அறுபது வருடத்திற்கு ஒரு முறை வரும் ஆண்டை “ஈஸ்வர ஆண்டு” என்று அழைத்தார்கள் ஞானிகள் – விளக்கம்

lord-eswara-192020

அறுபது வருடத்திற்கு ஒரு முறை வரும் ஆண்டை “ஈஸ்வர ஆண்டு” என்று அழைத்தார்கள் ஞானிகள் – விளக்கம்

 

“ஈஸ்வர வருடம்…” என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்,

சூரியன் உருவாகி ஒரு பிரபஞ்சம் உருவானாலும் அதில் உயிரணு தோன்றி தான் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் அணுவாக மாற்றி உருவாக்கும் உணர்வு பெற்றது.

உயிரை ஈஸ்வரன் என்றும் உயிராக உருவான நாளை ஈஸ்வர வருடம் என்றும் ஞானிகளால் பெயரிடப்பட்டது.

நாம் எண்ணும் எண்ணங்கள் அந்த உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் இயக்க அணுவாக மாற்றி அணுவின் மலம் நம் உடலாக மாறுகின்றது.

1.உயிர் நுகர்ந்த உணர்வுகள் அணுவாகப்படும் போது
2.அந்த அணுவின் வளர்ச்சி தன் இனத்தைப் பெருக்கும் நாளாகவும் அது அடைகின்றது
3.அதனால் தான் ஈஸ்வர வருடம் என்று சொல்வது.

பல கோடிச் சரீரங்களில் உடல் பெற்ற நிலைகளில் உடலின் உணர்வுகள் தீமைகளை அகற்றி அகற்றி அகற்றிப் பரிணாம வளர்ச்சி அடைந்து அடைந்து இன்று நம்மை மனிதனாகப் பரிணாம வளர்ச்சியில் முதுமையின் நிலைகளை அடையச் செய்து உள்ளது உயிர்.

அதே சமயத்தில் மனிதனான பின் பல கோடி உணர்வுகளைக் கடந்து உணர்வின் தன்மைகளை அருள் ஒளியாக மாற்றிடும் பருவம் பெற்றது இந்த மனித உடல்.

பல கோடித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வும் தீமையை நீக்க அருள் ஞானத்தை உருவாக்கும் தன்மை பெற்றது இந்த மனித உடல், அதனால் தான் மனித உடலிலிருந்து வெளிப்படும் மணத்தைக் கார்த்திகேயா என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

தன்னைக் காத்திட வேண்டும்… காத்திட வேண்டும்…! என்ற உணர்வினைக் கூட்டிக் கூட்டிக் கூட்டி இந்த உடலைக் காத்திடும் உணர்வின் தன்மை கொண்ட ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்றார்கள் ஞானியர்கள்.

பாதுகாக்கும் உணர்வு கொண்ட மனித உடல் பெற்றிருந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனை வெறுப்பு இதைப் போலக் கடும் உணர்வுகளை அறிய நேர்ந்தால் உணர்வை நுகர்ந்து தான் அறிகின்றோம்.

1.ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று உற்றுப் பார்த்தால் போதும்.
2.அவன் உணர்வை நமது கரு விழி நமக்குள் பதிவாக்கி விடுகின்றது.
3.அவனின்று வெளிப்படும் வேதனையின் உணர்வை நுகரச் செய்கின்றது கண்ணின் காந்தப் புலனறிவுகள்
4.நுகர்ந்த உணர்வுகள் உடல் முழுவதும் பரவி உணர்த்துகின்றது. உணர்கின்றோம்
5.அந்த உணர்ச்சிகள் இந்த உடலையே இயக்குகின்றது.

இருப்பினும் நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் நம் உயிர் எப்படி இயக்கச் சக்தியாக இயங்கிக் கொண்டு உள்ளதோ இதைப்போல நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றி (அதையும்) ஓர் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

அவ்வாறு மாறினாலும் நமது உயிர் ஈசனாகவும் நாம் நுகர்ந்த உணர்வு அணுவாக உருவாக்கப்படும்போது தனது இனத்தை அது உருவாக்கும் சக்தி பெறுகின்றது. அதாவது
1.நம் உயிர் ஈசனாக இருப்பினும்
2.நம் உடலுக்குள் உருவான அணுவின் தன்மையும் ஈசனாகவே அமைகின்றது.

ஒருவர் செய்யும் உணர்வினைத் தவறென்றோ… தவறில்லை என்றோ… அச்சுறுத்தும் நிலையென்றோ… அச்சுறுத்தாத நிலை என்றோ…! அறிந்தாலும் நுகர்ந்த உணர்வின் தன்மையை உயிர் அந்த அணுவாக உருவாக்கி விடுகின்றது.

அதனால் தான் உயிரை ஈசன் என்று சொன்னார்கள் ஞானிகள்.

வான்வீதியிலே ஓரு உயிரணு தோன்றி தான் உருவான நிலைகள் கொண்டு மனிதனாக வளர்ச்சியாகி அவ்வாறு மனிதனை உருவாக்கிய நிலையை நினைவுபடுத்தும் நாள் தான் “ஈஸ்வர ஆண்டு” என்பது.

அறுபது வருடத்திற்கு ஒரு நாள். இந்த வருடம் கழிந்தால் இனி அறுபது வருடம் கழித்துத் தான் இந்த ஈஸ்வர ஆண்டே வரும்.

மனிதனான பின் அறுபதை எட்டும் போது முதுமையின் உணர்வை அறிந்தான். பல தீமைகளின் உணர்வை அறிந்தான். இருப்பினும்
1.தீமையை அகற்றும் உணர்வை எவர் செயல்படுத்துகின்றனரோ
2.அவரே அருள் ஒளியை உருவாக்கும் அருள் ஞானியாகின்றார்கள்
3.அப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன் “துருவனானான்.. துருவ மகரிஷியானான்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்…!”

அவனின்று வெளிப்பட்ட உணர்வினைப் பின் வந்த மக்கள் நுகர்ந்தறிந்த பின் அவன் ஒளியின் உணர்வாக உருவாக்கியது போன்று இந்த உடலில் உள்ள அணுக்களை ஒளியின் சரீரமாக மாற்றும் பண்பு பெற்றார்கள்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் அகஸ்தியன் வழியில் ஒளியாக மாற்றி இன்றும் ஏகாந்த நிலை கொண்டு வாழுகின்றார்… வளர்கின்றார்… வளர்ந்து கொண்டுள்ளார்…!
1.அவரிடமிருந்து வெளிப்படும் உணர்வினை
2.அவர் காட்டிய வழியில் நமக்குள் பதிவு கொண்டு
3.மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால் அருள் ஒளியை வளர்க்க முடியும்.
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும்.
5.மகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் உருவாக்கிப் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

ஆகவே ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஒளியை நமக்குள் உருவாக்கும் வருடமே “ஈஸ்வர ஆண்டு…!”

Leave a Reply