“பூர்வ புண்ணியம்” என்றால் என்ன…?

yashoda-with-kanha

“பூர்வ புண்ணியம்” என்றால் என்ன…?

 

பொழுது போக்கு என்ற நிலையில் டிவியைப் பார்க்கின்றார்கள். அதையே கர்ப்பமுற்ற ஒரு தாய் ஒன்றிலிருந்து மூன்று மாதம் கரு வளர்ச்சியாகும் நிலையில் இருக்கும் பொழுது பார்த்தால் ஏற்ப்டும் விளைவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

டிவியைப் பார்க்கப்படும் போது ஒருவருக்கொருவர் சண்டை போடுபவர்களைப் பார்ப்போம்.

ஐயோ… பார்…! எப்படிச் சண்டை போடுகின்றார்கள் பார்..! என்று இதையெல்லாம் நம் எண்ணத்தால் எண்ணி எடுப்போம். அந்தச் சண்டை போடும் உணர்வு அந்தக் கருவிலே உள்ள குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிடும்.

திருடினான்… கொள்ளை அடித்தான்… கொலை செய்தான்…! என்று அதிகமாகப் பத்திரிகைகளில் படிக்கின்றோம்.

ஐய்யயோ… இப்படி உலகத்தில் நடக்கின்றதே…! உலகம் மிகவும் கெட்டுப் போய்விட்டது… என்ற இந்த உணர்வுகள் அனைத்தும் கருவிலே வளரக்கூடிய குழந்தைக்குப் பதிகிறது.

இதெல்லாம் பத்தாது என்று டிவியை வேறு போட்டுப் பார்க்கின்றோம். அதிலே பார்த்தோம் என்றால் அசுர உணர்வுகளையும் அசுரத்தனமான செயல்களையும் இரக்கமற்றுக் கொன்று குவிக்கும் நிலைகளையும் அழிக்கும் தன்மைகளையும் காண்பிக்கின்றார்கள்.

அதையெல்லாம் ரசித்துப் பார்ப்பார்கள்.

இதுவும் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குப் பதிவாகி விடுகின்றது பூர்வ புண்ணியமாக.

அடுத்துக் குழந்தை பிறந்த உடனே அவன் என்ன செய்வான்…?

சின்னக் குழந்தையாக இருக்கும் பொழுதே “டமார்… டுமார்…” என்று சண்டை போடுவான். யா.. டுஷ்.. யா… டுஷ் என்று கராத்தே விளையாடுவான். (ஒன்றும் தெரியாத வயதில்)

பெரியவர்களுக்கு இன்று டிவியோ கம்ப்யூட்டரையோ இயக்கிச் சரியாக வைக்கத் தெரியாது. ஆனால் இந்த இரண்டு வயதுக் குழந்தை அதை அழகாகத் திறந்து இயக்குகின்றான்.

ஏனென்றால் இதெல்லாம் கருவிலே இருக்கும் போது தாய் உற்றுப் பார்த்தது. அதைக் கூர்மையாகப் பதிவாக்கியது. அதே உணர்வு வேலை செய்கிறது. குழந்தை திருப்பி வைக்கிறான்.

சினிமாவில் சண்டை போடுவதைத் தாய் பார்த்தது. அதைக் குழந்தையும் செய்கிறான். சினிமாவில் என்னென்ன தந்திரம் செய்கிறானோ அது அத்தனையும் இந்தக் குழந்தையும் செய்கின்றான்.

சிறியவனாக இருக்கும் பொழுது இவ்வாறு செய்தாலும் அதனின் வளர்ச்சியில் பெரியவனாக வரும் பொழுது தாய் எந்த உணர்வுகளை டிவியை உற்றுப் பார்த்து ஆழமாகத் தனக்குள் பதிவாக்கியதோ அந்த வேலையைத்தான் அவன் செய்வான்.

அவனை யாராலும் மாற்ற முடியாது. யார் சொன்னாலும் அவன் கேட்க மாட்டான். தவறின் எல்லை கடந்த நிலைகள் விளைவை அனுபவித்தால் தான் அவன் அதை அறியும் வாய்ப்பு வரும். இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அதனால் தான் அதைப் பூர்வ புண்ணியம் என்பது…! இதை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

தாய் கருவுற்றிருந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும். நாங்கள் பார்ப்போரெல்லாம் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்திடும் நிலைகள் பெற வேண்டும் என்று தாய் தனக்குள் இதை வினையாகக் சேர்க்க வேண்டும். அதையே தனக்குள் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்.

பின் தன் கருவில் இருக்கும் குழந்தையை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் ஒளி என் கருவிலே இருக்கக்கூடிய குழந்தை பெற வேண்டும்
2.அது இருள் நீக்கிப் பொருள் கண்டு உணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3..உலகையே காத்திடும் உணர்வுகள் என் கருவில் வளரும் சிசுவிடத்தில் விளைய வேண்டும் என்று
4.உயர்ந்த ஞானத்தை அந்தக் கருவிலே விளையக்கூடிய குழந்தைக்கு ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்களுக்குள் இதை வினையாகச் சேர்க்க வேண்டும்
5.குழந்தைக்கு அந்த ஞான உணர்வுகள் பூர்வ புண்ணியமாக அமையும்.

இப்படிப் பிறக்கும் குழந்தை ஞானியாகத் தோன்றுவான். உலக ஞானம் பெறுவான். குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்குவான். அவன் சிறிய வயதில் செய்யும் செயல்கள் அனைவரையும் மகிழ்ச்சியூட்டுவதாக இருக்கும்.

பெரியவனாகும் பொழுது மற்றவர்களுக்கு நல்ல வழியைக் காட்டக்கூடியவனாக உத்தம ஞானியாக வருவான். தன்னையும் காத்துப் பிறரையும் காக்கும் சக்தியாக வருவான்….!

Leave a Reply