.
4.வேதனை என்ற உணர்வுகளிலிருந்து மீள முடியாத துயர் நிலையே தான் இருக்கும்.

ஏனென்றால் இந்த மனித உடலில் “கோடிக்கரை…” என்ற நிலைகளில் கடைசி நிலையில் நாம் இருக்கின்றோம். இந்த உயிருடன் ஒன்றி இனிப் பிறவியில்லா நிலை என்ற முழுமையைப் பெற நாம் முயற்சிப்போம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.சதா அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.ஓ…ம் நமச்சிவாய… ஓ..ம் நமச்சிவாய… என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே வருவோம்.

நமது வாழ்க்கையில் எதிர் வரும் தீமைகளை
1.நமக்குள் சாராது
2.நமக்குள் அதை வளர்ந்திடாது
3.நமமக்குள் அதைப் பெருக்கிடாது தடுத்துப் பழகுவோம்.

இந்த உடலான கோடிக்கரையிலிருந்து “தனுஷ்கோடி…!” எல்லாவற்றையும் அடக்கிடும் அந்த ஒளியின் தன்மையை நாம் பெறுதல் வேண்டும். நம்மால் நிச்சயம் முடியும்.

Leave a Reply