மேல் நோக்கிய சுவாசம் எடுப்பதற்கே குன்றின் மீது கடவுளை வைத்தார்கள் ஞானிகள் – வாசியோகம்

palani hill muruga

“மேல் நோக்கிய சுவாசம் எடுப்பதற்கே… குன்றின் மீது கடவுளை வைத்தார்கள்…!” ஞானிகள் – வாசியோகம்

 

இராக்கெட்டில் கதிரியக்கச் சக்தியைக் கூட்டி அதனுடைய ஆற்றல் மிக்க நிலைகளை ஒன்றச் செய்து அதன் நுனியில் பொருத்தப்பட்டிருக்கும் நுகர்ந்தறியும் சக்தியைக் கொண்டு விண்ணிலே இருக்கக்கூடிய பல ஆற்றலை விஞ்ஞானிகள் அறிகின்றார்கள். படங்களாகவும் எடுக்கின்றார்கள்.

நம் வாழ்க்கையில்
1.எதிர்பாராது கடும் விஷமோ மற்ற எண்ணங்களோ நமக்குள் தோன்றும் நேரங்களிலும்
2.அதீதமான துன்பங்கள் ஏற்பட்டு அதனால் ஆத்திரத்தை ஊட்டும் நேரங்களிலும்
3.ஈஸ்வரா……! என்று உயிருடன் தொடர்பு கொண்டு
4.நம் எண்ணங்கள் அனைத்தையும் வலுவாகக் கூட்டி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்று எண்ணும் போது
5.உங்கள் எண்ணம் விண்ணை எட்ட இது உதவும்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஏற்படும் இதைப் போன்ற நிலைகளில் இயற்கையாகவே உதவி செய்வதற்கு தான்
1.மலைக் குன்றின் மீது முருகனை வைத்து
2.நாம் கீழ் நின்று மேலே நோக்கிப் பார்க்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் விண்ணை நோக்கி நாம் பார்க்கப்படும் போது நம் உடலுக்குள் துன்பத்தை ஊட்டிய அந்த உணர்வின் தன்மைகள் வலுவான நிலைகள் கொண்டு நாம் படி மீது ஏற உதவுகிறது.

களைப்போ சோர்வோ மற்ற நோயால் வேதனைகள் இருந்தாலும் இதை எண்ணாது விண்ணை நோக்கி எண்ணும் போது அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளி நமக்குள் சேர்ந்து அந்த பலவீனமான நிலைகளைக் குறைந்து மெய் ஒளியைப் பெறச் செய்கின்றது.

சாதாரண மக்களும் தனக்குள் அந்த மெய் ஒளியைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் குன்றின் மீதெல்லாம் தெய்வ நிலைகளை வைத்தார்கள் ஞானிகள்.

இயல்பாகவே நம்மை மேல் நோக்கி பார்க்கச் செய்து அந்த மெய் உணர்வை நமக்குள் சுவாசித்து எடுக்கும்படி வழிகாட்டினார்கள் ஞானிகள்.

ஆலயங்களில் தெய்வ நிலைகளைக் கீழ் நோக்கிப் பார்க்கின்றோம். இதை மாற்றி
1.உணர்வை விண்ணை நோக்கிச் செலுத்தி அந்த விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்.
2.மெய் ஞானிகளின் அருள் ஒளியைக் கொண்டு நாம் மேல் நோக்கிப் பார்த்து மகரிஷியின் அருள் ஒளியைப் பெறுவோம்.
3.அவர்கள் சென்ற பாதையிலே நம் உயிராத்மாவை ஒளி நிலை பெறச் செய்வோம்.

அனைவரும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம் என்று உறுதிப்படுத்தி
1.நீங்கள் ஒவ்வொருவரும் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியுடன் சுழன்று
2.உங்கள் வாழ்க்கையில் வந்த இன்னல்கள் நீங்கி
3.உங்கள் பேச்சும் மூச்சும் நீங்கள் சுவாசிப்பது அனைத்தும் உங்கள் உடலுக்குள் ஆற்றல் மிக்கதாகச் சேர்ந்து
4.நீங்கள் பேசும் பேச்சும் மூச்சும் பிறருடைய துன்பத்தைப் போக்கி மகிழ்ச்சியினுடைய நிலைகளைப் பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

நீங்கள் எங்கே சென்றாலும் அந்த மகிழ்ச்சிக் கடலிலே அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கும் நிலைகள் பெறவேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

Leave a Reply