“மெய் ஞானிகளின் ஸ்டேசனை” உங்களுக்குள் அலைவரிசையாக (FREQUENCY) எடுத்துக் கொடுக்கின்றோம் – ஆன்டென்னாவை அவர்கள் பால் திருப்பி மகரிஷிகள் ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்

sage-station

“மெய் ஞானிகளின் ஸ்டேசனை” உங்களுக்குள் அலைவரிசையாக (FREQUENCY) எடுத்துக் கொடுக்கின்றோம் – ஆன்டென்னாவை (ANTENNA) அவர்கள் பால் திருப்பி மகரிஷிகள் ஆற்றல்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்

இப்போது நாம் சாதாரண மனிதர்களுடன் பேசுகிறோம். பழகுகின்றோம். இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்றால் பகைமையாகி விடுகின்றது.

ஒருவருக்கொருவர் திட்டி ஏசிப் பேசியிருப்போம். இது நடந்து பத்து வருடம் இருக்கும். அவர்களும் மறந்திருப்பார்கள். நாமும் கூட மறந்து போயிருப்போம்.

பிறகு நாம் இங்கே இருக்கும் போது யாராவது ஒருவர் வந்து பத்து வருடத்திற்கு முன்னாடி உன்னுடன் பழகிய அந்த நண்பரை அங்கே அமெரிக்காவில் பார்த்தேன். ஜெக ஜோதியாக இருக்கின்றார் என்று சொன்னால் என்ன நடக்கின்றது.

அவனா…? அயோக்கியப் பயல்…! அவன் பேச்சை இந்த நேரம் பேசாதே ஐயா…! என் குடும்பத்தைக் கெடுத்தவன்…! என்று கோபமும் ஆத்திரமும் ஜிர்…ர்ர்ர்” என்று வரும். ஏனென்றால்
1.பத்து வருடத்திற்கு முன்னாடி நமக்குள் பதிவானது
2.இந்த செல்களை (உடலுக்குள்) நினைவுபடுத்தியவுடனே இது இயங்க ஆரம்பித்துவிடும்.
3.ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

இதைப்போல மனித வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே இந்த உணர்ச்சி வசப்படும் நிலை ஏற்படுகின்றது. ஆனால் இதை நாம் துடைக்கவில்லை என்றால் மன நோயாகி உடல் நோயாக மாறுகின்றது.

அதி விரைவாகக் கணக்கிடும் சூப்பர் கம்ப்யூட்டர் (SUPER COMPUTER) என்று இன்றைக்குக் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள். அதைப் போன்று தான்
1.நமக்குள் என்றோ பதிவு செய்ததை நம் உயிர் என்ன செய்கிறது..?
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் (உணர்ச்சிகள்) பூராம் எலக்ட்ரானிக் (ELECTRONIC) இயக்கங்களாக மாறுகின்றது.

அந்தந்தச் செல்களில் மோதியவுடனே ஜீவன் பெற்று அதனின் இயக்கமாக உடனடியாக நம்மை இயக்குகின்றது. அதுவாகவே நம்மை மாற்றிவிடுகின்றது.

சூப்பர் கம்ப்யூட்டருக்கு எப்படி ஆற்றல் வந்தது…? நாம் டி.வி ரேடியோ இதையெல்லாம் தினசரி பார்க்கின்றோம்… கேட்கின்றோம் அல்லவா…!

விஞ்ஞான ஆராய்ச்சிப் பிரகாரம் கண்டுபிடித்து அதற்குள் (டி.வி. ரேடியோ) கெமிக்கல் கலந்ததை முலாமாகப் பூசியிருப்பார்கள். முலாமாகப் பூசியதிலிருந்து வெளி வரும் ஒலி… ஒளிகளைத்தான் நாம் நுகர்ந்து அதைக் கூர்ந்து கவனித்து நமக்குள் பதிவாக்குகின்றோம்.

ஒரு மனிதனைப் பேசச் செய்து அதை இயந்திரத்தில் பதிவு செய்து மீண்டும் இந்த டேப்பை (TAPE) இயந்திரத்தில் போட்டு அந்த அலை வரிசையாக (FREQUENCY) வெளியில் அனுப்புகின்றார்கள்.
1.அந்த அலைகள் வெளி வரும் போது மனிதனுடைய தொடர்பு அல்லாதபடி
2.மனித உடலில் விளைய வைத்த இந்த உணர்வின் அமில சத்தை
3.இயந்திரத்தில் இருக்கும் கெமிக்கல் கலந்த உணர்வுடன் போகும்போது
4.அதை “ஜீவனற்றதாக…” ஆக்கிவிடுகின்றது.

அந்த உணர்வின் இயக்கத்தின் தன்மை வளர்ச்சி அற்ற நிலையானாலும் கெமிக்கல் கலந்த நிலையாக (செயற்கையாக) மாறி அந்த உணர்வின் சக்தியினுடைய நிலைகலைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொள்கின்றது.

பரப்பிய அலைகளைக் கவருவதற்காக ஒரு ஆன்டென்னாவை (ANTENNA) வைத்திருப்பார்கள். அது எந்தப் பக்கம் ஒலி/ஒளி பரப்பு செய்கிறார்களோ அந்தத் திசைப் பக்கம் அதைத் திருப்பினவுடனே அந்த ஸ்டேஷன் வருகின்றது.

சென்னையோ திருச்சியோ டெல்லியோ அல்லது மற்ற எங்கிருந்து ஒலி/ஒளி பரப்பு செய்கிறார்களோ இந்த ஆன்டென்னாவை அதற்கு நேராக வைக்க வேண்டும். அப்போதுதான் அது எடுத்துக் கொடுக்கும். கொஞ்சம் மாறிப் போனதென்றால் என்ன செய்யும்…? ஒன்றும் வராது.

இதே மாதிரித் தான் நம் உடலில் பதிவு செய்த இந்த நிலையை அவர் அமெரிக்காவில் இருக்கின்றார்…! என்று இவர் சொன்னவுடனே
1.இவர் நினைவின் அலைகள் கண்ணில் வந்து
2.ஆன்டென்னாவில் (கண்களில்) பவர் கூட்டும்போது
3.ஆ…! அப்படியா…! என்று இந்த உணர்வை இழுத்து
4.அந்த உணர்வின் அலையை இங்கே இயக்கச் செய்து அவனை “அயோக்கியன்…!” என்று பேச வைக்கின்றது.

அதே உணர்ச்சியின் வேகத்தில் அயோக்கியன் என்று பேசினாலும் இந்த உணர்வின் தன்மை ஏற்கனவே எந்தச் சண்டை முறைகளைச் செய்தார்களோ அந்த உணர்வின் சக்தி உடலில் விளைந்துவிடும்.

இதைத் தடுப்பதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி அந்த மெய் ஞானிகள் பெற்ற ஆற்றல்மிக்க உணர்வுகளை இந்த உபதேச வாயிலாக “ஒரு ஸ்டேசனாக (FREQUENCY) உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.
1.அதைத் திரும்பத் திரும்ப உபதேசித்து
உங்கள் உடலிலுள்ள எல்லா செல்களிலும் பதிவாக்கி விடுகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சிரமங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் “ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்களின் நினைவை (ANTENNA) விண்ணிலே நினைவினைச் செலுத்துங்கள்.
1.சப்தரிஷி மண்டலம் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வின் அலைகள்
2.இப்பொழுது உங்கள் ஈர்ப்புக்குள் வரும்.

உங்கள் உயிரிலே பட்டவுடன் அந்த ஞானிகள் தீமையை நீக்கிய உணர்ச்சிகள் உங்களுக்குள் இயக்கி உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலுக்குள் சேரும் பொழுது ஏற்கனவே உருவான தீமையான உணர்வின் இயக்கங்களை அடக்கி அதை நன்மை செய்யும் ஆக்க பூர்வமான சக்தியாக அதை மாற்றிவிடும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகளின் அருள் ஞானத் தொடர்பை
1.அந்த ஸ்டேசனை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
2.இருந்த இடத்திலிருந்தே எத்தகைய தீமைகளையும் உங்களால் நீக்க முடியும்.
3.மற்றவர்களுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்ட முடியும்.
4.மெய்ப் பொருள் காண்பீர்கள். மெய் ஒளி பெறுவீர்கள்…!

எமது அருளாசிகள்.

Leave a Reply