நாம் யார்…? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்கிறோம்…? எங்கே செல்ல வேண்டும்…?

almighty destination

நாம் யார்…? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்கிறோம்…? எங்கே செல்ல வேண்டும்…?

 

ஒரு செடியில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் என்ன செய்கிறது…? அதே செடியின் சத்தைச் சூரியன் கவர்ந்து வைத்திருப்பதால் அந்த உணர்வை எடுத்து அந்த வித்து செழித்து வளரத் தொடங்கும். மீண்டும் தன் இன வித்துகளை உருவாக்குகிறது.

மானை ஒரு புலி அடித்துத் தாக்குகின்றது என்றால் புலியின் வீரியமான உணர்வுகளை மான் நுகர்ந்து அந்த உணர்வின் இயக்கமாக மாறி தன் உடலை விட்டு உயிர் சென்ற பின் எங்கே செல்கின்றது…? புலியின் உடலுக்குள் தான் செல்கின்றது.

ஒரு விஷம் கொண்ட பாம்பினம் மனிதனைத் தாக்கும் போது பாம்பின் நினைவுகள் மனிதனுக்குள் அதிகமாக வந்த பின் மனிதனின் உயிர் அங்கே அழைத்துச் சென்று இன்று மனிதனாக இருந்தாலும் அடுத்துப் பாம்பாகச் பிறக்க செய்யும். இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அதைப் போன்று தான் ஒருவன் தீமை செய்கிறான் என்றாலோ சங்கடப்படுகிறான் என்றாலோ வேதனைப்படுகிறான் என்றாலோ அவனில் விளைந்த உணர்வுகள் எண்ணமாக வெளிவரும்போது அதை சூரியனின் காந்தப் புலனறிவு எடுத்து வைத்துக் கொள்கிறது.

பரிவும் பண்பும் கொண்ட மனிதன் அதை உற்று நோக்கும் போது அதை நுகர்ந்தால்
1.உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகி விடும்.
2.பின் அதனதன் உணர்வுகள் தன் வளர்ச்சிக்கு உணவை எடுத்து உடலுக்குள் வளர ஆரம்பிக்கும்.
3.ஆக உயர்ந்த நிலைகள் கொண்டு இரக்கம் ஈகையை வளர்த்த பண்பு கொண்ட மனிதனின் உடலில் அந்த வேதனையான உணர்வுகள் வந்து விடுகிறது.

இருந்தாலும் நடக்கும் சம்பவங்களை எல்லாம் அந்தப் பண்பு கொண்ட மனிதன் தன் மனைவியிடம் சொல்கிறான்.
1.சிரமப்பட்ட நிலைகளையும் உதவி செய்த நிலைகளையும் சேர்த்துக் கலவையாக உருவாக்கி
2.இது இரண்டையும் கருவாக்கி கணவன் மனைவி இரண்டு பேருக்குள்ளும் இதைத் தான் விளையச் செய்கிறோம்.

இப்படிச் சந்தர்ப்பத்தால் வேதனை என்ற உணர்வான பின் பெண்கள் வேதனை கொண்டு கணவன் மேல் உள்ள பாசத்தால் எண்ணுவார்கள்.

அப்பொழுது அவ்வாறு எண்ணப்படும் பொழுது வேதனையான உணர்வுகள் அங்கே பாய்ச்சப்பட்டு விஷத்தின் உணர்வு கொண்டு சிந்திக்கும் திறனை இழந்து குடும்பத்தில் பற்றற்ற நிலை வரும்.

வேதனை என்ற உணர்வு குடும்பத்தில் கணவன் மனைவிக்கு ஏற்பட்டால் நரகலோகம் தான். நரகலோகம் என்றால் என்ன…?

விஷத்தின் தன்மையை உணவாக உட்கொண்டு பாம்பினம் விஷமான உயிரினங்களைத் தான் உணவாக உட்கொள்ளும். தன் விஷத்தைப் பாய்ச்சி ரசித்து வாழும்.

இருந்தாலும் ஊர்ந்து செல்லும். முள் புதர் என்ற நிலையில் தன்னைக் கொல்ல வரும் நிலைகளிலிருந்து தப்பிக்க எத்தனையே வேதனைப்படுகிறது. ஆக நரகலோகம்.

நாம் உணவை சமைத்து ருசியாகச் செய்து மகிழ்ச்சியாகச் சாப்பிடுகிறோம். ஆனால் பாம்பு தன் உணவை விழுங்கும் போதெல்லாம் எத்தனை வேதனைப்படுகிறது…? சொல்வது அர்த்தமாகிறதா…?

அதே போல ஜீரணிக்கும் சக்தி கொண்ட கொக்கோ காகமோ அது தன் இரையை எப்படி எடுக்கிறது…? காகமாவது பரவாயில்லை…! பிய்த்துத் தின்னுகிறது. ஆனால் கொக்கு தன் உணவை அப்படியே விழுங்குகிறது. அதன் உணர்வின் தன்மை வரும் போது தொண்டைக்குள் அது எத்தனை அவஸ்தைப் படுகிறது…? இதெல்லாம் நரகலோகம் தான்.

மீனைச் சாப்பிட்டோம். அப்போது எங்கே செல்கின்றோம்? இதைப்போன்ற உணர்வின் தன்மை நம்மை எங்கே அழைத்துச் செல்கிறது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எப்படி இருக்க வேண்டும்…? எதை நமக்குள் வலுவாக்க வேண்டும்…?
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருளை நாம் ஒவ்வொரு நொடியிலும் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு பிறர் இருளைப் போக்க வேண்டும்.
3..மற்றவர்களின் உணர்வுகள் நம்மை இருளாக்கக் கூடாது. அதிலிருந்து நாம் மீள வேண்டும்.
4.அருள் உணர்வு கொண்டு வரும் இருளை நீக்கும் பொழுது ஒளியாகக் காட்டுகின்றது.
5.அப்பொழுது அந்த ஒளியின் தன்மை கொண்டு பொருள் அறிந்து செயல்பட நம்மால் முடிகின்றது.

ஏனென்றால் இந்த உடலில் நீடித்த நால் நாம் இருப்பதில்லை. அதற்குள் என்றும் ஏகாந்த நிலையான “கல்கி…!” என்ற பத்தாவது நிலை பெற வேண்டும்.

ஒவ்வொரு உணர்வின் இயக்கங்களும் அது எப்படி எப்படி எல்லாம் நம்மை இயக்குகிறது…? நம் வாழ்க்கையின் திசையை மாற்றுகிறது என்று பல அருள் உணர்வுகளை உபதேசங்களாகக் யாம் (ஞானகுரு) கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

யாம் கொடுத்த உபதேசங்களை ஒலி வடிவில் உள்ளதை வரிசைப்படுத்திக் கேட்டுக் கொண்டே வந்தீர்களென்றால்
1.நாம் யார்…?
2.நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையில்
3.அந்த அருள் மகரிஷிகளுடன் ஒன்ற வேண்டும்…! என்ற எண்ணம் தெளிவாக வரும்.

சும்மா இருக்கும் பொழுதெல்லாம் அதைக் கேட்டு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். அருள் வாழ்க்கை வாழ இது உங்களுக்கு என்றுமே உதவும். எமது அருளாசிகள்…!

ஒலி உபதேசங்கள் கேட்க விரும்புவோர் இதை உபயோகிக்கவும்.
https://wp.me/P3UBkg-1rP
https://wp.me/P3UBkg-1Ia

Leave a Reply