தியானம் செய்யும் அன்பர் தன்னுடைய கோபத்தைக் குறைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி

guru arul oli

தியானம் செய்யும் அன்பர் தன்னுடைய கோபத்தைக் குறைத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி 

நாம் தியான வழியினைக் கடைப்பிடிப்பவர்கள் யாராவது கொஞ்சம் குறையைச் செய்தாலும் உடனே அவருக்குக் கோபம் வரும். சாமி (ஞானகுரு) சொன்ன முறைக்கு மாறாக யாராவது குற்றங்கள் செய்ய ஆரம்பித்தாலும் உடனே அந்தக் குற்றத்தை உணர்த்தி அதைச் செய்யக் கூடாது…! என்பார்.

1.நாம் எதற்காக இந்தத் தியான வழிக்கு வந்தோம்…?
2.நாம் எப்படி இருக்க வேண்டும்..?
3.குருநாதர் (ஞானகுரு) சொன்ன நிலைகள் என்ன…? என்பதை உறுதிபட எடுத்துச் சொல்வார்.

பிறருடைய குறைகளை வளர விடாதபடி குறையைக் கண்டாலே உடனே அவருக்குக் கோபம் வந்திடும். கோபம் வந்தது என்றால் உடனே என்னிடம் (ஞானகுரு) வருவார்.

சாமி…! அவர்கள் தவறு செய்கிறார்கள். அதைப் பார்த்ததும் எனக்குக் கோபம் வந்துவிட்டது.
1.ஆனால் எனக்கு அந்தக் கோபம் வரக்கூடாது
2.குரு அருள் எனக்கு வேண்டும்.
3.குரு அருளால் எனக்கு அந்தத் துருவ நட்சதிரத்தின் பேரருளும் பேரொளியும் கிடைக்க வேண்டும்.
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் எப்பொழுதும் பெற வேண்டும்.
5.என்னுடைய கோபம் குறைய வேண்டும் என்பார்.
(என்னுடைய உபதேசத்தை அடிக்கடி கேட்டுக் கொள்வார்.)

குழம்பு வைக்கும் போது காரத்தை எந்த அளவுக்குச் சமப்படுத்தி அளவாகப் போடுகிறோமோ அந்த அளவுக்கு ருசியாக இருக்கிறது. அதே மாதிரி எனக்குக் கோபம் வந்தாலும்… அதை நல்ல வழியில் செயல்படுத்தக் கூடிய நிலை வர வேண்டும்…! என்று என்னிடம் கேட்பார்.

அவருடைய மனைவி மீது கூட அடிக்கடி கோபித்து கொள்வார். அதே சமயத்தில் குழந்தைகளிடமும் கூட திடீரென்று எதிர்பாராத நிலைகளில் கோபமாகப் பேசுவார்.

உணர்ச்சிவசப்பட்டு அந்தக் கோபம் அவருக்கு வருவதன் காரணம் அவர் ஆரம்ப நிலைகளில் பலவீனமான நிலைகள் கொண்டு எத்தனையோ விதமாக பயமான உணர்வுகளை எடுத்து வளர்த்துள்ளார்.

பயத்திலிருந்து ஓரளவுக்குத் தப்பி வந்தாலும் “குற்றம்…” என்று பார்த்ததும் அதனால் மேலும் தவறுகள் ஏற்பட்டு விடுமோ…! என்று அந்தப் பய அலைகளை எடுத்துவிடுகின்றார்.

அந்தப் பயங்கள் வரும்போது அவர் சிந்திக்கும் தன்மை இழக்கின்றார். சிந்திக்கும் தன்மை இழக்கும் போது கோபம் என்ற நிலை வருகிறது. அவர் உடலிலே அதிகமான நிலைகளில் பயம் அலைகளையும் கோப அலைகளையும் பதிவு செய்ததனால் அதை உடனடியாக அவரால் குறைக்க முடியவில்லை

இந்தத் தியான வழிக்கு வந்த பின் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுகக் குறைத்து ஓரளவுக்கு அமைதி என்ற நிலைக்கு வந்து சேர்ந்தார். தன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் நம் தபோவனத்திற்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்றார்.

தன்னுடைய வாழ் நாளில் அவர் குரு அருளைத் தன்னுடைய சேவையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். “அந்த மகரிஷிகள் பெற்ற உயர்ந்த சக்திகள் எல்லோரும் பெறவேண்டும்…” என்ற ஆர்வமும் அவரிடம் அதிகமாக இருந்தது.

இருந்தாலும் அவர் உடலில் சேர்த்துக் கொண்ட பழைய உணர்வுகள் தூண்டப்பட்டு பிறிதொருவர் தவறு செய்யும் பொழுது அதை நுகர்ந்து தன் ஆன்மாவில் சேர்க்கப்படும் போது சில நேரங்களில் அவருக்கு அந்த கோபம் வந்துவிடுகின்றது.

ஆனால் கோபம் வந்தால் முதலில் பயப்படுவார். அதே சமயத்தில் அந்தக் கோபம் என்ற நிலை வரப்படும்போது வீரியம் என்ற வலுவும் வருகிறது. பயம் வரும் போது சிந்திக்கும் தன்மை இழக்கின்றது. ஒரு குற்றத்தைக் கண்டபின் கோபம் அதிகமாக வரப்படும்போது இதுவும் சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.
1.ஆனால் அந்தப் பயம் என்ற நிலைகள் மாறுகின்றது.
2.பயம் என்ற நிலை மாறும்போது “எனக்கு ஏன் கோபம் வந்தது…?” என்ற நிலைகளில் திருப்பி அவர் சிந்திக்கும் போது
3.“தன்னை அறியாமலே கோபம் வருகின்றது…! அதை எப்படி மாற்றுவது…? என்ற எண்ணத்தில் உடனே என்னிடம் (ஞானகுரு) வந்துவிடுவார்.

நான் வெளியூரில் இருந்தாலும் சரி… என்னிடம் சொல்லி அதைக் கேட்டு “சாமி நான் திருந்த வேண்டும்…!” என்பார். எனக்கு ஏன் கோபம் மீண்டும் மீண்டும் வருகிறது..? அந்த உணர்வுகள் மறுபடியும் எப்படி இயக்குகிறது…? என்ற விளக்கங்கள் கேட்பார்.

அதற்குண்டான விளக்கங்களை எடுத்துச் சொல்லி உணர்ச்சிவசப்படும் அந்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் ஒளியை எப்படி எடுக்க வேண்டும்…? அந்தக் கோபத்தின் வலுவைக் குறைத்துச் சிந்திக்கும் வலுவை எப்படிக் கூட்ட வேண்டும் என்றும் தெளிவாக்குவேன்.

அதன் வழியில் அதைக் கடைப்பிடித்து அந்தக் கோபத்தை மேலும் மேலும் குறைத்து வந்தார்.

Leave a Reply