குற்றத்திற்குத் துணையாகவும்… குற்றமற்றதைக் குற்றமாக்கிடும்… செயலையும் செய்தால் மனிதனல்லாத உருவாக ஆக்கிவிடும் உயிர்…!

Soul powers

குற்றத்திற்குத் துணையாகவும்… குற்றமற்றதைக் குற்றமாக்கிடும்… செயலையும் செய்தால் மனிதனல்லாத உருவாக ஆக்கிவிடும் உயிர்…!

 

சத்தியத்தையும் தர்மத்தையும் பற்றி அன்றைய ஞானிகள் சாஸ்திரங்களின் மூலமாக நமக்கு எத்தனையோ வகைகளில் உணர்த்திக் காட்டியுள்ளார்கள்.

ஆனாலும் அரசியல் சார்புடைய வக்கீல்களில் சிலர் அரசியலில் தவறு யார் செய்தாலும் அந்தத் தவறை மறைப்பதற்குத்தான் சட்டங்களைக் கொண்டு செல்கின்றனரே தவிர தவறு செய்யும் நிலைகளிலிருந்து மக்களைக் காக்க வேண்டும் என்று எந்த வக்கீலும் வருவதில்லை.

எந்தக் கட்சியின் சார்புடையவரோ… எந்த மதத்தின் சார்புடையவரோ… அதன் அடிப்படையிலேயே
1.தான் படித்த கல்வியின் திறனைப் பயன்படுத்தி…!
2.தவறுகளை ஓங்கி வளர்க்கவும்
3.தவறு செய்யாதவனைக் குற்றவாளியாக்கவும்
4.படிப்பின் திறமை கொண்டு அவனைக் கொலை செய்யவும்
4.கொலைகாரனாக மாற்றவும் குற்றமுடையவனாக ஆக்கவும் என்ற நிலைகளுக்கு வந்துவிட்டது.

அரசியல்வாதிகளும் சரி… மதவாதிகளும் சரி…! கடவுளின் பேரைச் சொல்லி மதத்தின் பேரைச் சொல்லி…! எந்த மதத்தின் சார்புடையவரோ அவருடைய கடவுள் என்ற நீதியை வைத்துச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டாலும் – தவறுகளையே செய்கிறார்கள்.

1.சட்ட ரீதியாகத் தவறிலிருந்து மக்களை மீட்ட வேண்டும்…
2.குற்றம் செய்வோனிடம் நீ குற்றம் செய்திருக்கிறாய்…! என்று சுட்டிக் காட்டி
3.அந்தக் குற்ற இயல்புகளிலிருந்து அவனைத் திருத்த வேண்டும் என்ற நிலை இல்லை.

அதாவது குற்றம் செய்பவனுக்குத் தண்டனையும் குற்றமில்லாதவனை நிரபராதியாக்கி அவனைக் காத்திட வேண்டும் என்று தான் வக்கீல்கள் வாதித்தல் வேண்டும்.

ஆனால் சட்டம் படித்த வக்கீல்கள் அவருடைய வாதத் திறமை கொண்டு குற்றமற்றவனைக் குற்றமாக்குவதும் குற்றம் புரிபவனைக் குற்றமற்றவனாகக் காட்டும் நிலைகள் தான் இன்றைய நிலைகள் வளர்ந்து கொண்டுள்ளது.

இதைப் படிப்போர்கள் வருத்தப்பட்டுக் கொண்டாலும் சரி… அல்லது இந்தச் சாமியார் (ஞானகுரு) என்ன செய்து விட்டார்…? இவர் மட்டும் யோக்கியமா…? என்று நினைத்துக் கொண்டாலும் சரி.

குற்றமற்றதைக் குற்றமாக்கும் இயல்பில் உள்ளோர்களின் நிலை எல்லாம்….
1.அவர்கள் உயிர் அவருக்குள் எண்ணிய நிலைகள் எதுவோ அதன்படி
2.அவர் உடலுக்குள் இருக்கும் உண்மை நல்ல உணர்வினுடைய அணுக்களை அழித்தே தீரும்.
3.குற்றமற்றவருக்குத் தீங்கிழைத்து அதன் வழியில் இவர்கள் நுகரும் உணர்வுகளை
4,அவர்கள் உயிர் உடலுக்குள் உருவாக்கி அதற்குண்டான விளைச்சலைக் காட்டும்.

இந்த மனிதனின் வாழ்க்கையில் பிறருக்குத் தெரியாமால் நாம் மறைமுகமான நிலைகளில் எத்தகைய தவறு செய்தாலும் அந்தத் தவறின் நிலைகளை
1.உயிர் அப்பதைக்கப்போதே அணுவாக மாற்றி அந்த அணுக்களைப் பெருக்கி
2.அந்தத் தவறின் நிலையையே உடலுக்குள் உருவாக்கி நையச் செய்யும்.
3.மனிதனல்லாத உருவாக மாற்றி அமைத்துவிடும்.

இதிலிருந்து எவரும் தப்ப முடியாது…!

Leave a Reply