சோர்வாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சியை நம்மால் தாங்க முடியவில்லை ஏன்…?

soul-protections

சோர்வாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சியை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏன்…?

 

ஆகாதவர்களைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வரும். போகிறான் பார்…! இவன் தான் என்னை ஏமாற்றினான்…! என்ற உணர்ச்சிகள் நம்மை அறியாமலே இயக்கும்.
1.ஏதாவது நல்ல காரியங்கள் செய்து கொண்டிருந்தாலும்
2.அவரைப் பார்த்ததுமே இத்தகைய உணர்வுகள் வரும்.

இது எதனால் வருகிறது…?

சில பேர் என்ன செய்வார்கள்…? அவர்களுடைய உணர்விற்குத் தகுந்த மாதிரி ஒரு கம்பீர நடையாக இருக்கும். கம்பீரமாக மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு அவர்கள் நடந்து போவார்கள்.

ஆனால் நம்முடைய உணர்வு சோர்வடைந்திருக்கும் பொழுது அவரைப் பார்த்தோம் என்றால் என்ன சொல்வோம்…? நடையைப் பார்…! என்னத்தைக் கண்டான்… என்று தெரியவில்லை…! என்போம்.

அவருடைய கம்பீரமான நடையைப் பார்த்தவுடனே நம்மை அறியாமலே அந்த வெறுப்பும் வேதனையும் சோகமும் வரும். அதாவது தாங்க முடியாமல் அந்த உணர்ச்சிகள் இயக்கும்.

அதிகமான ஒரு சுமையைத் தூக்கித் தலையில் வைத்தால் தாங்க முடியாமல் இருக்கிறோம் அல்லவா. அதே மாதிரி அவருடைய மகிழ்ச்சி நம் உடலில் நல்ல அணுக்களுக்கு தாங்க முடியாது போய்விடுகிறது.

அப்போது நாம் நுகரும் உணர்வுகள் பொறாமையாக வளர்ந்து விடுகின்றது. ஆனால் பொறாமை உணர்வை வளர்த்து விட்டோம் என்றால் அடுத்து என்ன தான் அங்கே நல்லதைச் சொன்னாலும் நம் வாயிலே வேறு விதமாகத்தான் வார்த்தைகள் வரும்.

யார் யாரை ஏமாற்றினாரோ…? என்னென்ன செய்தாரோ…? அதனால் தான் இப்படிக் கம்பீரமாகப் போகிறான் போல…! என்று அறியாமலே இந்த மாதிரி உணர்வுகளைச் சேர்த்து நம் உடலுக்குள் அணுக்களை வளர்த்து விடுகிறோம்.

ஆகவே நாம் எண்ணும் உணர்வுகள் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது போல் நமக்குள் அந்தத் தாங்க முடியாதபடி ஆகிவிடுகின்றது.

ஆனால் அந்த மாதிரி உணர்ச்சிகள் நமக்குள் தோன்றுகிறது என்றாலும் அது நாமல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை நம் உடலில் சில சிரமங்களும் பக்குப்பட முடியாத நிலைகளும் அவ்வாறு இயக்கிவிடுகின்றது.

1.அதாவது நம் குழந்தை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்
2.கடன் வாங்கியவன் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுகின்றான் என்ற
3.இதைப் போன்ற உணர்வுகள் தொடர்ச்சியாக இயக்கினால் நம்மை அறியாமலே அந்தச் சலிப்பும் சஞ்சலமும் வரும்.
4.அந்த நேரத்தில் மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்ற உணர்வு பட்டவுடனே
5.நம்மால் அதைத் தாங்க முடியாதபடி எதிர் நிலையாகின்றது.
6.அந்த அணுக்களால் இந்த மகிழ்ச்சியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா..!

ஆகவே இதைப் போன்ற சந்தர்ப்பங்களால் தீமையான நிலை உருவாகிறது என்றால் “ஈஸ்வரா…! என்று தடைப்படுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சேர்க்கப் போகும் போது இங்கே உருவாக்கி விடுகிறது.

1.விவசாயப் பண்ணைகளில் (AGRICULTURE) எப்படி வித்தின் தன்மை
2.அந்தச் செல்களை கொஞ்சம் மாற்றி அமைத்துப் புது வித்துகளை உருவாக்குகின்றார்களோ அது போல்
3.நமக்குள் மற்ற உணர்வுகள் பதிவாகும் போதே
4.அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் இணைத்திடல் வேண்டும்.

கோபமோ ஆத்திரமோ பயமோ வேதனையோ எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சொல்லி இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

உதாரணமாக இரண்டு பேர் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்று பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்துக் கொண்டு அவர்களுக்குள் ஒன்றுபட்டு வாழும் அந்த உணர்வு வர வேண்டும். அரவணைத்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை எடுங்கள்.

இப்படிப் பழகிக் கொண்டால் இந்த உணர்வுகள் எல்லாம் நமக்குள் இங்கே பதிவாகும் (“RECORD”). அது மட்டுமல்ல…!
1.சண்டை போடுகின்றவர்களை எங்கே பார்த்தாலும்
2.அடுத்தாற்போல நமக்குள் அந்தச் சரிபடுத்தும் உணர்வின் தன்மைகளே வரும்.
3.நீங்கள் உங்கள் அனுபவத்தில் இதை எல்லாம் கொண்டு வர வேண்டும்.

அதை விட்டு விட்டு நான் சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன். நன்றாக ஆசிர்வாதமும் கொடுத்தார். நானும் தியானம் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

ஆனால் என் கஷ்டங்கள் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது. இது என்ன தியானம்…! என்று சொல்கிறவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்.

இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் “கார்த்திகேயா…” என்ற நிலையில் தெளிவாக அறிந்து கொண்ட பின் தீமைகளை நாம் மாற்றி அமைத்தல் வேண்டும்.

ஏனென்றால் அந்த அரும் பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம். முறைப்படி எண்ணினால் காற்றிலிருக்கும் அந்தச் சக்திகளை எளிதில் நீங்கள் பெற முடியும்.

அந்த அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்கப்படும் போது அது புதுவிதமான உணர்ச்சிகளாக நம் உடலிலே இருக்கும். ஆனால்
1.தீமை செய்பவர்களைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள்
2.தொக்கிய நிலைகளாக நம் இரத்த நாளங்களில் கலந்து வந்தாலும்
3.நாம் எடுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் அழுத்தம் அதை அடக்கும்.

வலுகொண்ட உணர்வுகள் நம் உடலிலே வளர்ச்சி பெறும். ஆக சிந்திக்கும் ஆற்றல் வரும். இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். கொஞ்ச நாள் இதைப் பழக்கம் செய்து கொண்டால் அப்புறம் சர்வ சாதாரணமாக வரும்.

 

Leave a Reply