தியானம் என்றால் என்னமோ… ஏதோ…? என்று நினைக்கிறோம் – ஆனால் அப்படி இல்லை… மிகவும் எளிதானது…!

Dhuruva meditation

தியானம் என்றால் என்னமோ… ஏதோ…? என்று நினைக்கிறோம் – ஆனால் அப்படி இல்லை… மிகவும் எளிதானது…! 

சதா நாம் “மகா காளி… மகா காளி…!” என்று அந்த மந்திரத்தைச் சொல்லிப் போற்றி.. போற்றி…! என்று சொல்லிக் கொண்டிருந்தால் கோபமோ ஆத்திரமோ வரும் – அது ஜெபம்.

1.ஆழமான நிலைகள் கொண்டு
2.வெகு தூரத்தில் இருக்கக்கூடிய அந்த மெய் ஞானிகளின் உணர்வை இழுத்து
3.நமக்குள் சேர்க்கச் செய்கின்றோம் – இது தியானம்.
4.இதை “யார் வேண்டுமானாலும்… செய்யலாம்…!”

மந்திரத்தைச் சொன்னால் அந்த உணர்வுகள் சீக்கிரம் நமக்குள் வந்துவிடும். ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். என்னைத் திட்டிவிட்டார்…! என்ற உணர்வை எடுத்துவுடன் சோர்வாகும். அதுவும் தியானம்தான்.

அவர் திட்டிவிட்டுச் சென்றுவிட்டாலும்… அவர்கள் திட்டியதை மனதில் ஏற்றுக் கொண்டு என்னைத் திட்டினார்களே… என்னைத் திட்டினார்களே…! என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தால் அதுவும் தியானம்தான்.

இப்படிக் கேவலமாகப் பேசிவிட்டார்களே…! என்று எண்ணும் பொழுது சோர்வினுடைய நிலைகள் வரும். அவர்களை எண்ணும் பொழுதெல்லாம் ஆத்திரம் வரும்.

அந்த எண்ணத்தினுடைய நிலைகள் வரும் பொழுது வியாபாரத்தில் ஒருவர் வந்து சரக்கு கேட்கும் பொழுது வெறுப்பு வந்துவிடும். இதுவும் தியானம்தான்.
1.ஆக இது எல்லாம் நாம் என்ன செய்கின்றோம்…?
2.நல்லதை எல்லாம் விலக்கிக் கொண்டு வருகின்றோம்.

அதாவது பிறருடைய சங்கடப்படும் உணர்வுகள் நமக்குள் புகுந்து “நம்மைப் இப்படிப் பழித்துப் பேசிவிட்டார்களே…!” என்ற உணர்வு வந்தால்
1.பாத்திரங்களில் அழுக்குப் பட்ட மாதிரி அதனுடன் படிந்துவிடும்.
2.அதைத் தேய்க்கத் தேய்க்க அது தேய்ந்து கொண்டே இருக்கும்.

நம் நல்ல எண்ணத்திற்குள் பிறர் சொல்லும் துன்பமான எண்ணங்களோ இருளான நிலைகளோ வந்தால் நமக்குள் இருள் சூழும்.

நாம் நல்ல எண்ணத்துடன் இருக்கும் பொழுது பிறர் ஏதாவது “சுருக்…” என்று சொல்லிவிட்டால் இருள் சூழ்ந்துவிடும். அந்த சமயத்தில் ஞானத்தை ஊட்டும் நிலைகள் அங்கே மறையும்..

இதைப் போன்ற தீமையான நிலைகள் வருவதை எல்லாம் அந்த அசுத்தத்தை நீக்கக் கூடியதாக மெய் ஞானிகளின் அருள் ஒளியை எடுத்து நல்லதைச் சேர்க்கும் நிலையாக அதைப் பெறவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

அனைத்து மகரிஷிகளினுடைய எண்ண ஒலிகள் இன்றும் காற்றிலே மிதந்து கொண்டிருக்கின்றது. அந்த மகா ஞானிகளின் அருள் ஒளிகளை நாம் பெறவேண்டும் என்று ஏங்கிப் பெறுவது தான் யாம் சொல்லும் இந்தத் தியானம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா. மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

1.இப்படி ஒவ்வொரு நிமிடமும் அருள் உணர்வுகளை எடுத்துச் சுத்தப்படுத்தும் பொழுது
2.நமக்குள் மாசுபடும் நிலைகள் மாறி
3.நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணத்தின் எண்ணத்தையும் பரிசுத்தமாக ஆக்கிவிடும்.

நீங்கள் இதைச் செய்து பாருங்கள். வாழ்க்கையில் செல்வம் உங்களைத் தேடி வரும். உங்கள் சொல்லிலே தெளிவு வரும்.

இந்தத் தியானத்தின் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை அடிக்கடி எடுக்கப்படும் பொழுது உங்கள் தொழிலேயும் செல்வாக்கைப் பார்க்கலாம். உங்கள் மனதிலும் மகிழ்ச்சியையும் பார்க்கலாம்.

[su_youtube url=”https://youtu.be/mTf1vi9RyvY” title=”காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய தியானம்”]

Leave a Reply