உடல் ஒரு குகை – உடலான குகைக்குள் தீமைகள் புகாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

Third eye soul

உடல் ஒரு குகை – உடலான குகைக்குள் தீமைகள் புகாது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் “புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!”

பரிணாம வளர்ச்சியில் நாம் எத்தனையோ பல கோடி உடல்கள் பெற்று வந்தாலும் “நம் எண்ணத்தால் தான் காக்கப்பட்டு… இன்று மனிதனாக வந்துள்ளோம்…!”

வாலி என்ற வலிமையான உணர்வுகள் அது இரண்யனாகி
1.அத்தகைய நஞ்சான உணர்வுகளை மாற்றி மாற்றி
2.பல கோடித் தீமைகளிலிருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வுகள் இரையாகி
3.அந்தத் தீமைகளை வெல்லும் உடல் அமைப்பாக உயிர் நம்மை உருவாக்கியுள்ளது.
4.அந்த உயிரை நாம் மதிக்க வேண்டும்.

நம் உயிரை மறந்தால் “யாரோ என் உடல்…!” என்ற நிலைகள் கொண்டு இந்த உடலின் இச்சை கொண்டு வளர்க்கும் பொழுது உடலுக்குள் இரண்யனாக மாறி மனிதான பின் மீண்டும் அரக்கனாக மாறுகின்றது.

அதாவது “தசப்பிரியன்” உடலின் மீது பற்று வருகின்றது. உடல் பற்று கொண்டால் இயற்கையின் உண்மையின் இயக்கத்தை அறிய முடியாது

தீமைகளை நீக்கி மகிழ்ச்சி என்ற நிலையில் மனித உடல் பெற்று வந்த நாம்
1.மகிழ்ச்சியை உருவாக்கும் அந்த உணர்வுகளை மறந்துவிட்டால்
2.நமக்குள் அந்தச் சந்தோஷத்தை இழக்கின்றோம்
3.”சீதாவை இராவணன் சிறைப்பிடித்தான்…!” என்று இராமாயணம் இதைத் தெளிவாகக் காட்டுகின்றது.

இதை மாற்றுவதற்கு என்ன வழி…?

நாம் சமையல் செய்யும் பொழுது பல சரக்குகளைச் சேர்த்து ஒரு ருசியாக மாற்றுகின்றோம். அதைப் போல பல இன்னல்கள் பல குறைகள் வந்தாலும் அதை நல்லதாக மாற்றிக் கொள்ளும் சக்தி நமக்கு உண்டு.

அப்படி நல்ல உணர்வாக மாற்றும் நிலைக்குத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் சொல்லிப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம். துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

வேதனைப்படும் உணர்வை நாம் சுவாசித்தால் உயிர் வழியாகத்தான் (புருவ மத்தியின் வழியாக) அது உடலுக்குள் செல்ல வேண்டும். உயிர் வழியாகச் செல்லும் அந்தப் பாதையை நாம் அடைத்துப் பழக வேண்டும்.

1.நம் உடல் ஒரு குகை
2.குகை வாசலைப் பாறையைப் போட்டு மூடுவது போல்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் போட்டு மூடி விட்டால்
4.தீமை செய்யும் எந்த உணர்வுகளும் நமக்குள் போகாது
5.எந்தத் தீமையும் நம்மை இயக்காது…!

ஆகவே இவ்வாறு தீமை நமக்குள் புகாது தடுத்துப் பழகுதல் வேண்டும். அதற்குத்தான் உங்களுக்கு இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களுக்குள் பெறக் கூடிய தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று உடல் பெறும் உணர்வை மாற்றி உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியாக மகிழ்ச்சியாக வாழுங்கள். எமது அருளாசிகள்.

Leave a Reply