என்னுடைய ஆசை…!

Trust yourself

என்னுடைய ஒரே ஆசை…!

நம் பூமியிலே மனிதராக வாழ்ந்தவர்கள் விண்ணின் ஆற்றலைப் பெற்று தங்கள் உடலிலே அதை விளைய வைத்துக் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக மாறி விண்ணிலே நட்சத்திரமாகச் சென்று விட்டார்கள்.

அவருக்குள் விளைய வைத்த சக்திகள் நம் பூமிக்குள்ளும் உண்டு. அங்கே விண்ணிலேயும் உண்டு. அதை எல்லாம் பெறக்கூடிய தகுதியை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) ஏற்படுத்தினார்.

போகமாமகரிஷி எப்படி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்துச் செயல்படுத்தினாரோ அதை எடுப்பதற்காக வேண்டி
1.அவனுடைய வாசனையை நீ சுவாசிடா…! என்று இம்சை கொடுத்தார்.
2.எனக்கு அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.

குருநாதர் சில நேரம் பைத்தியக்காரத்தனமாகப் பேசுவார். அவர் எந்த நேரத்தில் எப்படிப் பேசுவார்…! என்ன செய்வார்…? என்று ஒன்றுமே புரியாது. பல பாஷைகளில் பேசுவார். பல விஷயங்கள் சொல்வார். அர்த்தம் புரியாது.

அர்த்தம் புரியாதபடி கஷ்டமான நிலையில் சிக்கலாகிப் போய் நான் உட்கார்ந்து இருக்கும் போது சுரீர்…..!” என்று எனக்கு இரண்டு உதை கொடுப்பார்.
1.சுரீர்…. என்று அடி விழுந்தவுடன்
2.என்னுடைய இந்த மனித உணர்வுகள் மாறி
3.அவருடைய உணர்வுகளைச் சொல்லக் கூடிய நிலைகள் வந்து
4.அந்த எண்ணத்துடன் நான் கலக்கும் நிலைகள் வரும் போது அவர் சொன்னதை என்னால் உணர முடிந்தது… அர்த்தம் காண முடிந்தது….!
5.நான் இப்படி உதை வாங்கி உதை வாங்கித்தான் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு வந்தேன்.

இப்பொழுது சுருக்கமாக உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் எடுத்துச் சுவாசித்தால் உங்களுக்கு நன்றாகிப் போகும் என்று சொல்கிறேன்.

எங்கே சாமி…? அதற்கெல்லாம் நேரமில்லை…! என்கிறார்கள்.

நமக்கு வேண்டியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து அதைக் கேட்ட பின் நாமும் வேதனைப்படுகிறோம். அந்த வேதனை நமக்குள் விளைந்து நம்முடைய நல்ல குணத்தில் எல்லாம் கலந்து விடுகின்றது.

அப்புறம் நம்முடைய சொந்தக் காரியத்திலும் கூட வேதனைப்பட ஆரம்பித்து விடுகிறோம். நம் தொழிலிலும் வேதனைப்படுகின்றோம். நம் உடலுக்குள்ளும் வேதனைப்படுகிறோம்.

இதை போன்ற நிலைகளிலிருந்து நீங்கள் மீள்வதற்கு எத்தனையோ வழிகளைச் சொல்கிறோம். உங்களைக் காத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம்.

சமையல் செய்தால் நம் கையில் அழுக்குப் பட்டு விடுகிறது. அதைத் துடைக்கிறோம் அல்லது கழுவுகிறோம். தண்ணீர் எடுக்கப் போனாலும் நம் துணி மேலேயெல்லாம் தண்ணீர் பட்டு விடுகிறது. அதனால் அழுக்குப்பட்டு விடுகிறது. இரண்டாவது முறையும் துவைக்கிறோம்.

தண்ணீர் தான் எடுத்துக் கொண்டு வருகிறோம், மேலே தண்ணீர் பட்டு விட்டால் தூசியும் அழுக்கும் சீக்கிரம் ஒட்டிக் கொள்கிறது.
1.தண்ணீரில் தானே துணிகளைத் துவைத்துத் தூய்மையாக்குகிறோம் என்று சொன்னாலும்
2.ஈரம் பட்டு விட்டால் காற்றில் உள்ள அழுக்கு சீக்கிரம் ஒட்டிக் கொள்கிறது.
3.அப்புறம் சீக்கிரம் நம் உடலில் நோய் வந்து விடும்.

ஆக… நாம் தவறு செய்யாமலேயே நமக்குள் எத்தனையோ நிலைகள் வருகிறது. சாமி என்ன இப்படிச் சொல்கிறாரே…! என்று நினைக்க வேண்டாம்.

நமது குருநாதர் எத்தனையோ சிரமப்பட்டு மெய் ஞானிகளின் மெய் ஒளியைப் பெறுவதற்குக் கற்றுக் கொடுத்தார். அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த அதே அருள் வழியில் தான் உங்களிடமும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

நீங்கள் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பெற்று ஒவ்வொருவரும் ஞானிகளாக வளர வேண்டும் என்பது தான் என்னுடைய ஒரே ஆசை.

Leave a Reply