சிலர் பேசுவதைக் கேட்டாலே நமக்கு டென்சன் (TENSION) ஆகின்றது… துடிப்பு அதிகமாகின்றது… மூச்சுத் திணறல் கூட வருகின்றது… ஏன்…? – விளக்கம்

Tension stress - relief

சிலர் பேசுவதைக் கேட்டாலே நமக்கு டென்சன் (TENSION) ஆகின்றது… துடிப்பு அதிகமாகின்றது… மூச்சுத் திணறல் கூட வருகின்றது… ஏன்…? – விளக்கம்

 

உதாரணமாக ஒருவன் நம்மிடம் கோபமாகப் பேசுகின்றான் என்றால் அவனை நாம் உற்றுப் பார்க்கின்றோம். அவனிடமிருந்து வெளிப்படும் கோபமான உணர்வைச் சுவாசிக்கின்றோம்.

சுவாசித்தது உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் நம்மை அறியச் செய்கின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் உட்புக நம் உயிரே காரணமாகின்றது.

அந்த உணர்வுகள் அணுக் கருவாகி நம் இரத்தத்தில் கலந்து வந்தபின் குறித்த காலம் வரும் போது அந்தக் கரு வளர்ச்சி அடைந்து நம் உடல் உறுப்புகளில் எந்தப் பாகத்தில் செல்கின்றதோ அங்கே முட்டையாகி வெடித்து முட்டையிலிருந்து அணு வெளிப்படுகின்றது.

அவ்வாறு வெளிப்பட்ட பின் அவன் எந்தக் கோபமாகப் பேசினானோ அதே உணர்வுகளை ஊட்டும் அணுத் தன்மை அடைந்துவிடுகின்றது.

நுரையீரல்களிலேயோ கல்லீரல்களிலயோ அல்லது நம் உறுப்பின் பாகங்களில் முக்கியமான நிலைகளிலயோ ஒட்டிக் கொள்கிறது.

நம் சிரசின் பாகத்தில் புருவ மத்தியிலிருந்து சிறு மூளைக்குச் செல்லும் இடத்தில் அது நுண்ணிய அலைகளை இழுத்து டிரான்சாக்சன் (TRANSACTION) செய்யக்கூடிய இடம். “கவன ஈர்ப்பு நரம்பு…!” என்று சொல்வார்கள்.

ஒன்றை இழுத்து நமக்குக் கொடுக்கக் கூடிய அந்த இடத்தில் அந்தக் காரத்தின் உணர்ச்சி அதிகமாகி விட்டால்
1.நாம் எவ்வளவு சந்தோஷமாக இருந்தாலும் கூட
2.அந்த அணு அங்கே போனவுடனே வெறுக்கும் உணர்வுகளே நமக்கு வரும்.
3.சுவாசிக்கும் பொழுது அங்கே மோத மோத அந்த வேதனையின் உணர்ச்சிகளைத்தான் ஊட்டும்.

சில பேருக்குச் சந்தோஷமாகச் சொன்னாலே நீங்கள் பார்க்கலாம் அது அவருக்கு எரிச்சலாகவே வரும். சந்தோஷமான உணர்வை அவர்களால் தாங்க முடியாது.

ஏனென்றால் எதிர்ப்புணர்வின் தன்மைகள் அந்த டிரான்சாக்சன் செய்யக்கூடிய இடங்களில் இந்த அணுக் கருத்தன்மை அதிகமாக அங்கே அந்தப் பாகம் வெடித்து அந்த உணர்வின் அணுக்கள் அங்கே பெருக்கமாகி விட்டால்
1.மற்றவர் சொல்வதைக் கேட்டுக் கிரகிக்கும் நிலைகள் அது மறுக்கப்படுகின்றது.
2.மகிழ்ச்சி ஊட்டும் நிலையை இழக்கச் செய்து விடுகின்றது.

ஆனால் அத்தகைய நிலைகள் அதிகமாகி விட்டால் நம் உடலிலுள்ள நுரையீரல்களில் துடிப்பின் தன்மை அதிகரித்துவிடும். அப்படி அதிகரித்து விட்டால் என்ன ஆகும்…?

நாம் காரமான பொருளைச் சாப்பிட்டவுடன் “உஷ்…ஆ.. உஷ்…ஆ…” என்று சொல்வது போல இந்த உணர்வுகளால் நுரையீரல்கள் அது சீராக இயக்கும் சக்தி இழந்து விடுகின்றது.

1.அப்போது அந்த நேரத்தில் நமக்குள் அதிகமாகத் துடிப்பும்
2.ஏதாவது வேலை செய்தால் கடினமாகவும்
3.அதிகமாகப் பேசினாலே என்னால் முடியவில்லை போன்ற நிலைகளை உருவாக்கி விடுகின்றது.
(பெரும்பகுதியானவர்கள் இதை நாம் அனுபவித்திருப்போம்)

ஏனென்றால் உயிருடன் ஒன்றச் செய்து உணர்வுகளைத் தாங்கி நம் உடலுக்குள் பரப்பச் செய்யும் இடத்தில் அந்தக் காரமான உணர்ச்சிகள் அணுத் தன்மையாக வெடித்து விட்டால் இத்தகைய நிலை ஏற்பட்டு விடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால் இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…!”

இதைத்தான் விஷ்ணு வரம் கொடுத்து விட்டான் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

அதே சமயத்தில் குறித்த காலம் வரும் போது அணு வெடித்து விட்டால் அதே உணர்ச்சியை ஊட்டும் அந்த அணுக்களாக அது மாறுகின்றது.

அதைத் தான் பிரம்மா உருவாக்குகின்றான்… விஷ்ணுவின் மகன் பிரம்மா என்றார்கள் ஞானிகள்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு அந்த வெப்பத்தால் இணைக்கப்பட்டு அந்த உணர்வின் தன்மை அந்த கருத்தன்மையாக உருவாக்கும் தன்மை தான் விஷ்ணுவின் மகன் பிரம்மா என்று இப்படித் தெளிவாகக் கூறுகின்றனர்.

அந்தச் சிந்திக்கும் இடமான சிரசின் பாகங்களில் இத்தகைய (கோபமான) காரமான அணுத் தன்மைகள் வளர்ந்து விட்டால்
1.நாம் சிந்தனையை இழப்பதும்
2.நம்மை அறியாமலே அடிக்கடி நாம் கோபிப்பதும்
3.சிரசில் ஒரு விதமான வலி இருப்பதும்
4.பிறர் சொல்வது மோதியவுடனே தாங்க முடியாத நிலை (TENSION) வருவதும் போன்ற நிலைகள் உருவாகின்றது.

நாம் ஏதாவது தவறு செய்தோமா…? இல்லையே…! ஆனால் நாம் நுகர்ந்து சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாகப் பெருகிவிட்டால் அதற்குத் தகுந்த உணர்ச்சிகளாக இப்படி ஊட்டுகின்றது.

இது தான் அதில் உள்ள மூலம்.

Leave a Reply