நம் நல்ல குணங்களை மறைக்கும் சிறு சிறு தோஷங்களை எப்படி அகற்றுவது…?

Eclipse

“சித்திரை” – நம் நல்ல குணங்களை மறைக்கும் சிறு சிறு தோஷங்களை எப்படி அகற்றுவது…?

ஒரு ஆடு ஒரு நரியைப் பார்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். நரியோ வலிமையானது. நரியிலிருந்து வெளிப்படும் உணர்வினை ஆடு நுகர்ந்தால் ஆட்டின் உணர்வுகள் அனைத்தும் நரியின் உணர்வாக மாற்றப்படுகின்றது.

அந்த நரியை அடிக்கடி சந்தித்து அது இதைக் கொன்று புசிக்கும் அந்த உணர்வுகள் ஆட்டிடம் தோன்றினால் அந்த உணர்வின் தன்மை வரப்படும் போது ஆட்டின் உணர்வினை இது மறைத்து விடுகின்றது.
1. நரியின் உணர்வுகள் ஆட்டின் உணர்வுகளை மறைத்து
2.அதை மூடிக் கொள்கின்றது.

ஆட்டின் திரையை நீக்கிய பின் அந்த நரியின் உணர்வுகள் பெருத்து அந்த உணர்வின் தன்மை ஆட்டின் உடலில் வித்தாகி விடுகின்றது.

ஆட்டின் உடலை விட்டு (அந்தத் திரையை நீக்கி) உயிர் வெளி வந்தால் நரியின் உணர்வைக் கவர்ந்து அதன் உணர்வின் தன்மை கொண்டு நரியின் உடலுக்குள் புகுந்து நரியாகப் பிறக்கும் தன்மை வருகின்றது.

அதைத் தான் வேதங்கள் கூறுவது ரிக் சாம அதர்வண யஜூர் மீண்டும் சாம என்பது.

ஒரு ஆடும் அந்த உடல் ரிக் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப ரிக் ஆகின்றது. ஒரு நரியும் அது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதுவும் ரிக் ஆகின்றது.

ஆட்டின் மணமோ சாந்தமானது. நரியின் உணர்வை நுகரப்படும் போது இந்த ஆட்டின் உணர்வை அது மறைத்து விடுகின்றது. ஆட்டின் உணர்வை மறைத்த பின் நரியின் உணர்வே வலு பெறுகின்றது.

உதாரணமாக பாலில் பாதாமைப் போடுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பாதாம் கலந்த பாலைச் சாப்பிட்டால் அது நம் உடலுக்குச் சத்து தான்.

ஆனால் அந்தப் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் பாதாமிலும் ஊடுருவி விடுகின்றது. பாதாமின் சத்தையும் இழக்கச் செய்கின்றது. இதைப் போல
1.ஆடு நரியின் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது
2.அதனுடைய விஷத் தன்மைகள் ஆட்டின் சாந்தமான உணர்வை ஆக்கிரமித்து
3.இது ஒரு திரையாக மாற்றிவிடுகின்றது.

இந்தத் திரை மறைவு ஆன பின் சாந்த உணர்வு கொண்ட ஆடாக இருந்தாலும் வலிமை பெறும் நரியின் தன்மையை ஆடு பெறுகின்றது.

உடலை விட்டு வெளி வந்தபின் ஆட்டின் உயிரான்மா நரியின் ஈர்ப்புக்குள் சென்று நரியாக உரு மாறுகின்றது. ஆட்டின் உடல் என்ற திரையை மாற்றிய பின் நரியாக உருபெறும் தன்மை வருகின்றது.

ஞானிகள் அதைத்தான் “சித்திரை…” என்று காட்டினார்கள்.

ஏனென்றால் நம் மனித வாழ்க்கையிலும் இதைப் போன்று எத்தனையோ கோடி உணர்வுகள் ஒவ்வொரு நாளும் சிறு சிறு திரைகளாக நம் நல்ல குணங்களை மறைத்து விடுகின்றது.

நம் நல்ல குணங்களை மறைக்கும்
1.அந்தச் சிறு சிறு திரைகளை நீக்கவில்லை என்றால்
2.ஆடு நரியாக ஆனது போல் நம் நல்ல குணங்கள் மாறி
3.சந்தர்ப்பத்தால் நுகர்ந்த தீமையான உணர்வுகளின் இயக்கமாக அது நம்மை மாற்றிவிடும்.
4.நம் நல்ல குணங்கள் மறையத் தொடங்கும்.

அதை நீக்கும் நிலையாகத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் உள் முகமாகச் செலுத்துதல் வேண்டும்.

அவ்வாறு செலுத்தப்படும் பொழுது நம் ஆன்மாவில் சுழன்று கொண்டிருக்கும் தீமையான உணர்வலைகளைப் பிளந்து (சிறு திரைகளைக் கிழித்து) நம் ஈர்ப்பை விட்டு அகலச் செய்யும்.

நம் ஆன்மா தூய்மை அடையும். நம் நல்ல குணங்கள் வலிமை பெறும்.

கையில் அழுக்குப் பட்டாலோ… அல்லது துணியில் அழுக்குப் பட்டாலோ… “எப்படி உடனடியாக அதைச் சுத்தம் செய்கிறோமோ…!” அதைப் போன்று தீமையான உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து தூய்மையாக்க வேண்டும்.

 

Leave a Reply