கண்ணனை – கண்களைப் பரமாத்மா என்று ஏன் வியாசகர் சொல்கிறார்…?

antenna power of sages

கண்ணனை – கண்களைப் பரமாத்மா என்று ஏன் வியாசகர் சொல்கிறார்…?

 

வேதனைப்படுவோர் வெறுப்படைவோர் உணர்வுகளை நாம் சுவாசித்தால் அந்த உணர்வலைகள் நம் நம் உடலில் இரத்த நாளங்களில் கலக்கிறது. இரத்த நாளங்களில் கலக்கப்படும் போது
1.நாம் எடுத்துக் கொண்ட நல்ல உணர்வுகளால் உருவான நல்ல அணுக்களுடன்
2.இந்த வேதனைப்படும் அணுக்கள் மோதும் போது இது ஒவ்வொன்றாகச் சேர்த்துச் சேர்த்து
3.வேதனைப்படும் உணர்வின் தன்மையாகக் கருத்தன்மை அடைகிறது.

அப்போது கருத்தன்மை அடையப்படும் பொழுது அது எதை எடுத்து எந்த உணர்வின் தன்மை வெறுப்பின் தன்மை ஆனதோ அது நம் உடலிலே சேரும்போது நம் உறுப்புகளில் அந்தக் காலக்கெடு வரும்போது அந்த அணு முட்டையாக மாறுகிறது.

அணு முட்டையாக மாறும்போது தசைகளில் ஒட்டி இரத்த நாளங்களில் வருவதை உணவாக உட்கொள்ளத் தொடங்கும். அந்த உணர்வின் தன்மை மலமாக்கப்படும் போது
1.வேதனை என்ற உணர்வுகளையோ
2.வெறுப்பு என்ற நிலைகளையோ
3.நஞ்சென்ற நிலைகளையோ நாம் நுகர்ந்திருந்தால்
4.நல்ல அணுக்களால் உருவான தசைகளுக்கும் இது இரண்டுக்கும் எதிரியாகும்

அதனால் அந்த அணுக்கள் ஒன்று சேர்ந்து இயக்கும் நிலைகளில் இது மாற்றம் அடைகிறது. மாற்றம் அடையும் போது எந்த உணர்வின் அணுக்களாக அந்தத் தசைகள் வளருகிறதோ (முதலில் உருவானது) அது குறையத் தொடங்குகிறது.

அதே உணர்சியின் தன்மை வரும்போது நம் எண்ணங்களும் சொற்களும் மாறுபடும் நிலை வருகிறது. நம் செயலும் பார்வையும் வித்தியாசமாக மாறுகிறது.

உதாரணமாக வேதனை என்ற உணர்வின் தன்மையை அதிகமாக எடுத்திருந்தால்
1.அந்த அணுத்தன்மைகள் நம் இரத்த நாளங்களில் கலந்து
2.ஒளி ஈர்க்கும் தன்மை கண் பார்வைக்கு வரப்படும்போது (ஏனென்றால் நம் ஒவ்வொரு உறுப்புகளிலிருந்தும் கண்ணுக்கு நேரடியான இணைப்பு உண்டு)
3.அங்கே வலிக்கிறதென்றால் கண் வழிதான் முதலில் அந்த உணர்வு உணர்ச்சியாகி உயிருக்கு வருகிறது.
4.அப்பொழுது கண் பார்க்கிறது. இன்ன இடத்தில் தான் வலிக்கிறது…! என்று நம் கைகள் அங்கே போகிறது.
5.இல்லையென்றால் நம் கை போகுமோ…?

கண்களை மூடிக் கொண்டாலும் வலி என்ற உணர்வின் தன்மை வெளிவரப்போகும் போது
1.அங்கேதான் வருகிறது..! என்று நம் கை இயங்கும்.
2.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அங்கே இயக்குகிறது.
3.பொதுவான நிலையாக உடலில் உள்ள எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டது நம் கண்கள்.

அதாவது நம் கண்கள் தான் “கண்ணன்…!” என்று மகாபாரதக் காவியத்தின் மூலமாக வியாசகர் இதைத் தெளிவாக்குகிறார் அதனால்தான் கண்கள் என்ற உணர்வு வரும்போது பரமாத்மா.
1.இது ஒரு பரம்.
2.இது எல்லாவற்றிற்கும் ஆன்மாவாக இருந்து இயக்குகின்றான் பரமாத்மாவாக.

அந்த உணர்வின் தன்மை கொண்டு தனக்குள் நுகர்ந்த அந்த உணர்வின் தன்மை கொண்டு இயக்கச் செய்கிறான் என்பதை கண்ணன் இந்த லோகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றான் என்று வியாசகர் காட்டுகின்றார்.

உதாரணமாக முதுகு பக்கம் வலிக்கிறதென்றால் இங்கே தான் வலிக்கிறது என்று உணர்ச்சி சொல்கிறது. அப்பொழுது… அது என்ன…? ஏது..? என்று திரும்பிப் பார்க்க வேண்டும்…! என்று அந்த உணர்ச்சியின் தன்மையைக் கவர்ந்து கொடுப்பது யார்…?

நம் கண்கள் தான்…!

இந்தக் கண்களுக்கு இயக்கம் எது..? நம் உயிர் தான். அந்த உயிரின் தன்மை எலெக்ட்ரிக்காக இயங்கி அந்த உணர்ச்சிகளுக்குத் தக்க நமக்கு ஊட்டும் என்பதனை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

அதை மாற்ற வேண்டும் என்றால் அதை கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அகக்கண்ணான உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணிலே செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிர் வழியாக எண்ணி ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

பின் கண்ணின் நினைவை உள்முகமாக உடலுக்குள் செலுத்தி எங்கே வலிக்கின்றதோ அங்கே மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படரவேண்டும் என்று
1.அந்த அணுக்களுக்குள் இணைத்தால் வலியை நீக்க முடியும்.
2.தீமையால் உருவான அணுக்களைக் கரைக்கவும் முடியும்.
3.ஒளியான அணுக்களாக நம் உடலுக்குள் உருவாக்கவும் முடியும் இதே கண்களால்…!

செய்து பாருங்கள்…!

Leave a Reply