நல்லதைச் செய்தாலும் எனக்கு நல்லது நடக்கவில்லையே என்று சஞ்சலப்படாதீர்கள்…!

Serene divine lights

நல்லதைச் செய்தாலும் எனக்கு நல்லது நடக்கவில்லையே என்று சஞ்சலப்படாதீர்கள்…! 

தீமைகளை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிய ஞானிகளின் ஆற்றல்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காகப் பல தடவை யாம் உபதேசித்தாலும் மீண்டும் குறைகளைச் சொல்லி உடலின் இச்சைக்குத்தான் கேட்கின்றனர்.

1.மகரிஷிகளின் அருள் ஒளி பெற நாங்கள் வேண்டும்.
2.எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
4.எங்கள் பார்வையில் மற்றவர்கள் இருளை அகற்றும் திறன் நாங்கள் பெற வேண்டும்.
5.எங்களை இருள் சூழாத நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள் பல முறை சொல்லியும் பார்த்து விட்டேன்.

தேடி வருகின்றனர். ஆனால் ஆசை இந்த உடலின் இச்சைக்கே வருகின்றனர். இந்த உடலில் நமக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்றால் அருள் ஒளியைப் பெற்றால் தான் மகிழ்ச்சி பெறும் தன்மையே வருகின்றது.

மகிழ்ந்திடும் உணர்வுகள் உடலுக்குள் வளர வளர ஒளிச் சுடராக ஒளியின் சரீரமாக மாற்றிடும் வல்லமையும் பெறுகின்றது.

இதை நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ முறைகளைச் சொல்கின்றேன். வருவோர் எல்லாம்
1.அவர்களுடைய குறைகளின் வலிமையைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே தவிர
2.அதிலிருந்து விடுபடும் வலிமையான சக்தியைப் பெறவேண்டும்…!
3.எங்கள் காரியங்கள் வெற்றியாக வேண்டும்…! என்று கேட்போர் இல்லை.

ஏனென்றால் நீங்கள் எல்லோரும் வாழ்க்கையில் அறியாது வரும் இருளிலிருந்து மீள வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றோம். அந்த மகா ஞானிகளின் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று அருள் ஒளியைப் பாய்ச்சுகின்றோம்.

அதைப் பெற்றாலும் தனக்குள் இருளை வைத்து அதை மறைத்து விட்டு அதை வளரவிடாது செய்யும் நினைவாற்றலே உங்களுக்குள் பெருகுகின்றது.

அதைப் பிரித்துக் கொண்டே தான் இருக்கின்றேன். ஆகவே ஆறாவது அறிவின் திறனைப் பயன்படுத்தி அருள் ஒளிச் சுடரை உங்களுக்குள் உருவாக்கும்.

எதற்காக இதைச் சொல்கிறோம் என்றால்
1.ஒரு அழுக்கு நீரில் நந்நீரை விட்டால் முதலில் அதுவும் அழுக்காகத் தான் செய்யும்…
2.நல்லதை விட்டாலும் அழுக்காகத்தான் போகும் என்ற மனக் குழப்பத்தையும் உண்டாக்கும்…! பலவீனமும் ஆகும்…!
2.ஆனால் நந்நீர் அதற்குள் “சேர…சேர…சேர…” அழுக்குகள் மறையத்தான் செய்யும்.

உங்களை நம்பி இதைச் செய்து பாருங்கள். உங்களுக்குள் அற்புதத்தை நிகழ்த்த முடியும்.

Leave a Reply