ஞானகுருவின் (சாமிகள்) உபதேச ஒலிக்குள் மறைந்துள்ள “பொக்கிஷங்கள்…!”

eswaraya gnanaguru

ஞானகுருவின் (சாமிகள்) உபதேச ஒலிக்குள் மறைந்துள்ள “பொக்கிஷங்கள்…!”

 

சாமிகள் (ஞானகுரு) உபதேசம் செய்யும் பொழுது அவருடைய பேச்சைக் கூர்ந்து கவனித்தாலே மகரிஷிகளுடன் தொடர்பு கொள்வது மிகவும் எளிதாகும்.
1.சாமி பேசும் பொழுது சில நேரம் மிக மிக மெதுவாகப் பேசுவார். ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிறுத்திப் பேசுவார்.
2.சில நேரங்களில் மிக மிக வேகமாகப் பேசுவார்.
3.உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவார். உணர்ச்சிகளைத் தூண்டும்படியும் பேசுவார்.
4.அதில் தான் இத்தனை இரகசியங்களும் உள்ளது.

நாம் கண்ணில் பார்த்து அல்லது காதில் கேட்டு அதன் பின் தான் பேசுகிறோம். அவர் இதையெல்லாம் செய்தாலும் விண்ணிலிருந்து இழுத்துப் பேசுவார்.

நம் நினைவுகள் மனிதர்கள் பால் அதிகம் செல்லும். அந்த உணர்வுடன் தான் பேசுவோம். அவர் விண்ணில் உள்ள அந்த மகரிஷிகளின் நினைவுடன் பேசுவார். அவர் பேச்சு அடுக்குத் தொடர் போல் வரிசையாக மாறி மாறி வரும்.

மனித உணர்வின் ஆசைகளை அதிகமாக முன்னிலையில் வைத்திருந்தால் மகரிஷிகளின் உணர்வுடன் அதிகமாக நம்மால் நெருங்க முடியாது. அதற்குள் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் மணம் நம்மிடம் அதிகமாக இருக்க வேண்டும்.

அந்த மணம் நம் ஆன்மாவில் அதிகம் வரவேண்டும் என்றால் ஞானகுருவின் உபதேச உணர்வினை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கி அதை நமக்குள் செருகேற்ற வேண்டும்.

ஏற்கனவே நம் உடலில் விளைய வைத்திருக்கும் பழைய வாசனைகள் அகன்று சாமிகள் உபதேசிக்கும் அருள் மணம் அதிகமானால் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் உள்ளே எளிதாகப் போக முடியும்.
1.சாமியை நினைத்து அல்ல…
2.அவர் விளைய வைத்த ஞானிகளின் மணத்தை முன்னணியில் கொண்டு வந்தால்
3.மகரிஷிகளின் வட்டத்திற்குள் நம் எண்ணங்கள் ஊடுருவும்.
4.அவர்களின் துணை கொண்டு ஒவ்வொரு நாளும் தெளிவான பாதையில் நாம் செல்ல முடியும்.

ஞானத்தின் வளர்ச்சியை அபரிதமாகக் காண முடியும். பேரருள் பேரொளியாக நாமும் மாற முடியும்.

தினசரி நாம் மற்ற எல்லோருடனும் பேசிக் கொண்டே தான் இருக்கின்றோம். யாருடனும் நாம் பேசாமல் இருக்க முடியாது. ஆனால்
1.மனிதர்களுடன் பேசுவதற்குப் பதில் மகரிஷிகளுடன் பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்
2.ஞானகுருவின் உபதேசங்களை தினசரி கேட்டுப் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

அதே சமயத்தில் தினசரி கேட்ட உபதேசங்களைப் பற்றிச் சிறிய குறிப்பாக எழுத்து வடிவுக்குக் கொண்டு வந்தால் உடனடியாக ஈஸ்வரபட்டருடன் நேரடித் தொடர்பு கிடைக்கும்.

செய்து பாருங்கள். என்னுடைய அனுபவம் இது தான்…!

https://wp.me/p3UBkg-1Bx

Leave a Reply