“உங்களை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்…! என்று ஏன் சொல்கிறோம்…?

Trust begins from self

“உங்களை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்…! என்று ஏன் சொல்கிறோம்…? 

நான் (ஞானகுரு) கூடத்தான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று சொல்கின்றேன்.

அதனுடைய அர்த்தம் உபதேசிக்கும் இந்தச் சொல்லின் நிலைகள் தான் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பொருள். ஞானிகளைப் பற்றிய உபதேசத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால்தான் அது உதவியாக வரும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் நீங்கள் ஏங்கி எடுக்கும் பொழுது நான் கொடுத்த எண்ணங்களுக்கு வலுக் கூடுகின்றது. அப்பொழுது உங்களுக்கு உறுதுணையாக அது வரும்.

ஆனால் நான் காப்பாற்றிக் கொடுக்கிறேன் என்றால் நான் கடவுள் அல்ல.
1.நான் காப்பாற்றுகின்றேன் என்று சொன்னால்
2.நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள்.
3.சாமி (ஞானகுரு) நம்மை காப்பாற்றி விடுவார் என்று எண்ணுவீர்கள்.
4.நீங்கள் நல்ல மருந்தைச் சாப்பிட்டால் அது தான் உங்களைக் காக்கும்.

அது போல் நான் சொன்ன முறைப்படி மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்கள் உடலுக்குள் நீங்கள் உயிரான ஈசனிடம் ஏங்கி எண்ணிச் சேர்த்தால் தான் உங்கள் உடலில் உள்ள தீமைகள் அகலும்.

இது மிகவும் முக்கியம்.

உதாரணமாக வேதனையை நீக்க வேண்டுமென்றால் வேதனையை உருவாக்கித்தான் அந்த வேதைனையை நீக்க வேண்டும். அந்த மருந்து அதற்கு (நோய்க்கு) வேதனையை உருவாக்கும்.

வேதனை உருவாகும்போது உடலுக்குள் அந்த நோயான அணு உருவாகின்றது. இதை நல்லதாக்க வேண்டுமென்றால் விஞ்ஞான அறிவுப்படி நல்ல மருந்தைச் சேர்க்கின்றார்கள்.

நல்ல மருந்துடன் சேர்க்கப்பட்ட விஷம் உடலில் வேகமாக ஊடுருவி அலைய ஆரம்பித்துவிடும். அப்பொழுது நல்ல சத்தின் தன்மை வலு அதிகரிக்கப்படும்போது வேதனையால் உருவான அணுவிற்குள் போனவுடனே தேங்கி நின்று இதைச் சேமிக்க ஆரம்பிக்கின்றது.\

அதனால் நோயால் உருவான அணுக்களுக்கு வேதனை ஆகின்றது. மருந்து சாப்பிடும்பொழுது வேதனையைக் கலைத்து விட்டால் “அய்யோ…! அம்மா…! மேல் எல்லாம் கலையுதே…!” என்பார்கள்.

கலைந்த உணர்வின் தன்மை நீராக மாறி சிறுநீராகப் போகும். அல்லது அந்த உணர்வின் தன்மை சீதமாக வெளியே போகும். அப்பொழுது உடம்பெல்லாம் வலிக்கும்.

அந்த மருந்தின் தன்மை நோயின் உற்பத்தியைக் குறைக்கும். “அய்யய்யோ…! எனக்கு மருந்தைக் கொடுத்தார் இப்படி ஆகிவிட்டது..” என்று சொல்லிவிட்டு வேறு மருந்தைச் சாப்பிட்டால் என்ன ஆகும்?

இது இரண்டையும் ஏற்றுக் கொள்ளாத நிலைகளில் மீண்டும் கடுமையான நோயாக மாறும். விஷத்திற்கு இவ்வளவு பெரிய ஆற்றல்.

இந்தச் சாமியைக் கும்பிட்டேன். சாமியாரைப் போய் பார்த்தேன் வேறு மதத்திற்குப் போனேன் அதைச் செய்து பார்த்தேன் இதைச் செய்து பார்த்தேன் என்று சொல்லிக் கொண்டே போக வேண்டியது தான்.

1.உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்தாமல் (நம்பாமல்)
2.மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் அணுக்களாக மாற்றாமல்
3.எந்த ஒரு நிலையான நல்ல மாற்றத்தையும் நமக்குள் கொண்டு வர முடியாது.

வாழ்க்கையில் நாம் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

Leave a Reply