“இரவு முழுவதும்…” உங்கள் உணர்வுகள் வான மண்டலத்தில் சுழல்வதை உணரலாம்… ஒளிப் பிழம்புகளைக் காணலாம்…!

flying lights in night

இரவு முழுவதும் உங்கள் உணர்வுகள் வான மண்டலத்தில் சுழல்வதை உணரலாம்… ஒளிப் பிழம்புகளைக் காணலாம்…!

குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றோம். அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கினால் அந்த உணர்வு உங்களைக் காக்கும்.

அதிர்ச்சியான செய்திகளைப் பார்த்தபின் புலனடங்கித் தூங்கும் போது அந்த அதிர்ச்சியின் நிலைகள் வருகின்றது.

அதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவர்ந்து கொண்டால் புலனடங்கித் தூங்கும் போது உங்களை வான மண்டலத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் இணைத்து அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் இணையும்.

சிலருக்கு அந்தக் காட்சிகள் வந்து கொண்டிருக்கும். மிதப்பதைப் போல் இருக்கும். இதன் வழியைக் கடைப்பிடிப்பவர்களுக்கு ஒளியின் தன்மை திடீரென்று உடலிலிருந்து மின்னவும் செய்யும்.

தியான வழியில் பெற்றோருக்கு தீமைகளை அகற்றும் நிலைகள் தனக்குள் இந்த உணர்வுகள் அது தெளிவாகத் தெரியும்.

இரவிலே வான மண்டலத்திலே சுழல்வது போலத் தெரியும். முழித்துப் பார்த்தால் உங்கள் உடலிலிருந்து ஒளிப் பிழம்புகள் வெளி வருவதையும் காணலாம்.

ஆகவே, நாம் வளர்த்துக் கொண்ட நிலையை அந்தப் பேரருள் பேரொளியை நாம் அறியலாம்.

எப்படி இதை அறிந்து கொள்ள முடியும்…? என்று சிலர் நினைக்கலாம்.

யாம் உங்களுக்குள் பதிவாக்கிய நிலைகளைச் சீராக நீங்கள் எடுத்துக் கொண்டால் வான மண்டலத்தில் உங்கள் உணர்வுகள் சஞ்சரிக்கும். உங்களின் உணர்வின் நினைவாற்றல் அங்கே அழைத்துச் செல்லும்.

நீங்கள் பயந்த உணர்வுகளைப் பதிவாக்கினால் இந்த உணர்வுகள் அஞ்சி வாழச் செய்யும் நிலைகளும் இரவில் தூங்குவதற்குப் பதில் நம்மை எழுப்பிக் கதறுவது போன்று தூக்கமின்மையும் பல நிலைகளும் ஏற்படும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் இதையெல்லாம் தெளிவாக்கி மனிதனுடைய வாழ்க்கையில் அருள் ஞானத்தை உங்களுக்குள் பெருக்கி இருளை அகற்றிடும் நிலை பெறவேண்டும்.

இதற்கு முன் நமக்குள் அறியாது சேர்ந்த நிலைகளையும் போக்கிக் கொள்ள உங்களால் முடியும். இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

சாமியார் காப்பாற்றுவார், சாமி காப்பாற்றும் ஜோதிடம் காப்பாற்றும் மந்திரம் காப்பாற்றும் யந்திரம் காப்பாற்றும் என்ற நிலைக்குத்தான் இன்று சென்று கொண்டுள்ளார்கள்.

உங்களுக்குள் பதிவு செய்ததை நீங்கள் நினைவாக்கினால் அதே உணர்வு உங்களைக் காக்கின்றது வழி நடத்துகின்றது. உங்களைச் செயல்படுத்துகின்றது. இதைத் தான் யாம் உங்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றோம்.

நாம் நுகர்ந்ததை (சுவாசிப்பதை) உயிர் நமக்குள் உருவாக்குகின்றது.

ஆகவே, அருள் சக்திகளை நீங்கள் பெறும் நிலைகள ஏங்கி எடுக்கும் போது நீங்கள் நுகர்ந்து உங்களுக்குள் ஒளியான அணுக்களாக மாற்றும் நிலைகள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்கு இவ்வளவு விளக்கமாகக் கொடுக்கின்றோம்.

 

Leave a Reply