வாபஸ் நீ வாங்கிக்கோ…! என் உடலிலிருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்…!

hold the truth

வாபஸ் நீ வாங்கிக்கோ…! என் உடலிலிருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்…! – விளக்கம்

திடீரென்று யாராவது உங்களைக் கோபித்தால் உங்கள் உடலில் என்ன செய்கின்றது…? ஜிலு…ஜிலு…ஜிலு…! என்று கோபம் அப்படியே “சுர்ர்ர்….ர்ர்…!” என்று ஏறும். ஏறுகிறதா இல்லையா…?

சண்டை போடுபவர்களையும் திட்டுபவர்களையும் பார்த்தவுடனே “சுர்ர்…ர்ர்..” என்று ஏறி உடலெல்லாம் நடுக்கமாகின்றது பதட்டம் வருகின்றது…!

உங்கள் பையன் அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்தான். அவனை இரண்டு பேர் சேர்ந்து உதைத்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டவுடனே “ஆ…! அப்படியா…? என்று சொல்லி உடம்பெல்லாம் கிடு…கிடு… என்று ஆடுகிறதல்லவா…!

அதைப் போல நீங்கள் துன்பம் என்று எம்மிடம் (ஞானகுரு) சொல்லும் பொழுது
1.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று
2.என்னுடைய கூர்மையான எண்ணங்கள் கொண்டு உங்களை ஆசீர்வதித்து
3.அதை உங்களைச் சுவாசிக்க வைக்கின்றோம்.

உங்கள் உடலுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி போனவுடனே கெட்டதெல்லாம் மாறி அந்த நரம்புகளுக்குள் இருக்கும் சிக்கல் உடலில் இருக்கும் பிடித்தங்கள் எல்லாமே விட்டு விலகுகின்றது.

அப்படி விலகும் பொழுது சில பேர் “ஐய்யய்யோ…!” எனக்கு ஏதும் அருள் வந்து விட்டதோ…! பேய் பிடித்துவிட்டதோ…! என்று இப்படி நினைப்பவர்கள் சில பேர் இருக்கின்றார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்த பின் உடலிலிருக்கும் விஷமான தன்மை அது அடங்கிப் போகும்.
1.அப்பொழுது அந்த உணர்வின் தன்மையாகும் பொழுது
2.”நடுங்குவது போல” உங்கள் உணர்வுக்குள் இருக்கக்கூடிய வலி குறைந்து அது இறங்கும்.
(தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்கள் உடலுக்குள் அந்த நடுக்கத்தை உணரலாம்)

அது எப்படி இறங்குகிறது..? இறங்குகிறதா இல்லையா..? என்று யாம் அவர்களிடம் கேட்டோம் என்றால் தொட்டுப் பார்ப்பார்கள்… இறங்குகிறது…. வலி இல்லை…! என்று சொல்வதற்கு மிகவும் திகைப்பாக இருக்கும்.

1.உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகலும்…!
2.தீமைகள் நீங்கி எல்லாம் சரியாகப் போகும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று தான்
4.யாம் சொல்லி வாக்காகக் (சக்தியை) கொடுக்கின்றோம்

நீங்கள் சொல்கிறீர்கள்… என்னை விட்டு இந்தத் துன்பம் எங்கெங்கே போகின்றது…! நான் நன்றாகத் தூங்கி ஒரு மாதமாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

உங்கள் வலியும் வேதனையும் போய்விடும் என்று உள்ளுக்குள் சொல்லி அந்தச் சக்தியை யாம் அவர்களுக்குள் பாய்ச்சிய பிற்பாடு
1.வாபஸ் நீ வாங்கிக்கோ…!
2.என் உடலில் இருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று சொல்லி அதை இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றார்கள்.
3.திருப்பி அதையே சொல்கிறார்கள்.

அவர்கள் தான் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் கூட வந்தவர்கள் சும்மாவா இருக்கின்றார்கள்…? உங்கள் துன்பமெல்லாம் நீங்கிவிடும் என்று யாம் சொன்னால் கேட்கிறார்களா…?

அப்படி இல்லைங்க…! இது… மூன்று மாதமாக விடாத “பெரிய சனியன்…! பெரிய தொல்லையாக இருக்கிறது…!” என்கிறார்கள்.

அதனால் தான் உங்களுக்குப் பல முறை சொல்கிறேன். மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன். உங்களை அறியாது வந்த துன்பங்கள் அனைத்தும் போக வேண்டும் என்று தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட கட்டளைப்படி இதைச் செய்து கொண்டிருக்கின்றேன். உபதேசித்த உணர்வுகளை நீங்கள் அப்படியே பதிவாக்கி ஏற்றுக் கொண்டால் இது குருவாக நின்று உங்களைக் காக்கும்…!

குரு வாக்கு என்பது சாதாரணமானதல்ல…!

Leave a Reply