கடலுக்குள் இருக்கும் ஹைட்ரஜனின் உண்மை நிலைகள் – உப்பு நீரை மழை நீராகச் சுத்தமாகப் பெய்ய வைக்கும் நிலை…!

Serene power of Sages
கடலுக்குள் இருக்கும் ஹைட்ரஜனின் உண்மை நிலைகள் – உப்பு நீரை மழை நீராகச் சுத்தமாகப் பெய்ய வைக்கும் நிலை…!

 

எல்லோரும் “ஏகக்காலத்தில் சேர்ந்து…” மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த பகைமையெல்லாம் நீங்க வேண்டும் என்று எண்ணி
3.அந்த அலைகளைப் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது என்ன நடக்கின்றது…?

நமக்குள் இருக்கும் பகைமை என்ற பிடிப்புகளை அறுத்து விட்டு விடுகின்றோம். நம் மீது பகைமையாக இருப்பவர்களும் வெறுப்பு இல்லாமல் பகைமையை அறுத்து விட்டு விடுகின்றார்கள்.

பகைமை உணர்வுகள் யாருடைய பிடிப்பிலும் இல்லாததால் அனாதையாகி விடுகின்றது எது…? நாம் முதலில் சண்டை போட்டதெல்லாம் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு அனாதையாக இருக்கின்றது.

ஏகக் காலத்தில் நாம் எண்ணிய வலு என்ன செய்யும்?
1.ஒருவருக்கொருவர் சண்டை போட்ட பகைமையான உணர்வையெல்லாம் துரத்திக் கொண்டு ஓடும்.
2.செடிகள் இருக்கின்ற பக்கம் போகாது.
3.அது நேராக கடல் பக்கம் தான் போகும்.

கடல் பக்கம் யாரும் (உள்ளே) அதிகம் போவதில்லை. கடலில் அலைகள் எழும்பி வந்து இழுத்து இழுத்து உள்ளே போய்க் கொண்டே இருக்கும். அதற்குள் பகைமையான உணர்வுகள் சென்று (உப்பாக) ஐக்கியமாகிவிடும்.

அதாவது அதில் இருக்கின்ற நீரை உப்பாக மாற்றி விட்டு அடுத்து மீண்டும் நன்றாக மழையாகப் பெய்கின்றது.

மேலே ஆவியாகப் போகும் போது அதில் உள்ள (ஹைட்ரஜன்) உப்பைத் தனியாகப் பிரித்து விடுகின்றது. இதில் வெப்பத்தின் தன்மை ஆனவுடனே ஆவியாகப் போய்விடும்.

ஆவியாகப் போய் மழை மேகத்திற்குள் இந்த உப்பு மறுபடியும் பட்டவுடனே மழையாகப் பெய்யும். சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா…!

முதலில் உப்பைப் பிரிக்கின்றது. இருந்தாலும் மழையாகக் கொட்டப் போகும் போது இந்த கனம் தாங்காது அது கூடப் போனவுடனே இந்த உப்புச் சத்திற்கு மூல காரணமான ஹைட்ரஜனை இதற்குள் சேர்த்துவிடும்.

இதற்குள் இருக்கின்ற தீமையை பிரித்து விட்டு நல்ல தண்ணீராக விழுகும். மழை நீருடன் கலந்து வரும் அந்தச் சத்து (ஹைட்ரஜன்) செடிகளுக்குப் படுகின்றது.

மழை பெய்யும் பொழுது செடிகளை எல்லாம் பார்த்தால் ஜோராக இருக்கும். செடியின் சத்துக்குள் கலந்தவுடனே தீமைகள் எல்லாம் ஒடுங்கும். அன்றைக்கு நமக்குப் பார்த்தால்
1.அந்த மழையின் குளிரால் நமக்குள் வரும் உணர்வுகளை
2.உஹ்ஹ்ஹுஹூ… உஹ்ஹ்ஹுஹூ…! என்று எடுத்துப் பாருங்கள்
3.அந்த உணர்வுகள் அப்படியே உங்களுக்குள் இனிமையாகிறதைப் பார்க்கலாம்.

நம்மை அறியாமல் அந்த உணர்வுகள் ரம்மியமாக என்ன செய்கின்றது என்று இதெல்லாம் அனுபவத்தில் பார்க்கலாம். ஏனென்றால் குருநாதர் எனக்கு இயற்கையின் உண்மைகளை அது ஒவ்வொன்றையுமே அனுபவமாகத் தான் கொடுத்தார்.

உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் வரும் போதெல்லாம் நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள் என்றால்
1.அந்தச் சந்தர்ப்பம் சந்தித்த உணர்வுகள் உங்களை என்ன செய்கின்றது…?
2.அதிலிருந்து எப்படி மீள்வது…? மற்றவர்களையும் எப்படி மீட்பது என்ற
3.பேருண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply