நல்லதைக் காக்கும் சக்தி

Fool proof protection

நல்லதைக் காக்கும் சக்தி 

நாம் நகை செய்யும்போது பித்தளையும், செம்பும், பொடி செய்து வைத்து இவை இரண்டையும் நெருப்பில் காட்டியவுடன் அந்தத் தங்கச் செயின் ஒன்றாக ஒட்டிக் கொள்கின்றது.

வெறும் தங்கத்துடன் தங்கத்தை வைத்துச் செயினாக செய்ய வேண்டுமென்றால் முடியாது. இரண்டிற்கும் ஒரு அளவான சூடு வேண்டும். வெள்ளியும் செம்பும் கலந்து வைத்தவுடன் இது சீக்கிரம் சூடாகி கரைந்து இத்துடன் போய் ஒட்டிக் கொள்கிறது. அதைப்போல
1.நாம் நல்ல மனது எவ்வளவு தூரம் இருந்தாலும்
2.நல்ல மனது கொண்டே நம்மைக் காப்பாற்ற முடியாது.

நாம் நல்ல மனதுடன் போய்க் கொண்டிருக்கிறோம். எதிற்புறம் ஒரு மாடு பயத்தினாலோ அல்லது வேறு காரணத்தினாலோ மிரண்டு ஓடி விருகிறது. அப்பொழுது அது வெளிப்படுத்தும் மூச்சலைகள் நாம் கண்ணில் பார்த்தவுடன் அந்த உணர்வை நாம் சுவாசிக்க நேருகிறது.

அது எதைக் கண்டோ பயந்து மிரண்டு தன்னையறியாமல் கட்டுக் கடங்காமல் ஓடி வருகிறது. அப்படி ஓடி வரும்போது நம் மீது மோதினால் என்ன ஆகும்…?

நம் உயிருக்கே ஆபத்து. நம் வாழ்க்கையைச் சரிபடுத்த முடியாது.

அப்பொழுது அந்த மாடு வெளிப்படுத்தும் மூச்சில் நம் கண் புலனறிவு ஈர்த்து உயிரிலே பட்டவுடன் அது வேகமாக நமக்குள் பயத்தை ஊட்டி அந்த மாடு மிரண்டு வருவதில் இருந்து நம்மைத் தப்பிக்கச் செய்கின்றது.

1.அப்பொழுது அந்த வாழ்க்கை என்கிற செயின் ஒழுங்காக இருக்கிறது.
2.இல்லாவிட்டால் நம் வாழ்க்கையில் நல்ல குணத்தை நல்லதை எண்ணியதைக் காப்பாற்ற முடியாது.
3.இந்த உடலில் உயிர் இருக்கும் வரைக்கும்தான் செயல்படுத்த முடியும்.
4.இந்த உயிர் போய்விட்டால் ஒன்றுமே இல்லை.
5.இந்த உடலுக்குள் இருந்து உயிர் இயங்க வேண்டுமென்றால் உடல் நலமாக இருக்க வேண்டும்.

அந்த மாடு மிரண்டு ஓடிப் வரப்படும்பொழுது அந்த உணர்வுகள் பட்டுத்தான் நம்மைக் காப்பாற்ற முடியும். ஆக நம் உடலைக் காப்பாற்றிக் கொள்கிறோம். அதே சமயம் பயமான எண்ணங்களை நாம் சுவாசித்து நம் உடலுக்குள் சேர்த்துக் கொள்கிறது.

நாம் செம்பும் வெள்ளியும் சேர்த்து தங்கத்துடன் ஒட்ட வைக்கும்போது இரண்டும் அதனுடன் கலந்து விடுகின்றது. மறுபடியும் நெருப்பில் போட்டு உருக்கினாலும். இவை இரண்டும் கலந்தேதான் இருக்கும்.
1.நீங்கள் அடிக்கடி அழித்து அழித்துப் பற்ற வைத்துக் கொண்டே இருந்தால்
2.செம்பும் வெள்ளியும்தான் தேறும், கடைசியில் தங்கம் குறைந்துப் போகும்.

இதே மாதிரி நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைப் பாதுகாக்கும் எண்ணத்தை எடுத்து எடுத்து நாம் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு சரீரமாக மாற்றி எல்லா துன்பத்தையும் துடைக்கக் கூடிய ஆற்றல் மிக்க சக்தியாகப் பெற்று வந்துள்ளோம்.

இவ்வளவு உயர்ந்த தங்கத்தைப் போல சுத்த தங்கத்தைப் போல அதே மாதிரிப் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் அந்த உயர்ந்த சக்தியின் நிலைகளை நமக்குள் தங்கமாக வைத்திருக்கிறோம்.

வாழ்க்கை என்கிற நிலைகளில் ஒவ்வொரு நிமிடமும் பயம் ஆத்திரம் எல்லா நிலையும் வருகிறது. எல்லாம் பித்தளை செம்பு வெள்ளி போன்றவை, அடிக்கடி இவை நம் உடலில் சேர்ந்து விட்டால் நம் உயிரான வெப்பம் இவையெல்லாம் சேர்த்துக் கலந்துக் கொண்டே போய்க் கொண்டிருக்கும்.

நல்ல மனதாக இருப்போருக்கு இப்படி ஆகிறது. இன்று நல்லதைப் பற்றி எண்ணுகிறோம். அடுத்து யாராவது தப்பான நிலைகளைப் பார்த்து விட்டால், அந்த உணர்வு வந்து அதையும் நாம் சேர்த்துக் கொள்கிறோம்.
1.இப்படி நம் நல்லகுணத்தை அழித்து விடுகின்றது.
2.இதை நாம் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!

வாழ்க்கையில் எப்படி இருந்தாலும் குறையில்லாமல் நாம் வாழமுடியாது. நாம் ரோட்டில் போகும்போது குறையான நிலைகளை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. யாராவது சண்டை போடுகிறார்கள் என்றால் அதைப் பார்ககாமல் இருக்க முடியாது.

இருவர் சண்டை போடும்போது யார் எதற்கு என்கிற வகையில் நாம் கேட்போம். சும்மா போய்க் கொண்டிருக்கும்போது அடித்தான் உதைத்தான் அடித்து ரொம்பக் காயமாகிவிட்டது என்று சொல்வார்கள்.

அடப் பாவிப்பயலே…! இந்த மாதிரி அடித்தானே என்று நமக்குள் பயமும் ஆத்திரமும் கோபமும் வருகிறது. ஏனென்றால் அந்த உணர்வுப் பட்டு அதற்குத் தகுந்த எதிர்மறை நமக்குள் உருவாகிறது.

அப்பொழுது நாம் அதைச் சுவாசிக்கும்போது உயிரில் பட்டு உணர்வு உமிழ் நீராக மாறுகிறது. நம் உடலில் சேர்ந்து விடுகின்றது. அதைத் துடைக்க வேண்டுமல்லவா…!

ஆகவே தீமையோ கஷ்டமோ துன்பமோ வேதனையோ வரும் பொழுதெல்லாம்
1.உங்கள் கண்களின் நினைவு ஈஸ்வரா…! என்று
2.புருவ மத்திக்குச் சென்று அதைத் தடைப்படுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று இதை நீங்கள் வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் (ஞானகுரு) பெறுகின்றேன். உங்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஜெபம் இருக்கின்றேன்.

நீங்கள் எதை எல்லாம் நல்லதாக வேண்டும் என்று செய்கின்றீர்களோ அது நல்லதாக வேண்டும் என்று ஜெபம் செய்கின்றேன்.

ஏனென்றால் உபதேசம் செய்த உணர்வலைகள் இங்கே இருக்கின்றது. உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம்.

டி.வி. ஸ்டேசனிலிருந்து ஒலி – ஒளி பரப்பு செய்யும் போது அதே ஸ்டேசனை வைத்தால் எப்படிப் படம் தெரிகின்றதோ அதே போல்
1.ஈஸ்வரா…! என்று உயிரை நினைக்கும்போது
2.அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் உங்களுக்குக் கிடைக்கும்.
3.நீங்கள் அதை வளர்ப்பதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

உங்களால் முடியும்…!

Leave a Reply