மற்றவரைத் துன்புறுத்தி அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வு ஒரு சாந்தமான மனிதனுக்கு எப்படி வருகின்றது…?

healing-rays

மற்றவரைத் துன்புறுத்தி அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வு “ஒரு சாந்தமான மனிதனுக்கு எப்படி வருகின்றது…?”

 

ஒருவன் அரக்கத்தனமாக மற்றவர்களைத் தாக்குகின்றான். அவன் உடலில் விளைந்த உணர்வுகளை நாம் நுகரப்படும் போது அது வாலி. அந்த அரக்கத்தனமான உணர்வுகளை நாம் நுகர்ந்தால் உடனே நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் நடுங்கத் தொடங்கிவிடுகின்றது.

அவனுடைய கார உணர்ச்சிகளும் போக்கிரித்தனமான செயல்களையும் தாங்காது நம் உடல் நடுங்கத் தொடங்கிவிடுகின்றது. சிந்திக்கும் செயலும் இழந்து விடுகின்றது.
1.சிந்திக்கும் செயல் இழக்கப்படும் போது
2.அவன் நம்மைத் தாக்கிக் கொல்வதற்கு முன்
3.அவனைத் தாக்க வேண்டும் என்ற உணர்வுகள் நமக்கு வருகின்றது.

வக்கீலுக்குப் படித்துச் சட்டங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட மகாத்மா காந்திஜி தென்னாப்பிரிக்காவில் கோர்ட்டில் வாதாடும் பொழுது இந்த உண்மைகளை அறிந்து உணர்கின்றார்.

1.எதனால் ஒருவன் மற்றவனைக் கொலை செய்கின்றான்…?
2.சாந்தமானவன் ஒரு கொலைக்கு எப்படிக் காரணமாகின்றான்…! என்ற
3.அந்த இயக்கத்தின் உண்மையை உணர்கின்றார்.

அரக்கத்தனமாக இருக்கும் ஒருவன் மற்றவனைத் துன்புறுத்தி அவனைக் கொலை செய்கின்றான். ஆனால் சாந்தமாக இருக்கும் ஒருவன அவனை உற்றுப் பார்த்து அந்தக் கொலை செய்யும் உணர்ச்சிகளை நுகரப்படும் போது இவனுக்குள்ளும் “கொலை செய்யும் உணர்வுகள்” வந்து விடுகின்றது.

போக்கிரியோ அவன் தான் வாழ வேண்டும் என்பதற்காகப் பிறரைக் கொன்று குவித்து அதன் வழி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றான்.

அதை அவன் நுகரப்படும் போது “ஓ…ம் நமச்சிவாய” அவன் உடலாக மாறுகின்றது. நுகர்ந்த உணர்வுகள் அந்த எண்ணங்களாக அவனைச் செயல்படுத்தத் தொடங்கி விடுகின்றது. ஆகவே “சிவாயநம ஓ…ம்”

அத்தகைய கெடுதல் செய்பவனின் உணர்வினை நாம் நுகர நேர்ந்தால் “சிவாய நம ஓம்”
1.நம்மையும் அந்த உணர்வாக இயக்கச் செய்யும்.
2.அவன் அசுர உணர்வுகள் நமக்குள் இயக்கி
3.நம் உடலிலுள்ள நல்ல அணுக்களையும் அது மாற்றி அமைக்கத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக ஒரு புழுவை ஒரு குளவி எடுத்துத் தாக்குகிறது. அந்த விஷம் புழுவின் உடல் முழுவதும் படர்கின்றது. புழுவின் உடலை உருவாக்கிய அணுக்களில் குளவியின் விஷங்கள் ஊடுருவிய பின்
1.புழுவின் உயிரின் துடிப்பால் அந்த உணர்வுகள் மாறி
2.புழு… “குளவியின் ரூபமாக” மாறுகின்றது.

இதைப் போல அந்த இயற்கையின் உண்மையின் உணர்வுகளை காந்திஜி உணர்கின்றார். இராமாயணத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர் காந்திஜி.

நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ அதன் வழி தான் எண்ணங்கள் வருகின்றது. அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது. அந்த உணர்ச்சிக்கொப்பத் தான் நம் செயல் என்ற நிலைகளைத் தெளிவாக உணர்கின்றார் காந்திஜி.

இவர் இருப்பதோ தென்னாப்பிரிக்கா. அந்நிய நாட்டார் படையெடுத்து அங்கே இருக்கும் எளியவர்களைக் கொடுமைப்படுத்துகின்றனர். அங்கே வாதிட்டு நல்லவர்களைக் காக்க வேண்டும் என்று எண்ணினார் காந்திஜி.

ஆனால் வசதி படைத்தோர் அசுர உணர்வு கொண்டு ஏழ்மையாக உள்ளோரை அடிமைப்படுத்திப் பல கொலைகளைச் செய்து தன் செல்வத்தை வைத்துக் கொலையில் இருந்து மீண்டிடும் நிலையைச் செயல்படுத்துகின்ரனர்.

அப்பொழுது தான் “நாம் படித்தது இதற்காகத்தானா…?” என்று காந்திஜி சற்று சிந்திக்கின்றார்.

1.ஒருவன் செய்யும் தவறிலிருந்து அவனை மீட்கவும்
2.கொலையிலிருந்து ஒருவனை மீட்கவும்
3.கொலைகாரன் செய்யும் தவறிலிருந்து அவனைத் தவறிலிருந்து திருத்தவும் தான் நாம் சட்டக் கல்வி கற்றோமே தவிர
4.தவறு செய்பவனை மீண்டும் காக்கவும்
5.தவறில்லாத பாமர மக்கள் மீண்டும் மீண்டும் துயர்பட வேண்டும் என்பதற்காக
6.நாம் சட்டக் கல்வி கற்கவில்லை..! என்பதனை
7.இராமயாணத்தைக் கற்றுணர்ந்ததனால் இவ்வாறு தெளிவாகச் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

ஒருவன் வெறுப்படைந்து கொதிப்புடன் செயல்படுத்தும் உணர்வுகளை வெளிப்படுத்தினான் என்றால் அந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது. அதாவது சூரியனின் பிள்ளையாக (வாலி) மாறுகின்றது.

கோபத்தால் ஒருவனைக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி கொண்ட உணர்வுடன் பேசும் போது அதைச் சூரியனின் காந்தப்புலன் அறிவு கவர்கின்றது.

அந்தக் கொலை உணர்வுடன் இருப்பவனை இன்னொருவன் உற்றுப் பார்த்து அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வை நுகர்ந்தான் என்றால் அவனிடமிருந்து தப்ப எண்ணுகின்றான்.

ஆனால் கொலை உணர்வின் தன்மை கொண்டவனின் உணர்வுகள் தப்பி ஓடியவன் உடலிலே அதிகமாகும் போது அதே வலிமை கொண்டு
1.கொலை செய்ய வேண்டும் என்ற அதே உணர்வு
2.இவனுக்குள் வளர்ச்சி அடைந்து… வளர்ச்சி அடைந்து…
3.இவனையும் கொலை செய்யும் உணர்விற்கே தூண்டுகின்றது என்ற நிலையை உணர்கின்றார் காந்திஜி.

அதாவது ஒருவன் கொலை செய்து வாழ வேண்டும் என்று எண்ணுகின்றான். அந்த உணர்வின் சத்தை மற்றொருவன் நுகரப்படும் போது அந்தக் கொலையின் உணர்வுகள் அவனுக்குள் பெருகிப் பெருகி அதன் வலிமை கொண்டு
1.தன்னைக் காத்துக் கொள்ள…!
2.கொலை செய்வோனைக் கொலை செய்திட வேண்டும்… என்ற நிலைகள் இப்படி உருவாகின்றது.

“ஓ…ம் நமச்சிவாய.. சிவாய நம ஓ…ம்.” அவன் நுகர்ந்த உணர்வுகள் இவன் உடலில் இயக்கப்பட்டு “அவனை வீழ்த்த வேண்டும்…!” என்ற உணர்வுகள் இங்கே தோன்றுகின்றது என்பதனைத் தெளிவாக உணர்கின்றார்,

ஆனால் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் இயற்கையின் உண்மையின் உணர்வினை அறிந்து நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது. 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வான்மீகி ஒரு கொலைகாரராக இருந்தாலும் அவர் சந்தர்ப்பம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்கின்றார்.

அதை நுகர்ந்த பின் தன்னை அறிந்து இராமாயணக் காவியத்தையே படைத்தார். ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்.

அந்த வான்மீகி கொடுத்த இராமாயணக் காவியத்தைப் படித்துணர்ந்த காந்திஜி அந்த அருள் உணர்வுகளை நுகர்ந்து மக்களைக் காக்கும் மகாத்மாவாக மாறினார். இராமாயணத்தைப் படித்த நிலைகள் கொண்டு தான் அவர் எதை எடுத்தாலும் “ராம்… ராம்…” என்று சொல்வார்.

மகாத்மா காந்திஜியின் அருள் உணர்வுகளை நாம் நுகர்ந்தால் நம்மை அறியாது இயக்கும் பகைமை உணர்வுகளிலிருந்து விடுபட முடியும். சாந்தமும் விவேகமும் ஞானமும் நமக்குள் பெருகும்.

Leave a Reply