உலகில் உள்ள எல்லா மொழிகளுக்குள்ளும் தமிழ் சொல்லின் சுருதி கண்டிப்பாக இருக்கும்…! ஏன்…? எதனால்…?

Agastyar tamil

உலகில் உள்ள எல்லா மொழிகளுக்குள்ளும் தமிழ் சொல்லின் சுருதி கண்டிப்பாக இருக்கும்…! ஏன்…? எதனால்…?

 

ஆதியிலே காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் மிருக இனங்களிலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள நஞ்சை வென்றிடும் மூலிகைகளையும் தாவரங்களையும் அரைத்துப் பூசிக் கொண்டார்கள்.

அப்படிப் பூசிய மணத்தை நுகரும் மிருக இனங்கள் மற்ற விஷமான உயிரினங்கள் இவர்களிடமிருந்து விலகி அப்பால் செல்கின்றது. அதே சமயத்தில் தங்கள் உடலில் பூசிய மணங்களை அவர்களும் நுகர நேர்கின்றது.

ஆக கருவுற்ற அந்தத் தாய் தன்னை அறியாமலே அந்த மணங்களை நுகரப்படும் பொழுது கருவில் உருவான சிசுவிற்குள்ளும் நஞ்சை வென்றிடும் அந்த ஆற்றல் மிக்க சக்தி அணுக்களாக விளைகின்றது. அப்படிப் பிறந்தவன் தான் அகஸ்தியன்.

அவனுடைய வளர்ச்சியில் நஞ்சை வென்றிடும் ஆற்றலை வளர்த்து உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றி நம் பூமியின் துருவப் பகுதியை எல்லையாக வைத்து இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

1.நம் சூரியனோ ஒன்பதாவது நிலை – அதாவது ஒரு காலத்தில் அழியும்
2.ஆனால் துருவ நட்சத்திரமோ பத்தாவது நிலை – என்றும் அழிவதில்லை
3.அந்த அகஸ்தியனின் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிர் அவன் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாகச் செல்லும்.
4.நாமும் அவனைப் போன்றே அழியாத நிலைகள் பெறலாம்.

இந்தப் பிரபஞ்சமே முழுமையாக நஞ்சு கலந்த நிலைகள் கொண்டு சிதறுண்டாலும் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் என்றுமே ஏகாந்த நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும்.

“ஏகாதசி…! என்று சொல்கின்றோம் அல்லவா…!” ஏகாதசி என்றால் பத்தாவது நிலைகள் கொண்டு நாம் ஏகாந்த வாழ்க்கை வாழலாம்…! என்று
1.ஒரு சொல்லுக்குள் அந்தச் சுருதியை அடக்கி (தமிழ்)
2.மனிதனின் வாழ்க்கையில் எதை… எப்படி.. நுகர வேண்டும்…? என்று ஞானிகளால் விரிவாக்கப்பட்டது.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று இங்கே தோன்றிய அந்த உணர்வின் அந்த அலைகளைத்தான் “தமிழ்…!” அதாவது
1.நீங்கள் எந்த மொழியின் பிறப்பில் பார்த்தாலும் சரி
2.தமிழ் இலக்கணத்தின் நிலைகள் அதற்குள் உண்டு.

வேதங்களிலும் சரி… அல்லது அதை இன்று ஆங்கிலத்தில் படித்தாலும் சரி… இந்த உணர்வுகள் அதற்குள் இருக்கும். தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட அந்த உணர்வின் தன்மை
1.அதன் அறிவாகத் தோன்றிய வித்துகளை (ஒலிகளை)
2.எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் இந்தத் தமிழ் இலக்கண மொழிகளே (நாதங்கள்) அங்கு வரும்.
3..நான் தமிழ் நாட்டிலே பிறந்தேன்…! என்ற நிலைக்காக இதைச் சொல்ல வரவில்லை.

அன்று முதல் மெய் ஞானியான அந்த அகஸ்தியன் அகண்ட அண்டத்தையும் அலசிய உணர்வுகள் இந்த உலகம் முழுவதற்கும் படர்ந்தததனால்
1.மனிதன் என்ற நல்ல உணர்வு வரும் போது “தன் இனமாக வளர்த்தது அது…!”
2.அதனால் தான் எல்லா மொழிகளிலும் அவன் உணர்வுகள் இணைந்தே இன்றும் வருகின்றது
3.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அகஸ்தியரைச் சொல்வதும் இதை வைத்துத் தான்…!

அவன் கற்றுணர்ந்த மெய் உணர்வுகளை நமக்குள் இறையாக்கப்படும் போது அந்த உணர்வின் செயலாக்கங்களாக அவனைப் போன்றே ஒளியின் சரீரமாக நாமும் பெற முடியும்…! என்பதைக் காட்டுவதற்காகத் தான்
1.தென்னாட்டுடைய சிவனே… போற்றி… … …!
2.எந்நாட்டுக்கும் இறைவா… போற்றி… … …! என்று
3.ஒவ்வொரு செயல் செய்யப்படும் பொழுதெல்லாம் அந்தப் பாடலைச் சொல்லிக் கொண்டே போகின்றோம்.
4.ஆனால் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்…? என்ற மூலக் கருத்தை அறியாதபடி அதை இராகமாகப் பாடுகின்றோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் அவன். இங்கே கதைகளில் இப்பொழுது சொல்லும் அகஸ்தியர் அல்ல அவர்.

அன்று அகஸ்தியன் எங்கெல்லாம் அமர்ந்தானோ அங்கெல்லாம் ஜீவ சக்தி உண்டு. ஜீவ நீர்களும் உற்பத்தியாகும்.

ஏனென்றால் நம் பிரபஞ்சத்தில் சனிக்கோள் முக்கியமானது. பிரபஞ்சத்தில் வரும் ஆவிகளை எல்லாம் அது நீராக மாற்றும் திறன் பெற்றது. அதன் உணர்வு எதனில் கலக்கின்றதோ அந்த அணுவின் தன்மை ஒரு ஜீவ அணுவாக உருப் பெறுவதற்கு அது தான் மூலமாகும்.

அந்தச் சனிக்கோளின் உணர்வைப் பெறவில்லை என்றால் எதுவாக இருந்தாலும் அது அதனின் ஜீவ அணுக்களை அதாவது ஜீவனை இழந்துவிடும். உதாரணமாக
1.வான் வீதியில் உருவாகும் பல கற்கள் (ASTEROIDS) சனிக் கோளின் சத்தைக் கவரவில்லை என்றால்
2.அந்தப் பாறைகள் எல்லாம் கரைந்துவிடும்.
3.வளர்ச்சி பெறும் தன்மை அதற்கு இல்லை.

ஆகவே இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒரு முக்கியமான நிலைகள் பெற்றது சனிக் கோள். அது செயலிழந்தால் இன்று நம் பிரபஞ்சம் இருக்காது.

இது எல்லாம் அன்று அகஸ்தியரால் கண்டுணர்ந்து வெளிப்படுத்தப்பட்ட பேருண்மைகள்.

Leave a Reply