மந்திரங்களை ஜெபிக்கச் செய்து “இது தான் கடவுள்…!” என்று சொல்பவர்கள்

Divine enlightenment

மந்திரங்களை ஜெபிக்கச் செய்து “இது தான் கடவுள்…!” என்று சொல்பவர்கள்

ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் உண்டு. அந்த மந்திரத்தின் தன்மை ஜெபிக்கப்படும் போது ஒரு மனிதனுக்குள் விளைந்த இந்த மந்திரத்தின் உணர்வலைகள் வெளிப்படுகின்றது.
1.அவன் மடிந்த பின் அதே மந்திரத்தை இன்னொருவன் வலிமை கொண்டு ஜெபித்தால்
2.அவனுக்குள் மந்திரம் ஜெபித்து இறந்தவனின் ஆன்மா வந்துவிடும்.

இப்படி மந்திரங்களை ஜெபித்துச் சில ஆவிகளுடைய உணர்வுகளைத் தனக்குள் சேர்த்துக் கொள்கின்றனர்.

அத்தகைய மந்திரங்களை ஜெபித்துக் கொண்ட பின் லேசர் (LASER) இயக்கம் மெஸ்மரிசம் (MESMERISM) என்ற நிலைகளில் சில உணர்வுகளைச் செலுத்திய பின் யாருக்குச் செலுத்துகின்றார்களோ அவர்களுடைய நினைவு இழந்து விடுகின்றது.

இப்படி நினைவு இழக்கச் செய்து மருத்துவ ரீதியாக ஆபரேஷன் செய்கின்றார்கள். சில ஆவிகள் உடலுக்குல் வந்தால் அதற்கு நினைவு தெரியாது.

இதைப் போன்ற நிலைகளில் முறைப்படுத்திச் சில மருந்துகளை உபயோகப்படுத்திப் பழகிய அந்த டாக்டர் எதிர்பாராத நிலையில் உடல் பற்று கொண்டு இறக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

அதே சமயத்தில் அவர் பக்தி கொண்ட நிலையில் மந்திரங்களை ஜெபித்திருந்தால் இறந்தபின் அந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் சென்று அந்த உணர்வின் வேகத்திலேயே அது வேலை செய்யும். அவர் கற்றுணர்ந்த உணர்வுகள் எல்லாம் அவர் புகுந்த உடலுக்குள் வருகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் உலக அனுபவம் பெறுவதற்காக நான் (ஞானகுரு) சுற்றுப் பயணம் செய்யும் போது ஒரு சமயம் ஒரு இடத்தில் இதைப் போன்ற நிகழ்ச்சி நடக்கின்றது.

அவரோ படிப்பில்லாதவர். அவர் உடலுக்குள் இந்த டாக்டரின் ஆன்மா புகுந்த பின் அந்த டாக்டர் செய்த வேலை எல்லாம் செய்யத் தொடங்கினார். உடல் நிலை மிகவும் மோசமானவர்களை இவரிடம் (படிப்பறிவு இல்லாதவரிடம்) கொண்டு வந்து விட்டால் போதும்.

அந்த உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத தீயதுகளை ஆபரேஷன் (OPEN SURGERY) செய்து அகற்றுகிறார்கள் அல்லவா. அதே மாதிரி அவர் அகற்றி விடுகின்றார்.
1.அவரிடம் கத்தியுமில்லை.
2.வேறு ஆயுதமும் இல்லை.

வட இந்தியா பக்கம் சுற்றுப் பயணம் செய்யும் போது இது கண்கூடாகக் கண்ட நிலை. ஏனென்றால் இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் இதே மாதிரி சில அமானுஷ்யமான நிலைகள் செயல்படும் நிலையில் என்ன என்று தெரியாதபடி
1.தெய்வங்களின் பேரைச் சொல்லியும்
2.ஆண்டவன் பேரைச் சொல்லியும் மதங்களாக உருவாக்கப்பட்டு விடுகின்றது.

எங்கள் கடவுள் சக்தி வாய்ந்தவர். பல பல அபூர்வ நிலைகளை எல்லாம் செயல்படுத்துவார் என்று மதத்தின் உணர்வுகளைத் தனக்குள் சேர்க்கப்பட்டு மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் போர் செய்யும் நிலைகளைத்தான் இன்று ஊட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

மதத்தின் கோட்பாட்டின்படி (அது எந்த மதமாக இருந்தாலும் சரி) மந்திரங்களை ஜெபிக்கும் நிலையை முறைப்படுத்தி வைத்திருப்பார்கள். அதை ஜெபிக்கும்படி சொல்வார்கள். ஜெபித்தால் “ஆண்டவன் உன்னைக் காப்பாற்றுவார்…!’ என்று நம்மை வசியப்படுத்தி விடுவார்கள்.

ஆண்டவன் அருளைப் பெற அந்த மந்திரத்தை இத்தனை முறை ஜெபிக்க வேண்டும். இன்னென்ன வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதற்குண்டான வழி முறைகளயும் உருவேற்றுவார்கள்.

இதே வாழ்க்கை முறையில் வாழ்ந்து இறந்த பின் நம்முடைய ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்தி பில்லி சூனியம் ஏவல் போன்ற வேலைகளுக்கு அதைப் பயன்படுத்திப் பல வேலைகளைச் செய்து “இது தான் கடவுள்…!” என்று சொல்வார்கள்.

மெய் ஞானிகள் கண்ட உண்மைகளை அறியும் ஞானத்தின் உணர்வுகள் இல்லை. தான் அறியவும் இல்லை. மற்றவரையும் அறியச் செய்யவிடவில்லை. இது தான் இன்றிருக்கும் நிலைகள்.

ஏனென்றால் நம் உயிரே கடவுள். நாம் எதை எண்ணுகின்றோமோ எதைச் சுவாசிக்கின்றோமோ உயிரிலே பட்ட பின் எண்ணம் சொல் செயலாக அது இயக்குகின்றது.

1.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் சுவாசிக்கும் உணர்வு தான்
2.தெய்வமாக நின்று நம்மை இயக்குகின்றது.
3.நம் வாழ்க்கையையும் வழி நடத்துகின்றது.

மெய் ஞானிகள் கண்ட வழியினை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உணர்த்துகின்றோம். மெய் ஞானிகள் பெற்ற அருள் உணர்வைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்துகின்றோம்.

மெய் ஞானத்தின் உணர்வை நீங்கள் சுவாசித்தால் அது உங்களுக்குள் விளைந்து அவர்கள் கண்ட மெய் உணர்வுகளைத் “தன்னைத் தான் அறிதல்…!” என்ற நிலையில் நீங்கள் உணர முடியும்.

1.வான இயல் புவி இயல் உயிரியல் என்ற அடிப்படையில்
2.இயற்கையின் இயக்கத்தை அந்த மெய் ஞானத்தை மெய் பொருளைக் காணலாம்
3.மெய் ஒளி பெற்று என்றுமே அழியாத ஒளி உடலாகப் பெற முடியும்.
4.உங்களை நீங்கள் நம்புங்கள்.

Leave a Reply