மற்றவர்கள் நம்மைப் பழித்தால் புரையேறுமா…?

சப்தரிஷி மண்டலம் துருவ நடத்திரம்

மற்றவர்கள் நம்மைப் பழித்தால் புரையேறுமா…? 

நண்பர்களாக ஒருவருக்கொருவர் பழகுகின்றோம். குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் பற்றும் பாசத்துடன் இருக்கின்றோம். உறவினர்களுடனும் நாம் பாசமாப் பழகுகின்றோம்.

1.பாசத்துடன் நாம் பழகி வந்தாலும்
2.நாம் (ஒவ்வொருவரும்) பேசியது நமக்குள் பதிவானது நமக்குள் உருவானது இரண்டும் கலந்தது
3.இது எல்லாவற்றையும் சூரியனின் காந்த சக்தி (வெயில் என்று சொல்கிறோம் அல்லவா) எடுத்து
4.இங்கே தனித்தனியாக (அலாக்காக) அலைகளாக இந்தக் காற்று மண்டலத்தில் வைத்திருக்கின்றது
5.இன்று BANK என்று சொல்வது போல் காற்று மண்டலத்தில் எல்லாவற்றையும் சூரியன் அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.

டி.வி. ரேடியோ கம்ப்யுட்டர் மூலம் ஒலி, ஒளிபரப்பு செய்கின்றார்கள். அலைகளாகத் தான் இருக்கின்றது. நாம் கண்ணிலேயா பார்க்கின்றோம். பார்க்க முடிவதில்லை.

ஒலி ஒளியாக வருகின்றது. அதை இயந்திரத்தில் எடுத்து எந்த ஸ்டேசனோ அதைத் திருப்பி வைத்தோம் என்றால் அது பிரித்துக் கொடுக்கின்றது. நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகின்றது.

அதைப் போன்று தான் இப்போது நீங்கள் சும்மா இருக்கின்றீர்கள். உங்களுக்கு வேண்டாதவர் அமெரிக்காவில் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

சும்மா உட்கார்ந்திருக்கும் அந்த நேரத்தில் இரண்டு பேருக்கும் வேண்டிய நண்பர் உங்களைச் சந்திக்க வருகின்றார்.

நான் அமெரிக்காவிற்குப் போனேன். அங்கே அந்த நண்பரைப் பார்த்தேன். அவரைப் பார்த்தோம் என்றால் எக்கச்க்கமாகச் சம்பாரிக்கின்றார் என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்.

அதைக் கேட்டவுடனே அந்த அலைகளைக் கவர்ந்து
1.“ஜிர்ர்ர்ர்……!” என்று கோபம் வருகிறது
2.அவனா…? துரோகி..! எனக்கு இடைஞ்சல் செய்தான்…
3.எங்கே போனாலும் அவன் உருப்பட மாட்டான் என்று சொல்கிறோம்.

நமக்குப் பிடிக்காதவன் நன்றாக இருக்கின்றான் என்று சொன்னால் நம்மை அது சந்தோஷப்பட வைக்குமா,…?

அவர் அப்படிச் சொன்னவுடனே அமெரிக்காவிலிருக்கும் அவனின் நினைவலைகள் வருகின்றது. அந்த உருவமே இங்கே தெளிவாகத் தெரியும்.

அவனின் நினைவலைகளை எடுத்து இதனுடன் கலந்து” உருப்படாமல் போவான்…!” என்று சொன்னவுடன் இந்த உணர்வுகள் அங்கே (அமெரிக்காவில்) அவனுக்குள் போய் இணைத்துவிடும் (CONNECT).

1.அமெரிக்காவில் அவர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது இந்த மாதிரி ஆனால் என்றால் புரை ஓடிவிடுகின்றது.
2.மற்றொருவருடன் ஒரு நல்ல பேச்சு பேசிக் கொண்டு இருக்கும் போது உடனே குறுக்காட்டிப் (இடைமறித்து) புரை ஓடுகின்றது.
3.காரோ வேறு ஏதாவது வாகனம் ஓட்டி கொண்டு போனாலும் புரை ஓடும். ஒரு விநாடி அந்த அலைகள் மாறி ஏமாந்தோம் என்றால் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது மோதி ஆக்ஸிடென்ட் ஆகிவிடும்.

சும்மா இருக்கும் போது புரை ஓடுவது வேறு…! சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது புரை ஓடினால் மூக்கு காது தொண்டை ஈரக்கொலை எல்லாம் புரை ஓடிவிடும். “உயிருக்கே ஆபத்தாகும்….!”

மனிதனின் உணர்வலைகள் இப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் இயக்குகின்றது.

இத்தகைய எதிர்பாராது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுத்து ரிமோட் கன்ட்ரோல் (REMOTE CONTROL) போல அந்த அலைகள் நமக்குள் புகாது பாதுகாப்புக் கவசமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

1.அதிகாலையில் எழுந்திருக்கும் பொழுதும்
2.இரவு படுக்கும் பொழுதும்
3.அல்லது வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும்
4.எந்த ஒரு காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாடியும்
5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
6.நாங்கள் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
7.நம் ஆன்மாவில் பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
8.நம் எண்ணத்திற்குள் அந்த மகரிஷிகளின் வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

நம் ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் சக்தி அதிகமானால் ராடார் (RADAR) இயக்கம் போல் தீமை செய்யும் உணர்வலைகள் நம் ஆன்மாவில் வந்து மோதும் சமயம் அதை உள்ளே விடாது விலக்கித் தள்ளிவிடும்.

இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி என்பது. சக்தி வாய்ந்த ஆயுதமாக உங்களுக்குக் கொடுக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Reply