நம் கண்களை ஞானக் கண்ணாக மாற்றும் வழி

gnanaguru

நம் கண்களைச் சக்தி வாய்ந்த ஞானக் கண்ணாக மாற்றும் வழி – 1

 

சந்தர்ப்பவசத்தால் குடும்பத்தில் நடக்கக்கூடிய சில கடுமையான சம்பவங்களால் மீண்டும் மீண்டும் வேதனையை அதிகமாக நுகர நேர்ந்தால் அதை ஆழமாக எண்ணி உற்றுப் பார்ப்பதால் கண்களில் உள்ள கருமணிகளில் விஷம் ஒட்டிக் கொள்கின்றது. (வேதனை என்பது விஷம்)

கருமணிகளில் சேரும் இத்தகைய விஷம் அதிகமாகும் பொழுது கண் எரிச்சல்… கண் பார்வை மங்கல்… கண்களிலிருந்து நீர் வடிதல்… இதைப் போன்ற நிலைகளாகி கடைசியில் கண்களில் சுத்தமாகப் பார்வையே போகும் வாய்ப்புகள் உருவாகிவிடுகின்றது.

அதே சமயத்தில் அந்தக் கருமணிகளுடன் சேர்ந்த நரம்பு மண்டலத்திலும் விஷத் தன்மைகள் சேரத் தொடங்கும்.

இந்த நரம்பு (ELECTRIC WIRE போல்) வழியாகத்தான் நாம் பார்த்த செய்தி உடல் முழுவதும் பரவி அதற்குத்தக்க நம் உடலும் உடலின் அங்கங்களும் இயங்குகின்றது.

ஆனால் இந்தக் கருவிழியுடன் சேர்ந்த நரம்புகள் பலவீனமடைவதோடு மட்டுமல்லாதபடி
1.வேதனைப்படும் உணர்ச்சியையே தூண்டிக் கொண்டிருக்கும்
2.நம்மை நல்லதை அதிகமாக எண்ண விடாது.

அதற்காகத்தான் நாம் தியானம் செய்யும் போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்கின்றோம். கண்களில் அந்தச் சக்திகளை அதிகமாகப் படரச் செய்கின்றோம்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் அழுத்தமாக கண்களில் உள்ள கருமணிகளில் படரச் செய்யும் பொழுது அதில் படர்ந்துள்ள விஷத் தன்மைகள் கரைந்து விடுகின்றது. அதனுடன் ஒட்டிய நரம்புகளையும். தூய்மைப்படுத்துகின்றது.

இதனால் கண் பார்வை சீராகத் தெரிய வரும். மேலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கண் கருவிழியுடன் தொடர்பு கொண்ட நரம்புகளில் ஆழமாகப் பதிவாகின்றது. அதனால்
1.அடிக்கடி அந்த மகரிஷிகளின் பால் எளிதில் நம் நினைவுகள் செல்லத் தொடங்கும்.
2.நம் கண்களுக்கும் வீரிய சக்தியாக (ANTENNA POWER) கிடைக்கும்.
3.விண்ணின் ஆற்றலை எளிதில் கவரும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.

அதற்காக வேண்டித்தான் சாமிகள் (ஞானகுரு) தன்னிடம் ஆசி பெறும் பொழுது அவருடைய கண்களைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திச் சொல்கிறார்.
1.ஏனென்றால் நான் உங்களுக்கு அருள் உணர்வுகளை என் கண் வழியாக அதிகமாகப் பாய்ச்சுகின்றேன்.
2.அந்த நேரத்தில் நீங்கள் என்னை வணங்குவதையோ அல்லது வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தால்
3.நான் கண் வழி கொடுக்கும் ஞான வித்தை நீங்கள் பெற முடியாது.

உங்களுக்குள் எப்படியாவது ஞானிகளின் அருள் வாக்கை ஊழ்வினையாக வித்தாக நான் பதிவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் உங்கள் எண்ணம் (உங்கள் உயிரின் இயக்கம்) என்னை வணங்கும் நிலையில் அதில் கவனம் இருப்பதால் உங்களுக்குள் செலுத்தவும் முடிவதில்லை.

ஆகவே எந்த உயர்ந்த எண்ணத்தில் வருகின்றீர்களோ அந்த எண்ணத்தை வலுவாக்கி
1.என்னை நேராக நிமிர்ந்து பார்த்து
2.என் கண்களை உற்றுப் பார்த்து குருவின் அருள் சக்தி எனக்குக் கிடைக்க வேண்டும்
3.நாங்கள் எண்ணி வந்த காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்று எண்ணினால் அது நிச்சயம் நிறைவேறும்.

என்னை வணங்குவதில் முக்கியமாக இருப்பதாலும்… வணங்கினால் நான் அவர்களுக்குச் செய்வேன்…! என்றும் தான் நினைக்கின்றார்கள்.

1.நான் கண் வழி பாய்ச்சும் அருள் உணர்வை எவ்வளவுக்கு எவ்வளவு கூர்மையாக யார் உற்றுப் பார்க்கின்றார்களோ
2.அந்த அளவுக்கு ஞானிகளின் அருள் ஞான வித்துக்கள் ஆழமாகப் பதிவாகும்.
3.பதிவான வித்து வலுவான நிலையில் வளரும். அதன் வழி அனைத்தும் நீங்கள் பெற முடியும் என்று தான் சொல்கிறேன்.

(சாமிகள் பல பௌர்ணமி உபதேசங்கள் கடைசியில் இது சம்பந்தமாக குறைந்தது பத்திலிருந்து இருபது நிமிடம் பேசியுள்ளார்.)

என் குருநாதரிடம் நான் அடி வாங்கி உதை வாங்கித்தான் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு விதமான மெய் உணர்வுகள் வரும்.
1.அடி வாங்கித்தான் நான் கற்றுக் கொண்டேன் என்று சொல்கிறார் என்றால்
2.அவர் ஈஸ்வராய குருதேவரை எப்படிக் கண்களால் பார்த்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்…?


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply