மண்ணுளிப் பாம்பு என்னைக் குத்திவிட்டது – பச்சிலையைக் கொடுத்து என்னைக் காத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

jupiter, eswarapattar

மண்ணுளிப் பாம்பு என்னைக் குத்திவிட்டது – பச்சிலையைக் கொடுத்து என்னைக் காத்தார் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்…!”

 

மண்ணுளிப் பாம்புக்கு அதனுடைய வாலில் தான் விஷம். வாலில் ஊசி போல் இருக்கும். பொந்து மாதிரி இடங்களில் இருந்து கொண்டு வாலை மட்டும் வெளியில் நீட்டியிருக்கும்.

ஊசி போல இருப்பதை வைத்துக்கொண்டு மேலே ஏதாவது போனால் குருவியோ எலியோ தவளையோ மற்றதோ போனதென்றால் “டக்…” என்று தேள் கொட்டுவது போல கொட்டிவிடும்.

அது மயங்கி விழுந்துவிடும். அந்த உணர்ச்சி தெரிந்தவுடனே வெளியில் வந்து தன் இரையை விழுங்கும். ஏனென்றால் அதற்கு வேகமாகப் போகத் தெரியாது.

நான் ஒரு சமயம் வயலில் போய் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் வயலில் நெல் விதைதிருந்தார்கள்.

அப்போது ஒரு பொந்து மாதிரி இருந்தது. நான் நடந்து போய்க் கொண்டு இருக்கும் பொழுது தெரியாமல் அதை மிதித்துவிட்டேன்.

ஏனென்றால் சேற்றில் செருப்பு போட்டு நடக்க முடியுமா என்றால் முடியாது. அதனால் செருப்பு இல்லாமல் நடந்தேன். காலில் குத்திவிட்டது.

குருநாதர் உன் உடல் மஞ்சளா இருக்குதுடா? உன் உடலில் ஏறிடப் போகுதுடா…! அப்படிங்கிறார்.

அப்போது எனக்கும் குருநாதருக்கும் பழக்கம் கிடையாது. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது.

ஆனால் பதட்டமாக அவர் வந்து “டேய்…! உனக்கு இந்த மாதிரி இருக்கிறது. நான் ஒரு பச்சிலையைத் தருகிறேன். சாப்பிடுடா…! அப்படிங்கிறார்.

அந்தப் பச்சிலையைச் சாப்பிடும் பொழுது அவர் மேலே நம்பிக்கை இல்லை.

ஏனென்றால் அவர் பைத்தியக்காரராக இருந்தார். சாப்பிட்டால் நம்மை எதுவும் கொன்று விடுமோ என்று எனக்குப் பயம். உண்மையில் நடந்த நிகழ்ச்சி இது.

விஷத்தின் தன்மை காலில் பட்டவுடன் கால் எல்லாம் மஞ்சளாக இருக்கிறது. இருந்தாலும் இவர் பைத்தியக்காரன் போல இருப்பதை பார்த்து நம்மை ஏதாவது செய்து விட்டார் என்றால் என்ன செய்வது…! என்ற பயம்.

யாரை…?

குருநாதரைப் பார்த்தால் அப்பொழுது பயம்…! ஆனால் குருநாதர் அவர் என்னை அறியாமலே பல சந்தர்ப்பங்களில் என்னைப் பின் தொடர்ந்தே வந்திருக்கின்றார்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னைக் காத்திருக்கின்றார். இதையெல்லாம் பின்னாட்களில் என்னிடம் தெளிவாகக் காட்டுகின்றார்.

அந்த மண்ணுளிப் பாம்பை மொன்னைப் பாம்பு என்று சொல்வார்கள். அதில் இருக்கக்கூடிய ஊசி ஆணி போன்று பட்டவுடனே இந்த நிலை ஆகும்.

இந்த மாதிரிப் பாம்பினம் விஷங்களைப் பாய்ச்சி விட்டதென்றால் குறை நோய் என்று சொல்வார்கள். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். நோய் மாதிரியே தெரியாது.

பார்ப்பதற்குச் சிலர் நன்றாக இருப்பார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேய்ந்து கொண்டே வரும். இந்த நோய் வந்தால் சீழ் எல்லாம் பிடிக்காது.

ஆனால் கை கால் எல்லாம் அப்படியே மொன்னையாகி விடும். மூக்குச் சதை எல்லாம் குறைந்து கொண்டே வரும். அந்தப் பாமின் விஷத்தின் ஆற்றல் அப்படிப்பட்டது.

அந்த விஷத்தின் உணர்வுகள் மற்ற அணுக்களை மாற்றி, உறுப்புகளைச் சுருக்கி மனிதனையை சுருங்கச்செய்து விடும்.

நம்மை இந்த உயிர் எப்படி எல்லாம் வளர்க்கிறது… மாற்றுகிறது… உடலாக்குகிறது… உருமாற்றிக்கொண்டு இருக்கிறது…!

இத்தனை தீமைகளையும் நீக்க வேண்டும் என்றால் குரு காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

அதை நம் உடலுக்குள் விளைய வைக்க வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்ற வேண்டும்.

Leave a Reply