இதைப் பதிவு செய்தாலே… கண்களால் பல அற்புதங்களை நீங்கள் காணலாம்…!

hare-krishna-hare-krishna

இதைப் பதிவு செய்தாலே… கண்களால் பல அற்புதங்களை நீங்கள் காணலாம்…!

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்லது செய்வதாக எண்ணி ஒரு மனிதன் வேதனைப்படுபதைப் பார்த்து நுகர்ந்து அறிந்து கொள்கின்றீர்கள். அதன் பிறகு அவருக்கு நீங்கள் நல்ல உதவிகளைச் செய்கின்றீர்கள்.

ஆனாலும் உங்கள் நல்லது செய்யும் எண்ணத்திற்குள் அவர் வேதனைப்பட்ட அந்த வேதனையான விஷமான உணர்வுகள் இணைந்து
1.உங்கள் நல்ல அறிவை மறக்கச் செய்கின்றது.
2.இதான் சிறு திரை… சித்திரை…!
3.அந்தச் சிறு திரையை உடனே நீக்க வேண்டும்.

நாம் வேதனைப்படுவோரைப் பார்த்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல எண்ணங்களில் இணைந்திடாது தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்…?

1.அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி
2.இந்த உணர்வினை நம் நல்ல அறிவில் இணைத்து நம் நல்ல அறிவு மங்கிடாது
3.எதனையுமே தெளிவாக அறிந்திடும் தெரிந்திடும் அந்த அறிவை நாம் வளர்த்திடல் வேண்டும்.

இல்லையென்றால் வேதனையான விஷத்தின் தன்மை நல்ல அறிவில் கலந்து விட்டால்
1.மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை உங்களால் நுகர முடியாது.
2.நுகர்ந்தாலும் உங்கள் வேதனையை நிவர்த்திக்க முடியாது.

ஒரு வேதனைப்பட்ட மனிதனின் உணர்வுகள் நம் நல்ல அறிவை மறைத்த பிற்பாடு இன்னொரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து இதை மாற்ற முடியாது.

அப்படி அதை மாற்ற வேண்டும் என்றால் வேதனையான நஞ்சினை நீக்கிய அந்த மகரிஷியின் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று இதனுடன் இணைக்க வேண்டும். இணைத்தால் அந்த நஞ்சு ஒடுங்கும்..!

ஆகவே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தவும் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு செல்வதற்கும் தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

இப்பொழுது இதை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் போதே
1.உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளுடன் இணைத்துக் கொண்டால்
2.அந்த வேதனையான உணர்வுகளை நுகர்வதைத் தவிர்த்து
3.அருள் உணர்வை நுகர முடியும். மகிழ்ச்சியை உண்டாக்க முடியும்.

தீமைகளை வென்று நஞ்சினை வெல்லும் ஆற்றலை வலு பெறச் செய்வதற்காகத்தான் உங்களுக்குத் தெரியாமலேயே இந்த உபதேசத்தின் வாயிலாக மகரிஷிகளின் சக்தி வாய்ந்த உணர்வுகளை உங்களுக்குள் சேர்ப்பிக்கின்றோம்.

உங்கள் நல்ல அறிவைக் காக்க இது உதவும். இதைப் படித்துப் பதிவு செய்த பின் மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினாலே போதும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவி உடலுக்குள் சென்று உங்கள் நல்ல அறிவை மறைத்துக் கொண்டு இருக்கும் அந்த நஞ்சான இருளை நீக்கி ஒளியாக மாற்றும்.

திரும்பத் திரும்பச் சொல்கிறோம் என்று எண்ண வேண்டாம். மீண்டும் உங்களை ஞாபகப்படுத்தி அந்த ஆற்றலைப் பெறச் செய்கின்றோம். திருப்பித் திருப்பிச் சொன்னால் தான் உங்களுக்குள் அந்த அர்த்தத்தை உணர முடியும்.

அதாவது தீமைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் கண் கொண்டு பார்த்ததும் உங்கள் நல்ல அறிவு இருண்டு விடுகின்றது. உங்கள் செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்ல அறிவின் செயலே முழுமையாக இழந்து விடுகின்றது.

அது எப்படிக் கண்கள் வழியாக உங்களுக்குள் புகுகின்றதோ அதே போல இந்த உபதேசத்தின் வாயிலாக
1.மகரிஷிகளின் உணர்வலைகளை உங்கள் கண்ணின் நினைவலைகளுக்குக் கொண்டு வரச் செய்து
2.உங்கள் கண்ணின் வாயிலாகவே பதியச் செய்து கொண்டிருக்கின்றோம்.
3.உங்களை அறியாமலே பதியச் செய்கின்றோம்.
4.மீண்டும் எண்ணும் போது உங்களை அறியாமலே உங்களுக்குள் பல அற்பதங்கள் நடக்கும்.
5.தீமைகளை அடக்கும் அந்தத் தீமைகளை நீக்கிடும் ஆற்றல் நீங்கள் பெறுகின்றீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட் கட்டளைப்படி உங்களுக்குள் மெய் ஞானிகளின் உணர்வைத் தூண்டச் செய்து அதைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம். அதை நீங்கள் ஏங்கிப் பெற்று ஒவ்வொரு நொடியிலேயும் உங்கள் நல்ல அறிவைத் தெளிவாக்கிக் கொண்டு வர முடியும்.

அவ்வாறு தெளிவாக்கிக் கொண்ட பின் உங்கள் வாழ்க்கையில் இது முழுமை பெற்றால் பூரண நிலாவாக இருப்பது போல் உங்கள் உடலிலுள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியின் சிகரமாக மாறி பிறவியில்லா நிலை அடைய முடியும்.

ஆகவே
1.அந்த நிலையைப் பெறச் செய்வதற்கும்
2.இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளை அகற்றி
3.தீமையற்ற செயலாக உடலுக்குள் வளர்த்து
4.நம் எண்ணத்தால் தீமையற்ற செயல்கள் வராதபடி தடுத்து
5.நம்மை அது செயலாக்காதபடி காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம் (ஞானகுரு)…!

Leave a Reply