வாழ்க்கையில் வரும் இன்னல் கஷ்டம் முதலியவைகளை நாம் கண்டிப்பாக மறந்து பழக வேண்டும்

mind-powers

வாழ்க்கையில் வரும் இன்னல் கஷ்டம் முதலியவைகளை நாம் கண்டிப்பாக மறந்து பழக வேண்டும்

 

1.யாம் (ஞானகுரு) கொடுத்த சக்தியின் துணை கொண்டு,
2.தொழில்களிலோ, மற்றவைகளிலோ சந்தர்ப்பத்தால் ஏற்படும் தீமைகளைப் பார்த்து,
3.“இப்படித் தீமையாக இருக்கின்றதே…!” என்ற உணர்வை நமக்குள் வலுப்படுத்தி விடக் கூடாது.

அருள் ஒளியின் உணர்வை நாங்கள் பெறவேண்டும் என்று இதனின் உணர்வைக் கட்டாயப்படுத்தினால் இந்த வாழ்க்கையில் வரும் துன்பத்தை நீக்கும் வலிமை பெருகுகின்றது.

நம்முடைய எண்ணத்திற்கு வலிமை கிடைக்கின்றது. இதன் துணை கொண்டு உங்களுடைய வாழ்க்கையைச் சீராக அமைக்க வலிமையான உணர்வுகள் கிடைக்கின்றது.

1.இதை வைத்து எத்தகைய தீமைகளையும் மாற்றலாம்.
2.எத்தகைய பகைமையை மாற்றலாம்.
3.கடுமையான நோய்களையும் போக்கலாம்
4.அருள் ஞானத்தின் உணர்வை, நமக்குள் அறிவாகத் தெரியலாம்.

தீமையின் உணர்வுகள் பல நமக்குள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தினையும் சப்தரிஷி மண்டலங்களையும் கட்டாயப்படுத்தி ஒரு பத்து நிமிடமாவது எண்ணுங்கள்

அந்த எண்ணமே, அதனின் உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள உதவும். ஏனென்றால்
1.எண்ணியதைத்தான் உங்கள் உயிர் உருவாக்குகின்றது.
2.யாரோ செய்வார்… எவரோ செய்வார்…! என்ற எண்ணங்களை முதலில் விடுத்துப் பழகுங்கள்.

நாம் எண்ணியது எதுவோ அதை நாம் நுகர நேரும் பொழுது அதன் உணர்வின் அறிவாக அறிகின்றோம். நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் உருவாக்குகின்றதென்ற நிலையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில், குருநாதர் காண்பித்த அருள்வழியில், குரு அருளை நீங்கள் துணையாகக் கொண்டு, உங்களுடைய வாழ்க்கையில் பேரின்பமும் பெருவாழ்வும் பெற வேண்டுமென்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் நம்முள் அருள் ஞானத்தைப் பெருக்குவோம். அருள் ஆனந்தத்தைப் பெருக்குவோம். இனிப் பிறவியில்லா நிலை அடைவோம்.

பிறவியில்லா நிலையை அடையும் அருள் வாழ்க்கையாக, நாம் இந்த வாழ்க்கையை அமைப்போம்.

Leave a Reply